யாருக்கு திருமண வாழ்வு மகிழ்ச்சியுடன் இருக்கும்?

திருமணம்  என்பதே ஒவ்வொருவரின் வாழ்வில் மகிழ்ச்சியை தரக்கூடிய நிகழ்வாகும். இந்த மகிழ்ச்சி என்பது ஒரு சில நாட்களுக்கு அல்லது ஒரு சில மாதங்களுக்கு அல்லது ஒரு சில வருடங்களுக்கு மட்டும் மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருந்தால் அது பலன் இல்லை.

பல வருடங்கள் நீடித்து நிற்கும் திருமண பந்தங்கள்தான் உண்மையான மகிழ்ச்சியை தரும் திருமண வாழ்க்கையாக இருக்கும்.

நம் தாய் தந்தையர் மற்றும் அவர்களுடைய சொந்தங்கள் எல்லாம் பெரும்பாலும் நல்லதொரு மன வாழ்க்கை அமைய பெற்று நம்முடைய சந்ததிகளுக்கும் ஒரு முன் உதாரணமாக இருக்கிறார்கள்.

பல தம்பதிகள் 60 ஆம் கல்யாணம் 80 ஆம் கல்யாணம் என்று
கொண்டாடி கொண்டும் இருக்கின்றனர்.

மாயவரம் அருகில் உள்ள திருக்கடையூர் என்ற புனிததலத்தில் நடக்கும்
60 ஆம் கல்யாணங்களும் 80 ஆம் கல்யாணங்களும் இதற்க்கு நல்லதொரு உதாரணம்.
 
திருமணம் என்பதே ஆயிரம் காலத்து பயிர் என்ற பல மொழி உண்டு. இந்த தலைமுறை மட்டும் அன்றி வரபோகும் தலைமுறைகளுக்கும் ஒரு நல்ல அஸ்திவாரம் ஆகும்.

சரி, ஒருவருடைய திருமண வாழ்க்கை நல்லதொரு திருமண வாழ்க்கையாக அமைய ஜோதிட ரீதியாக ஜாதக ரீதியாக என்ன பலன்?

ஒரு மனிதருடைய வாழ்க்கை எப்படி அமைய வேண்டும், எப்படி அமையும்
என்பதை அவன் பிறக்கும் போதே கிரகங்களின் பலத்தை கொண்டு, கிரகங்களின் சுபாவத்தை கொண்டு  நிர்ணயிக்க பட்டு விடுகின்றன. அதன் பிரகாரம் ஒருவருடைய வாழ்க்கையின் முக்கிய அம்சங்களான குடும்பம், பண வரவு, வேலை வாய்ப்பு  படிப்பு, குழந்தை செல்வம், திருமணம், சொத்து போன்றவை எப்படி அமையும் என்று நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன.

எனவே ஒருவருக்கு அமைய இருக்கும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடனும்
சந்தோசமாகவும் அமையுமா என்பதற்கு அவருடைய ஜாதகத்தில் உள்ள சில
கிரக நிலைகளை வைத்து தீர்மானித்து கொள்ளலாம்.

நல்ல நிலைமையில் கிரகங்கள் அமைந்தால் நல்லதொரு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும் என்று சொல்லலாம், சந்தோசபடலாம்.

அப்படி இல்லாத பட்சத்தில் அதற்காக கவலை பட வேண்டிய அவசியமும் இல்லை. விதியை மதியால் வெல்லலாம்.  மழை  பெய்ய வேண்டும் என்பது விதி அந்த மழையில் நனையாமல் குடை பிடித்து செல்லலாம் என்பது மதி.

உரிய  தெய்வத்தின் துணையை நாடி அந்த குறையை சரி செய்து கொள்ளலாம். எந்த தெய்வத்தின் துணையை நாடலாம் என்பதை அவர் அவர்கள் கிரக நிலைகளின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். அப்படி தீர்மானித்தால் தீர்மானித்தால் எந்த ஒரு திருமணமும் மகிழ்ச்சியான திருமணம் என்பதில் சந்தேகம் இல்லை.
    
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள