சொந்த வீடு யாருக்கு அமையும்?

சொந்த வீடு வாங்க வேண்டும், அல்லது காலி மனை வாங்கி அதில் வீடு கட்டி குடியேற வேண்டும். இது நியாயமான பெரும்பாலோனரின் ஆசை.

காரணம் வாடகை வீட்டில் குடியிருந்து பல வித கஷ்டங்களையும், இன்னல்களையும் அனுபவித்து எப்போது நமக்கு இந்த தொல்லையில் இருந்து விமோசனம் பிறக்கும் என்று ஏங்கி கொண்டு இருப்பவர்கள் பலர்.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் தன்னுடைய சுய சம்பாதியத்தில் வீடு வாங்குவது ஒரு ரகம்.

அடுத்து கடன் வாங்கி வீடு கட்டுவது இன்னொரு ரகம்.

மூன்றாவதாக மூதாதையர் மூலம் வாரிசு அடிப்படையில் சொந்த வீடு அமைவது.

ஒருவர் தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் வீடு வாங்கினாலும், கடன் வாங்கி வீடு வாங்கினாலும், மூதாதையர் சொத்து மூலம் வீடு கிடைக்கும் அமைப்பு இருந்தாலும் சொந்த வீட்டில் குடியிருக்கும் பாக்கியம் வேண்டும்.

ஏனென்றால் எத்தனையோ பேர் சொந்த வீடு இருந்தும் அதில் குடியிருக்க முடியாமல் வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலையில் உள்ளனர்.

அதுபோன்று கடன் வாங்கி வீடு கட்டினாலும் அந்த வீட்டை கடன் பிரச்னை தாங்காமல் விற்று விடும் நிலைமையில் எத்தனையோ பேர் இருக்கின்றனர்.

பூர்வீக சொத்தின் அடிப்படையில் வீடு இருந்தும் அதில் குடியிருக்க முடியாமல் தவிப்பவர்கள் எத்தனையோ பேர். காரணம் கோர்ட், கேஸ் போன்றவைகள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது சொந்த வீட்டில் குடியிருந்து கடைசிவரை அனுபவிப்பதற்கும்  யோகம் வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் தலை கீழாக  நின்றாலும் சொந்த வீடு அமையாது. அப்படியே அமைந்தாலும் அந்த வீட்டில் குடியிருக்க முடியாத சூழ்நிலை உருவாகும் இல்லையென்றால் அந்த வீட்டை  விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

சரி. ஜோதிட ரீதியாக இதற்கு என்ன தீர்வு?

ஒருவருக்கு சொந்த வீடு அமைய வேண்டும் என்றாலும், அந்த சொந்த வீட்டிலேயே   காலம் பூராவும் குடியிருக்க வேண்டிய யோகம் வேண்டும் என்றாலும் அவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் அமைந்த கிரகங்களின் அடிப்படையிலும் சுகஸ்தானம் என்று சொல்லப்படும் அமைப்பும், பஞ்சமா ஸ்தானம்,  பாக்கியஸ்தானம் மற்றும் லக்கினாதிபதி அது போன்று இன்னும்   வேறு சில அமைப்புகளும் அமர்வு, பார்வை, சேர்க்கை போன்றவற்றால்  பாதிக்கப்பட கூடாது.

அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு சொந்தவீடு வாங்கி அதில் குடியிருக்கும் யோகம் உண்டென்று சொல்லலாம்.           


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள