"குழல் இனிது யாழ் இனிது அவர்தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்"
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள
குழந்தையின் மழலை சொல்லின் இனிமையை அனுபவிக்காதவர்கல்தான் குழலினுடைய
இசையையும் யாழினுடைய இசையையும் வியந்து பேசுவார்களாம்.
பொதுவாக திருமணமான தம்பதியர் இருவருமே பெரிதும் எதிர்பார்ப்பது தங்கள்
குடும்பத்தில் புதிதாக இணையபோகும் குழந்தையின் வரவைத்தான்.
இவர்களை தவிர பெண்ணை பெற்ற தாயாரும் தந்தையாரும், பையனை பெற்ற தந்தையும்,
தாயாரும் பெரிதும் எதிர்பார்ப்பது அவர்களை தாத்தா
பாட்டி என்று பேரனோ பேத்தியோ கூப்பிடும் நாளை எதிர்பார்த்துதான்.
ஆனால் ஒரு சில கல்யாணம் தம்பதியர் மிகவும் கவலை படும் விஷயம் இந்த
குழந்தையின்மைதான்.
ஆம் திருமணமாகி நாட்கள் பல கடந்து குழந்தை இல்லை என்று கவலைபடுபவர்கள் நிறைய
பேர்.
ஜோதிட ரீதியாக இதற்க்கு காரணம் என்ன?
ஒருவர் பிறக்கும்போது அமைந்த கிரகங்களின் அடிப்படையில்தான் மனித வாழ்க்கையின்
சுக துக்கங்கள் நிர்ணயிக்கபடுகின்றன. கிரகங்களின் வேகம், தன்மை போன்றவற்றை வைத்து
ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையின் தன்மைகள் நன்மையாகவோ தீமையாகவோ நடைபெறுகின்றது.
மனித வாழ்க்கையின் அம்சங்கள் என்பது குடும்பம், பணவரவு, பேச்சு, சொல், செயல்,
அண்ணன் தம்பி உறவு, தாய், தந்தையர் உறவு, வீடு, வாகனங்களின் அமைப்பு, நோய்,
எதிரிகள், மனைவி, ஆயுள், தொழில், வேலை, படிப்பு, லாபம், நஷ்டம், குழந்தை பிறப்பு
போன்றவை.
சூரியனையும் சந்திரனையும் நாம் கிரகங்கள் அவை மனித இனத்திற்கு பயன் படுகின்றன
என்று நாம் ஒத்து கொள்ளும்போது இவைகளை போன்று மீதம் உள்ள கிரகங்களும் மனித
வாழ்வின் சுக துக்கங்களை நிர்ணயிக்கின்றன என்று ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.
ஒரு காலத்தில் ஜோதிட சாஸ்திரத்தை மூட நம்பிக்கை என்று கூறிவந்த மேலைநாடுகள்
கூட இன்று ஜோதிடம் ஒரு அறிவியல் பூர்வமான ஆய்வு
என்று ஒத்துக்கொள்கின்றன. இதற்க்கு சாட்சி அமெரிக்கா போன்ற நாடுகளில் வளர்ந்து வரும் ஜோதிட நம்பிக்கை.
ஜோதிடத்தில் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் உண்டா அல்லது தோஷங்கள் இருக்கிறதா
என்பதை நிர்ணயிப்பது பஞ்சமஸ்தானம். இந்த பஞ்சமஸ்தானம் கணவன் மனைவி இருவருக்கும்
கெடாமல் இருக்க வேண்டும். அதாவது சுப கிரக பார்வை, சேர்க்கை, இருப்பு போன்ற
அமைப்பு இருந்தால் பெருமை தேடி தரும் குழந்தை பாக்கியம் உண்டு என்று சொல்லலாம்.
பாவ கிரக பார்வை, சேர்க்கை, இருப்பு போன்றவை இருந்தால் குழந்தை பாக்கிய தடை
உண்டாகலாம்.
குழந்தை பாக்கிய தடையை நீக்குவதற்கு ஜோதிடத்தில் தீர்வு உண்டா?
குழந்தையின்மைக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து உரிய வழிமுறைகளை
செய்வதின் மூலம் குழந்தை பாக்கியம் என்னும் தடையை அகற்றலாம்.