Showing posts with label 2013 ம் வருடம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?. Show all posts
Showing posts with label 2013 ம் வருடம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?. Show all posts

2013 ம் வருடம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?


பொதுவாக புத்தாண்டு பலன்கள் ஒருவரது ராசியின் அடிப்படையில் கணிக்கபடுகிறது. கீழே கூறப்பட்டுள்ள பலன்கள் ஒருவருடைய பிறவி ஜாதகத்தில் அமைந்த கிரகங்களின் அடிப்படையில் மாறுபடும். ராசியின் அடிப்படையில் சொல்லப்பட்டு இருக்கும்  பலன்கள் ஜாதகத்தின் அடிப்படையில் கிரகங்கள் வலுவாக இருந்தால் கீழே சொல்லப்பட்டுள்ள பலன்கள் மாறுபடும். அதனால் பலன்கள் சாதகமாக இல்லை என்று யாரும் வருத்த பட வேண்டியதில்லை.  ஜாதகம் வலுவாக இருந்தால் ஜாதகத்தின் அடிப்படையில்தான் காரியங்கள் நடக்கும்.    

மேஷ ராசி நேயர்களுக்கு இந்த புத்தாண்டு 2013 எப்படி இருக்கும்?

உங்கள் உள்ளத்தில் நினைத்ததெல்லாம் நடத்தி காட்டிட போகும் வருடமாக இந்த வருடம் அமைய போகிறது. மற்றவர்கள் பேச்சிலும் செயலிலும் இதுவரை துவண்டு போய் இருந்த நீங்கள் இனி புது உத்வேகம் பெற்று உற்சாகத்துடன் விளங்க போகிறீர்கள்.

பண புழக்கத்தை பொறுத்தவரை திருப்தியான விதத்தில் இருக்கும். கடன், நோய் எதிரிகளை பொறுத்தவரை உங்கள்  கட்டுப்பாட்டில் இருக்கும் ஆண்டாக 2013 ம் வருடம் இருக்கும்.

கிரகங்களின் பார்வை சாதகமாக இருப்பதால் சகோதர வழி உதவிகள் இருக்கும். உங்களை இதுவரை தவறாக புரிந்து கொண்டு இருந்த உங்கள் சகோதரர்கள் உங்களுடைய உண்மை மன நிலைமையை புரிந்து உங்களுடன் சேர்ந்து துணை நிற்ப்பர்.

உத்தியோகம், தொழில் இவற்றில் மன அமைதியும் சந்தோசமும் கிடைக்கும். வேலைக்கு நீண்ட நாள் முயற்சி செய்து வந்தவர்களுக்கு இந்த வருடம் புதிய வேலை அமைந்து மகிழ்ச்சியை தரும்.

மனைவி அல்லது கணவன் வகையில், தந்தையர் வகையில் லாபங்கள் குமியும். முருகன் வழிபாடு உங்களுக்கு தொல்லைகள் வரும்போது அரண் போல் காக்கும்.

ரிஷப ராசி நேயர்களுக்கு இந்த புத்தாண்டு 2013 எப்படி இருக்கும்?

வாழ்க்கையின் அணைத்து வசதி வாய்ப்புகளையும் இந்த புத்தாண்டு உங்களுக்கு அளிக்க போகிறது. கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் ஈடுபடும் காரியங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
குழந்தைகளினால் அவர்கள் செய்கையினால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

கணவன் மனைவி உறவு சந்தோசமான சூழ்நிலையினை உருவாக்கும். பிரிந்து இருந்த கணவன் மனைவி உறவு மேம்படும். திருமணமாகாத இளம் வயதினருக்கு அவர்கள் எண்ணப்படி நல்லதொரு வாழ்வு அமையும்.

தந்தையார் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தேக்க நிலை மாறி சாதகமான நிலை உருவாகும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு,  வியாபார வாய்ப்பு, வெளிநாட்டு பயணங்கள் சிறப்பாக அமையும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருந்த தேக்க நிலை மாறும். நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். கடன்களில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம். வெள்ளிக்கிழமை நவ கிரக வழிபாடு நிவாரணம் தரும்.

   மிதுன ராசி நேயர்களை பொறுத்தவரை பண தேவைகள் பூர்த்தியாகும் வருடம் இது என்று சொல்லலாம். நீண்ட காலமாக தடையாக இருந்த காரியங்கள் நடந்து மனதிற்கு மகிழ்ச்சி தரும். உங்களுடைய பிறவி ஜாதகத்தில் வித்யாகாரகனும் காலத்திற காரகனும் சேர்ந்து இருந்தால் யோகம் ஏற்பட்டு தொழில், வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என கூறலாம்.

பண தேவையும் பூர்த்தியாகும். புதியதாக வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும், வீடு கட்டும் யோகமும் உண்டாகலாம். நீண்ட நாள் நோய் நொடியில் வாடியவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் தாயாரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தென்படும். தடைகள் தாமதங்கள் வம்பு வழக்குகள் நல்லதொரு முடிவுக்கு வரும். பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்கள் வாங்குவதும், பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டிற்கு குடியேறுவதும் நடை பெறலாம்.

நல்ல காரியங்களுக்கு நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அவை திருமண செலவாகவோ அல்லது கோயில் சீரமைப்பாகவோ இருக்கலாம். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி கிடைக்கும். குழந்தை பேறும் உண்டாகலாம். முன்னோர்கள் ஆசி கிட்டும். எதிர் பாராத பண வரவு திடீர் என்று கிடைக்கும்.

நீண்ட நாள் திருமண தடைகள் அகலும். பிரிந்து இருந்த கணவன் மனைவியர் மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பு இருக்கிறது. கருத்து வேறுபாடுகள் அகலும். வெளி நாட்டு வேலை வாய்ப்புகள், வெளி நாட்டு வியாபார தொடர்புகள் நல்ல விதமாக அமையும்.

சிலருக்கு வெளி நாட்டு  பயணங்களும் அமையும். கூட்டு தொழில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை நிலவும். தந்தையின் ஆதரவுடன் சில காரியங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். தந்தையின் ஆதரவு மன மகிழ்ச்சியை தரும். விஷ்ணு வழிபாடு எப்போதும் உங்களுக்கு நன்மை தரும்.

கடக ராசி நேயர்களுக்கு இந்த 2013 ஆம் ஆண்டு புத்தாண்டில் என்ன பலன் கிடைக்கும்?
பெரிய மனிதர்களின் உதவியுடன் பிரச்சனைகளை தீர்த்து கொள்வீர்கள். தொழில், வேலையில்  இருந்த தேக்க நிலைகள் மாறி   உங்களுக்கு சாதகமாக இந்த வருடம் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். கடன்களை சமாளிக்க அடகில் இருந்த நகைகளை மீட்டும் வாய்ப்பு உருவாகும்.

உடன் பிறப்புகளிடம் இருந்த கருத்து வேற்றுமைகள் அகன்று சுமுக உறவு நிலவும். வீடு வாகனங்கள் வாங்கும் ஆசை நிறைவேறும். . தாயாரிடம் இருந்த கருத்து வேற்றுமை அகலும். உடல் நலத்தில் நல்ல கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்படும். மறைமுக எதிரிகள் அகல்வர்.

கடன்கள் ஒளிந்து மகிழ்ச்சி பிறக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலைமை உருவாகும். பூர்வீக சொத்துக்களில் சாதகமான நிலைமை உருவாகும். தந்தையின் ஆதரவோடு காரியங்களில் வெற்றி உண்டாகும். தந்தையின் ஆதரவு பெரும் உதவியாக இருக்கும். அம்பிகை வழிபாடும் பௌர்ணமி அன்று குல தெய்வ வழிபாடும் பல நல்ல மாற்றங்களை தரும்.

சிம்ம ராசி காரர்களுக்கு 2013 ஆம் வருடம் என்ன பலன் தரும்.

தொழிலில் வேலையில்  நல்ல முன்னேற்றம் ஏற்படும் வருடம் இது. பிள்ளைகள் வழியில் சில தொல்லைகள் ஏற்பட்டு பின்பு நல்லபடியாக நடக்கும்.   நன்கு யோசனை செய்து நல்லதொரு முடிவு எடுக்க வேண்டும். வழக்குகளில் இழுபறியான நிலைமை நிலைமை உண்டாகும்.

சகோதரர்களின் துணையுடன் காரியங்கள் நடந்தேறும். புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகலாம் அல்லது அமைவதற்கு உண்டான முயற்சிகளை எடுப்பீர்கள். ஆன்மீக உணர்வுகள் அதிகரிக்கும். கோயில் வழிபாடுகள் அதிகரிக்கும்.

தாயாரின் அன்பு மேலோங்கும். நல்ல சுமுக நிலை
தாயாரிடத்தில் உருவாகும். வண்டி வாகனங்கள் நகைகள் வாங்கும் யோகம் இந்த வருடம் நிறைய உண்டு. பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டு.

கணவன் மனைவியிரடையே நல்லதொரு சுமுக நிலைமை ஏற்படும். பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர். சிவன் கோயில் வழிபாடு உங்கள் எண்ணங்களை பூர்த்தி செய்யும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த 2013 ஆம் வருடம் எப்படி இருக்கும்?

பண வரவு அதிகமாக இருக்கும் அதே வேளையில் அனாவசியமான செலவுகளும் தலை தூக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே முக்கியமாக தம்பதியர் களுக்கு இடையே கருத்து வேற்றுமை உருவாகலாம். புத்தி சாலித்தனமாக அணுகினால் நிலமையை சமாளிக்கலாம். கல்விகளில் ஈடுபாடு அதிகமாகும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவார். படிப்பில் இருந்த மந்த நிலைமை மாறும்.

அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்லதொரு வேலை வாய்ப்பு அமையும். அரசு தொடர்பான  வேலைகள்  செய்து தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு வருடமாகும் இது.

வண்டி வாகனங்கள் வீடு வாய்ப்புகள் அமையும் யோகம் இந்த வருடம் உண்டு.
கூட்டாளிகளிடையே இருந்த பிரச்சனைகள் அகன்று நல்லதொரு சுமுகமான நிலைமை உருவாகும். வெளி நாடு வேலை வாய்ப்புகள் உருவாகும். வெளி நாட்டு தொடர்புகள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். உங்களுடைய பேச்சுக்கு சமுகத்தில் நல்ல மதிப்பு உருவாகும். கடன்கள் நல்லதொரு முடிவு ஏற்படும். பெருமாள் வழிபாடு உங்களுக்கு நலம் தரும். 

துலாம் ராசிக்காரகளுக்கு 2013 ஆம் வருட பலன்கள் எப்படி இருக்கும்?
முடிவு எடுப்பதில் சற்று கவனம் தேவை. குடும்பத்தில் சுமுகமான நிலைமை ஏற்படும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். பழைய பொருட்களை கொடுத்து புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் தலை தூக்கும். நீண்ட நாள் தொலைத்த தூக்கத்தை மறுபடியும் பெறுவீர்கள்.

பயணங்களினால் உங்கள் வேலை மற்றும் தொழிலில் பயன் அடைவீர்கள். தடையாக இதுவரை இருந்த

சுப காரியங்கள் நல்ல படியாக நடக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த இழுபறி நிலைமை உங்களுக்கு சாதகமாக மாறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உருவாகும் நிலைமை உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு மாறும். பய உணர்வு நீங்கி தைரியம் அதிகரிக்கும். வெள்ளிகிழமை தோறும் நவகிரஹ வழிபாடு நல்லதொரு மாற்றத்தை கொடுக்கும்.
    

    2013 ஆம் வருட பலன் விருச்சிக  ராசி காரர்களுக்கு.
சந்தோசங்களும் சகல பாக்கியங்களும் அமைய போகும் வருடம் இது என கூறலாம். கணவன் மனைவி உறவுகள் சுமுகமாக இருக்கும். பயம் தெளிந்து தைரியம் கூடும். இளைய சகோதர வழியில் சகாயம் உண்டு.

தொடங்கும் காரியங்களில் செய்யும் தொழில் நல்ல லாபம் கிடைக்கும் அமைப்பு இந்த வருடம் இருக்கிறது. விரயங்கள் அதிகம் உண்டாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவைகளை கல்யாணம், ஆபரணங்கள் வாங்குவது போன்ற சுப விரயங்கலாக மாற்றி கொள்ளலாம்.

குடும்பத்தில் குதுகூலங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி நிலவும். தன வரவு எதிர்பார்த்த அளவு இருக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். புதிய வீடு, வீடு கட்ட இடம் வாங்குவது போன்ற சுப காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய வாகனங்களை கொடுத்து புது வாகனங்கள் வாங்குவதும் அல்லது புதியதாக வாகனங்கள் வாங்குவதும் இந்த ஆண்டில் நடைபெறும்.

பயணங்கள் அதிகரிக்கலாம். உள்நாடு வெளிநாடு என்று பயணங்கள் இருக்கும். நல்லதொரு தூக்கமும் தாம்பத்ய உறவும் உண்டாகும். முருகன் வழிபாடு நலம் தரும்.  

தனுசு ராசி நேயர்களுக்கு 2013 ஆம் ஆண்டின் புத்தாண்டு பலன்கள்.
அரசு வழி ஆதாயங்கள் நிறைய உண்டாகும் வருடம் இது. அரசு வழி ஆதாயங்கள் தொழிலிலும் புதிய வேலை வாய்ப்பிலும் உண்டாகலாம். கல்வி தடைகள் அகன்று படிப்பில் கவனம் அதிகம் செலுத்தும் வாய்ப்பு உண்டு.

கடன் பிரச்சனைகள் சுமுகமாக முடியும். நோய்கள் கட்டுக்கு அடங்கி இருக்கும். நீண்ட நாளாக தீராத நோய்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். குடும்பத்தில் நல்ல சுமுகமான சூழ்நிலை நிலவும். பண வரவு திருப்தி கரமாக அமையும். திருமண விசயங்கள் தடையின்றி நல்ல முடிவுக்கு வரும்.

தொழில், வேலை இவற்றில் திருப்திகரமான சூழ்நிலை நிலவும். புதிய தொழில் புதிய வேலை வாய்ப்புகள் அமையும். மகிழ்ச்சி தரும் பயணங்கள் அமையும். அவை தொழிலுக்கும், வேலைக்கும் மிகுந்த பயன் உள்ளவையாக இருக்கும். வியாழக்கிழமை அன்று தட்சினாமுர்த்தி வழிபாடு நன்மை தரும்.

மகர ராசி காரர்களுக்கு இந்த 2013 ஆம் புத்தாண்டு எந்த விதத்தில் பயன் அளிக்க போகிறது?

தந்தையின் ஆதரவுடன் காரியங்களை உங்களுக்கு சாதகமாக்கி கொள்ள போகறீர்கள். இழு பரியாக இருந்து வந்த பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு சாதகமான நிலமையை உருவாக்கி தரும்.

தொழிலில் நல்லதொரு லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு வித்திடுவீர்கள். உத்தியோகத்தில் வரவேண்டிய நிலுவை தொகைகள் வந்து சேரும். சுப காரியங்களுக்காக பயணங்கள் அமையும். அவை தொழில் மற்றும் வேலை விசயங்களுக்கு லாபம் தரும் விதமாக அமையும். பெண்கள் வழியில் சில தொல்லைகள் உருவாகலாம். நோய்களுக்கு உண்டான அறிகுறிகள் தோன்றும் போதே முறையான வைத்தியம் மேற்கொள்வது நல்லது. சனி கிழமைகளில் நவ கிரக தரிசனங்கள் நல்லதொரு வழியை ஏற்படுத்தும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு 2013 ஆம் ஆண்டு பலன்கள்.

ரகசியங்களை மனம் விட்டு பேசாமல் ரகசியமாக செயல் பட்டால் பல தொல்லைகளில் இருந்து விடுபடலாம். அதன் மூலம் எதிரிகள் உருவாகுவதை தடுக்கலாம்.

கல்வியில் இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். படிப்பில் கவனம் அதிகரிக்கும். அரசு வழி ஆதாயங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அரசை சார்ந்து ஒப்பந்த அடிப்படையில் தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் நல்லபடியாக அமையும்.

அரசு வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். போட்டி தேர்வுகளில் பங்கு கொள்ள உரிய பயிற்சி எடுத்து கொண்டால் அரசு வேலை அமையும் வாய்ப்பு இருக்கிறது. பயம் நீங்கி தைரியம் தலை தூக்கும். சகோதர வழி உதவிகள் கிட்டும்.

தொழிலில் செய்யும் வேளையில் நல்ல மாற்றங்கள் தென்படும். பூர்வீக சொத்துக்களை அடைவதில் பிரச்சனைகள் உருவாகலாம். நீண்ட நாட்களாக கவலையை கொடுத்து வந்த வியாதி நல்ல விதத்தில் குணமாகும். மங்களகரமான காரியங்களுக்கு பணம் செலவாகும். பயணங்கள் தொழில் மற்றும் வேலையில் மாற்றத்தை தரும்.

உள்ளூர் பயணங்களும் வெளியூர் பயணங்களும் வெளிநாட்டு பயணங்களும் ஆதாயத்தை உண்டாக்கும். தொழிலில் கணிசமான லாபம் பெருகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற்று கூடுதல் சம்பளம் கிடைக்கும். வர வேண்டிய நிலுவை தொகைகள் வசூலாகும். தந்தையாரின் ஆதரவு பலன் தரும். சனி கிழமைகளில் சனீச்வர வழிபாடு நன்மையை தரும்.


மீன ராசிக்காரர்களுக்கு 2013 ஆம் வருட புத்தாண்டு பலன்கள்.
திருமண தடைகள் அகன்று திருமணம் ஆகாத இள வயதினருக்கு திருமணம் நடக்கும். கணவன் மனைவியர் இடையே சுமுகமான உறவு  நீடிக்கும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவர்.

பூர்வ புண்ணிய சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். செய்யும் தொழிலும் வேலையிலும்  நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தென்படும். உழைப்பிற்கு ஏற்ற ஓய்வு தூக்கம் கிடைக்கும்.

பயணங்கள் அதிகரிக்கும். அவை உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். வேலையில்  இருப்பவர்கள் மாறுதலை எதிர்பார்க்கலாம். வெள்ளி மற்றும் சனியன்று நவகிரஹ வழிபாடு நலவழியினை ஏற்படுத்தி தரும்.  


இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.
Name
Email
Date of Birth:DD/MM/Year
Birth Place City/State/Country:
Birth Time AM/PM:
Presently Living:City/State/Country
Your Question(Type in the whitebox)