Showing posts with label 2013 ஆண்டுக்கான எண்கணித(Numerology) பலன்கள்.. Show all posts
Showing posts with label 2013 ஆண்டுக்கான எண்கணித(Numerology) பலன்கள்.. Show all posts

2013 ஆண்டுக்கான எண்கணித(Numerology) பலன்கள்.

எண் 1 குண்டான 2013 ம் வருட பலன்கள் எப்படி இருக்கும்.

பிறந்த தேதி 1, 10, 19, 28 மற்றும் பிறந்த தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டினால் ஒற்றை பட இலக்கத்தில் ஒன்று என வரும் அன்பர்கள் அனைவரும் 1 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவருக்கும் இந்த 2013 ஆம் வருடம் எப்படி இருக்கும்?

வருட ஆரம்பத்தில் உங்கள் தொழில் மற்றும் வேளையில் சற்று சிக்கலான சூழ்நிலைகள் உருவாகலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையலாம். கடந்த வருடங்களில் முடிக்காமல் இழுபறியாக இருந்துவந்த சம்பவங்கள் இந்த வருடம் முடிவுக்கு வரலாம். புதியவர்களின் அறிமுகங்கள் உங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். பண புழக்கங்கள் தாராளமாக இந்த வருடம் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் முதலீடுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. பிரச்சனைகளுக்கு மற்றவர்களை கலந்து கொண்டு முடிவு எடுக்காமல் சுயமாக முடிவு எடுத்தால் நல்லதொரு முடிவு கிடைக்கும். 

எண் 2 குண்டான 2013 ம் வருட பலன்கள் எப்படி இருக்கும்.

பிறந்த தேதி 2, 11, 20, 29 மற்றும் பிறந்த தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டினால் ஒற்றை பட இலக்கத்தில் இரண்டு என வரும் அன்பர்கள் அனைவரும் 2 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவருக்கும் இந்த 2013 ஆம் வருடம் எப்படி இருக்கும்? 

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை மாறுபடும். கடந்த வருடங்களில் செய்த தவறுகளுக்கு இந்த வருடம் நல்லதொரு முடிவு கிடைக்கும். சமுக தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கடந்த கால கசப்பான நினைவுகள் மாறி சந்தோசம் நிலவும். பண புழக்கங்கள் மன மகிழ்வு தரும் விதத்தில் இந்த வருடம் இருக்கும்.வார்த்தைகளில் கவனம் தேவை. தேவை அற்ற வாக்குறுதிகள் கொடுக்காமல் இருப்பது நல்லது. நிலுவையில் இருந்த பணபிரச்சனைகள் முடிவுக்கு வரும். பண விசயங்களில் சரியாக கையாளாவிட்டால் பண பற்றாக்குறைக்கும் வாய்ப்பு உண்டு. கவனம் தேவை.              

எண் 3 குண்டான 2013 ம் வருட பலன்கள் எப்படி இருக்கும்.

பிறந்த தேதி 3, 12, 21, 30 மற்றும் பிறந்த தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டினால் ஒற்றை பட இலக்கத்தில் மூன்று என வரும் அன்பர்கள் அனைவரும் 3 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவருக்கும் இந்த 2013 ஆம் வருடம் எப்படி இருக்கும்? 

புதிய முயற்சிகள் தொடங்கும் போது கவனம் தேவை. பலன்கள் குறைவாக கிடைக்கிறது என்பதற்காக அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம். முடிவில் சில சமயங்களில் நல்லதொரு முடிவு கிடைக்கும். சில நேரங்களில் சில விசயங்களை காது கொடுத்து கேட்காமல் இருந்தால் பல பிரச்சனைகளுக்கு நல்ல முடிவு ஏற்படும்.

சில பழைய நண்பர்களும் உறவினர்களும் கஷ்ட நேரத்தில் கை கொடுக்கலாம். நல்லதும் கெட்டதும்  மாறி மாறி நடக்கும் வருடம் உங்களை பொருத்தவரை.  நல்லதையும் கேட்டதையும் ஒரே கண்ணோட்டத்தில் ஏற்று கொண்டீர்கள் என்றால் இந்த வருடத்தை சுகமாக கழிக்கலாம்.

எண் 4 குண்டான 2013 ம் வருட பலன்கள் எப்படி இருக்கும்.

பிறந்த தேதி 4, 13, 22, 31 மற்றும் பிறந்த தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டினால் ஒற்றை பட இலக்கத்தில் நான்கு என வரும் அன்பர்கள் அனைவரும் 4 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவருக்கும் இந்த 2013 ஆம் வருடம் எப்படி இருக்கும்?

தனிப்பட்ட வாழ்விலும் தொழிலும் வேலையிலும் 2013 ஆம் வருடம் புதியதோர் உற்சாகத்தை கொடுக்கும். உங்கள் முயற்சிகளுக்கு நல்லதொரு பலனை கொடுக்கும் வருடமாக அமையும். புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும். 

சென்ற வருடம் தொடங்கி பலன் தராத விசயங்கள் பாதியில் நிறுத்தி இருந்தால் இந்த வருடம் நம்பிக்கையுடன் தொடர்ந்தால் வெற்றி வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். உங்கள் வளர்ச்சிக்கு உதவக்கூடிய சிந்தனைகள் தோன்றினால் அலட்சியபடுதாமல் முயற்சி செய்தால் வரும் காலங்களில் வெற்றி காணலாம். 

வருவதை ஏற்று கொள்ள சில நேரங்களில் விட்டு கொடுத்து செல்வது உங்களுக்கு நன்மை பயக்கும். காதலர்கள் தங்களுடைய காதல் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தி திருமணத்தில் முடியலாம். பொறுமையுடன் எந்த காரியத்தையும் கையாண்டீர்கள் என்றால் இந்த வருடம் வெற்றி உறுதி எனலாம்.

எண் 5 குண்டான 2013 ம் வருட பலன்கள் எப்படி இருக்கும்.

பிறந்த தேதி 5, 14, 23 மற்றும் பிறந்த தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டினால் ஒற்றை பட இலக்கத்தில் ஐந்து வரும் அன்பர்கள் அனைவரும் 5 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவருக்கும் இந்த 2013 ஆம் வருடம் எப்படி இருக்கும்?

உறவினர்களிடதும், பணி செய்யும் இடத்திலும் மற்றவர்களை கையாளும் விதமும் அவர்களிடம் பழகும் விதமும் உங்களது வெற்றியை உறுதி செய்யும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும் வருடம் இது.  புது முயற்சிகள், ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்து வாழ்க்கை தரம் வசதி வாய்ப்புகளை மேம்படுத்தி கொள்வீர்கள் இந்த வருடத்தில். 

ஏமாற்றங்களை கண்டு  துவளாமல் இருந்தீர்கள் என்றால் நல்லது நடக்கும். மனது கவலை நிகழ்ச்சிகள் உங்களை துவள செய்யும். அந்த நேரங்களில் மனதை உற்சாக படுத்த நண்பர்களிடத்தும், குடும்ப உறுப்பினர்களிடத்து மனம் விட்டு பழகினால் உற்சாகமான சூழ்நிலை நிலவும். மற்றவர்களை அனுசரித்து செல்லும் மனப்பான்மையை வளர்த்துகொண்டீர்கள் என்றால் இந்த வருடம் நல்ல மகிழ்ச்சியை தரும் ஆண்டாக அமையும். 

கவலையும் மகிழ்ச்சியும் கலந்து நிலவும் வருடம் இது. வருட கடைசியில் காதல், கல்யாணம் போன்ற நிகழ்சிகள் நல்ல முடிவு கிடைக்கும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிரிந்த காதலர்கள் ஒன்று சேரலாம் இந்த வருடத்தில். மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்காமல் இருந்தால் சரியான முறையில் தொடர்பு கொண்டால் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். 

எண் 6 குண்டான 2013 ம் வருட பலன்கள் எப்படி இருக்கும்.

பிறந்த தேதி 6, 15, 24 மற்றும் பிறந்த தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டினால் ஒற்றை பட இலக்கத்தில் 6 வரும் அன்பர்கள் அனைவரும் 6 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவருக்கும் இந்த 2013 ஆம் வருடம் எப்படி இருக்கும்? 

இந்த 2013 ஆம் வருடம் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆண்டாகவே அமையும். கடந்த வருடங்களில் கனவாக  இருந்த காரியங்கள் இந்த வருடம் நனவாகி உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உறவினர்களிடத்து கோப தாபங்களை கட்டுபடுத்தினால் மகிழ்ச்சியான உறவு நீடிக்கும். மற்றவர்களுடன் நெருங்கி பழக தொடங்கினால் உறவுகள் மேம்படும். உறவுகளை மதிக்க கற்று கொண்டால் அன்பு மலர்ந்து மகிழ்ச்சி நிலவும். 

சென்ற வருட கவலைகள் தொல்லைகள் அகன்று நல்லதொரு முடிவு ஏற்படும். பொது ஜன தொடர்பு மற்றவர்களுடன் அதிகமாக தொடர்பு ஏற்படும் வருடம். தொழில் மற்றும் உத்தியோகத்தில் அதிகம் சிந்திக்காமல் சந்தேகப்படாமல் காலத்தை வீணாக்காமல் தொடங்கிய காரியங்களை நம்பிக்கையுடன் தொடர்ந்தீர்கள் என்றால் வெற்றி நிச்சயம். 

குடியிருப்பு மற்றும் தொழில் ஸ்தானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவீர்கள். சில நேரங்களில் உங்களை சுற்றி இருப்பவர்களின் நடவடிக்கையால் மன சோர்வு உண்டாகலாம். அவற்றை அறிவு பூர்வமாக சிந்தித்து உணர்ச்சிவச படாமல் இருந்தால் காரியங்களில் வெற்றி அடையலாம். 

எப்பொழுதும் ஆக்க பூர்வமாக positive thinking peoples சிந்திப்பவர்களுடன் நட்பு கொண்டு எதிர் மறையாக சிந்திப்பவர்களிடம் இருந்து விலகி இருந்தால்  உங்கள் கவலைகள்  விலகி சந்தோசம் நிலவும். இதை இந்த வருடம் சபதமாக ஏற்று கொண்டீர்கள் என்றால் என்றும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.

எண் 7 குண்டான 2013 ம் வருட பலன்கள் எப்படி இருக்கும்.

பிறந்த தேதி 7, 16, 25 மற்றும் பிறந்த தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டினால் ஒற்றை பட இலக்கத்தில் 7 என வரும் அன்பர்கள் அனைவரும் 7 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவருக்கும் இந்த 2013 ஆம் வருடம் எப்படி இருக்கும்?

திட்டமிட்டு எந்த காரியத்தையும் துவங்கி செய்தீர்கள் என்றால் 2013 ஆம் ஆண்டு மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமையும். உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும். காரியங்களை நிறைவேற்றுவதற்கு உறுதியான திட்டம் இருந்தால் இந்த வருடன் வெற்றி அடையலாம். 

எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டீர்கள் என்றால்தான் வெற்றி கிட்டும். உங்களை முதலில் நீங்கள் நம்ப வேண்டும். இந்த வருடம் கேளிக்கைகளை தவிர்த்து பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் எதிர் வரும் காலங்களுக்கு உறுதியான அஸ்திவாரமாக அமையும். 

விதிப்படி நடக்கட்டும் என்று ஒதுங்கி நிற்ப்பதை தவிர்த்தால் நல்லது. சென்ற வருடம் விட்டு போன காரியங்களை இந்த வருடம் சோம்பேறித்தனத்தை தவிர்த்து சுறுசுறுப்புடன் ஈடுபட்டீர்கள் என்றால் வெற்றி அடையலாம். 

வாழ்க்கை துணையுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படாமல் உங்களுடைய பேச்சும் செயலும் இருந்தால் கசப்பான விளைவுகளை தவிர்க்கலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் உறவுகள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள் உறவுகள் நல்லபடியாக அமையும். 

திட்டங்கள் சில சமயம் தோல்வி அடைவது போல் இருந்தாலும் அந்த தோல்வியும் உங்களது எதிர்கால வெற்றிக்கு ஒரு படிக்கல்லாகவே அமையும். உங்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களை அடையாளம் காட்டும் வருடம் இது. இந்த வருடம் வாய்ப்புகள் நிறைய வந்தாலும் அவற்றில் ஈடுபடுவதற்கு முன்பு யோசனை செய்து ஈடுபட்டால் காரியங்களில் வெற்றி கிட்டும். 

எண் 8 குண்டான 2013 ம் வருட பலன்கள் எப்படி இருக்கும்.

பிறந்த தேதி 8, 17, 26 மற்றும் பிறந்த தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டினால் ஒற்றை பட இலக்கத்தில் 8 என வரும் அன்பர்கள் அனைவரும் 8 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவருக்கும் இந்த 2013 ஆம் வருடம் எப்படி இருக்கும்?

உங்களுடைய உள்  மனது அடிக்கடி இப்போது இருக்கும் வாழ்க்கை முறையில் இருந்து மாறுபட வேண்டும் என உறுத்தி  கொண்டு இருக்கும். உள்  மனதிற்கு மதிப்பு கொடுத்து இந்த வருடம் மாறுதலை எதிர்பார்க்கலாம்.  இந்த வருடம் உங்களை பொறுத்தவரை பயணங்கள் நிறைந்த வருடமாக இருக்கும். பயணங்கள் உங்களது தொழில், வேலை, சொந்த காரணங்களுக்காக இருக்கலாம். அவசரப்படாமல் தீர ஆலோசனை செய்து எடுக்கும் எந்த முடிவும் இந்த வருடம் உங்களுக்கு வெற்றியை தரும். புது உறவுகள், புது நண்பர்கள் உருவாகும் வருடம் இது.   

பண விவகாரங்களில் சற்று கவனத்துடன் இருந்தால் அனாவசிய செலவுகளை தவிர்க்கலாம்.  காரியங்கள் சாதகமாக நடக்க வில்லை என்று அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து அவஸ்தை பட வேண்டாம். பொறுத்திருந்தால் நல்ல பலன்களை எதிர் பார்க்கலாம். 

எண் 9 குண்டான 2013 ம் வருட பலன்கள் எப்படி இருக்கும்.

பிறந்த தேதி 9, 18, 27 மற்றும் பிறந்த தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டினால் ஒற்றை பட இலக்கத்தில் 9 என  வரும் அன்பர்கள் அனைவரும் 9 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவருக்கும்  இந்த 2013 ஆம் வருடம் எப்படி இருக்கும்?

இந்த வருடம் திருமணம் ஆகாத ஆண்கள் பெண்கள் நல்லதொரு திருமண வாழ்க்கை அமையும் என எதிர் பார்க்கலாம். குடும்பத்தில் நடைபெறும் சுப காரியங்கள் மூலமாக உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடமும் நண்பர்களிடத்தும் மகிழ்ச்சியான பொழுது அமையும். சில தேவையற்ற நட்புகள் விலக கூடும். அதுவும் உங்களது நன்மைக்கே. அதே சமயத்தில் புது நட்புகளும் உறவுகளும் உருவாகும். வருட கடைசியில் குடும்பத்தில் குழந்தை பிறப்பின் மூலம் புது உறவு உதயமாகும்.  

இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.
Name
Email
Date of Birth:DD/MM/Year
Birth Place City/State/Country:
Birth Time AM/PM:
Presently Living:City/State/Country
Your Question(Type in the whitebox)