திரைப்படம் தயாரிப்பு என்பது ஒரு அபரிதமான
லாபத்தை தரக்கூடியது என்றாலும் எல்லோராலும் நல்ல லாபம் தரும் சினிமாவை தயாரிக்க
முடியவில்லை.
திரைப்பட துறையிலேயே இருக்கும் நடிகர் நடிகர்கள்
திரைப்படத்தை பற்றிய நெளிவு சுளிவுகள் தெரிந்திருந்தும் எல்லோராலும் ஒரு வெற்றிகரமான
தயாரிப்பை தர முடிவதில்லை. பல கோடிகளை செலவு செய்து கையை சுட்டு கொண்டவர்கள் தான்
ஏராளம்.
ஆனால் அதேசமயத்தில் திரைப்பட துறையை பற்றி ஓரளவு
தெரிந்தவர்கள் அவர்கள் அதே துறையை சார்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது வெளி நபர்களாக
இருக்கலாம், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்
அல்லது அதிக முதலீட்டில் அபரீதமான லாபம் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.
தொடர்ந்து வெற்றி படங்களை தயாரித்து கொண்டு இருக்கிறார்கள்.
திரைப்பட துறையில் திரைப்படம் எடுத்து லாபம் சம்பாதிப்பதர்க்கு
திறமை என்பது அவசியம் என்றாலும் அல்லது அவை தேவையே இல்லை என்றாலும் கிரகங்களின்
அனுசரணையும் வேண்டும்.
ஆம் ஒருவர் பிறந்த நேரத்தில் அமைய பெற்ற கிரகங்களின்
அடிப்படையில் அமைக்கபட்ட ஜாதகத்தின் அடிப்படையிலும், அன்றாடும் மாறுபடும்
கோள்களின் அடிப்படையிலும் ஒருவருக்கு திரைப்படம் தயாரிப்பு லாபத்தை தருமா என்பதை
கண்டுபிடிக்க முடியும்.
ஒருவருடைய ஜாதகத்தில் வித்யாகாரகன், மாதுர்காரகன்,
அசுர குரு, தனஸ்தானாதிபதி, லாபாதிபதி, இவைகள் நல்ல நிலைமையில் அமைய பெற்று, பாபர்களின்
சம்பந்தம் இல்லாமல், தொழில் ஸ்தானாதிபதியுடன் நல்ல உறவு கொண்டு இருக்கும்
பட்சத்தில் ஒருவர் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்.
ஜாதகத்தின் அடிப்படையிலும், நடப்பு கோள்களின்
அடிப்படையிலும் அவை சாதகமாக இருக்கும் பட்சத்தில் திரைபடங்கள் எடுத்து வெற்றி
பெற்று லாபம் சம்பாதிக்கலாம்.
அப்படி ஜாதகத்தில் உள்ள கிரக சூழ்நிலைகள்
மற்றும் நடப்பு கிரக சூழ்நிலைகள் சாதகமாக இல்லாத பட்சத்தில் சற்று ஒதுங்கி இருந்து
பிறகு சாதகமாக இருக்கும் பட்சத்தில் திரைபடங்கள் எடுத்து வெற்றி பெற்று லாபம்
சம்பாதிக்கலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள