தாம்பத்திய சுகத்தினால் மகிழ்ச்சியின்மை யாருக்கு?

இல்லறத்திலேயே மிகவும் முக்கியம் கணவன் மனைவி அன்யோன்யம். கணவன் மனைவி அன்யோன்யம் இல்லையென்றால் அது பலவித பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

கணவன் மனைவி அன்யோன்யத்தில் தாம்பத்திய சுகம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த தாம்பத்திய சுகம் என்பது ஒரு குடும்பத்தை வாழவும் வைக்கும் அதே சமயத்தில் நாசமும் ஆக்கி விடும்.

ஒரு ஆணுக்கு கட்டிய மனைவியிடம் சரியான தாம்பத்திய சுகம் கிடைக்க பெறாத பட்சத்தில் வேறு ஒரு பெண்ணை நாடுகின்றார். அல்லது தகாத உறவு  அதனால் இவருடைய குடும்பத்தில் கணவன் மனைவியிரிடம் பிரச்சனை, வாக்குவாதம், அவமானம்.

அதே போன்று ஒரு பெண்ணும் கட்டிய கணவனிடத்தில் சரியான தாம்பத்திய சுகம் கிடைக்காத பட்சத்தில் வேறு ஒரு ஆணுடன் தொடர்பு அல்லது தகாத உறவு. அதனால் பல பிரச்சனைகள், உயிர் பலி.
இதை விட பெரிய கொடுமை திருமணம் ஆகி முதல் இரவில் ஆசையுடன் எதிர்பார்த்து மன வாழ்க்கையை தொடங்க இருக்கும் பெண்ணுக்கு அதிர்ச்சி தரும் செய்தி என்ன வென்றால் அவளுடைய கணவனால் போதிய சுகத்தை தரமுடியாத நிலை அல்லது ஆண்மையே இல்லாத கணவனை திருமணம் செய்து கொண்ட நிலை.

அதே போன்று திருமண முதல் இரவில் ஆசையுடன் காத்திருக்கும் ஆணுக்கு அதிர்ச்சி தரும் செய்தி தாம்பதியசுகம் என்றாலே பயந்து நடுங்கும் மனைவி அல்லது தாம்பத்திய சுகத்தினை ஏற்காத அளவிற்கு மனைவிக்கு நோய்.  

யாரை குறை சொல்வது? பெண்ணை பெற்றவர்களையா? அல்லது பையனை பெற்றவர்களையா?     

தாம்பத்திய சுகம் அளிக்க முடியாத ஒரு பெண்ணையோ பையனையோ திருமணம் செய்து கொடுத்தால் அது ஒருவருடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்திருந்தும் சில பெரியவர்கள் சில பெண்களுடைய வாழ்க்கையிலும் பையனுடைய வாழ்க்கையிலும் தவறு ஏற்படுத்தி விடுகிறார்கள்.

இன்னும் சில இடத்தில் பார்த்தால் நோய் வாய் பட்ட ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ, உண்மையை மறைத்து திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். விளைவு அந்த ஆணினாலோ அல்லது அந்த பெண்ணால்  தாம்பத்திய சுகம் தரமுடியாத சூழ்நிலை.

சில தருணங்களில் உயிர் கொல்லி நோயான aids போன்ற வியாதிகளை கூட மறைத்து திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்  

நோய்வாய் பட்டிருந்தால் உரிய சிகிச்சை மேற்கொண்டு அவரால் நல்ல தாம்பத்தியத்தில் ஈடுபட முடியும் என்பதை மருத்துவ ரீதியாக உறுதி செய்து கொண்டு அதன் பின்பு திருமணம் செய்து வைத்தால் வேண்டத்தகாத பின் விளைவுகளை தவிர்க்கலாமே?

ஜோதிட ரீதியாக ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தாம்பத்திய சுகத்தில் பிரச்னை இருக்காது என்பதை கண்டறிய முடியுமா? முடியும்.
இது போன்ற வேண்டத்தகாத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டாம் என்றுதான் இன்றும் சில கல்யாணங்கள் ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமண பொருத்தம் மட்டும் பார்ப்பது சரியாக வராது. திருமண பொருத்தமும் ஜாதக பொருத்தமும் ஒரு சேர பார்க்கும் திருமணங்களில் இது போன்ற பிரச்னை வருவதற்கு வாய்ப்பில்லை.

ஒருவருக்கு என்ன கல்வி அமைய வேண்டும்? எப்படி பட்ட வேலை அல்லது தொழில் அமைந்தால் நல்லது? குழந்தை பாக்கியம் இல்லை ஏன்? வீடு கட்ட முடியுமா? வெளிநாடு செல்ல முடியுமா? என்ன தொழில் செய்யலாம்? என்ன வேலை கிடைக்கும்? அரசு வேலை கிடைக்குமா? எப்படிப்பட்ட மனைவி அமைவார்? போன்ற பல விசயங்களை தெரிவிக்கும் ஒருவருடைய பிறந்த நேரத்தில் அமைந்த கிரகங்கள், ஒருவருக்கு திருமணம் ஆனால் அவருக்கு திருப்தி தரும் தாம்பத்திய சுகம் அவர் திருமணம் செய்து கொள்ள போகும் ஆண் மூலமாகவோ அல்லது பெண் மூலமாகவோ கிடைக்குமா என்பதை கண்டிப்பாக தெரிவிக்கும்.


எனவே தாம்பத்திய சுகத்தின் மூலமாக கிடைக்கும் சுகத்தை பற்றி ஒருவரது ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் அடிப்படையில், கிரக நிலைகள், கூட்டணி, பார்வை போன்றவற்றின் அடிப்படையில் கண்டு அறிந்து அதற்கேற்ப திருமணம் செய்து வைத்தால் அந்த திருமணம் நிச்சயம் ஒரு மகிழ்ச்சி தரும் திருமணம் என்பதில் சந்தேகம் இல்லை. தம்பதியரிடத்து நல்லதொரு அன்யோன்யம் உண்டாகும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள