குல தெய்வம் யார் என்று தெரியவில்லையா?

குலதெய்வம் யார் என்று உங்களுக்கு தெரியவில்லையா? 


இந்த குறை இன்று பெரும்பாலானவர்களிடம் உள்ளது. காரணம் வேலை தொழில் காரணமாக இன்று உலகம் மிகவும் சுருங்கி விட்ட நிலையில் பிறந்த நாட்டை விட்டு பிழைப்பதற்காக வேறு ஒரு நாட்டில் குடியேறி சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை.

குலதெய்வம் என்பது யார்? குலதெய்வத்தின் மகிமை என்ன?
உங்கள் முன்னோர்களால் அதாவது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா போன்றவர்களால் முதன்மை தெய்வமாக வழிபட்ட தெய்வம் தான் குல தெய்வம் என்று கூறுவார். பொதுவாக ஒரு சமுகத்துக்கு என்று ஒரு தெய்வத்தினை பொதுவாக வணங்குவர். ஒரு குடும்பத்தில் நடக்கும் அணைத்து முக்கிய விசேஷங்களிலும் முதன்மையாக வணங்குவது குலதேவம்தான். வீட்டில் ஒரு கல்யாணம் நடக்க போவதாக இருந்தால் முதலில் பத்திரிக்கையை குலதெய்வத்திற்கு வைத்து படைத்து விட்டுதான் மற்றவர்களுக்கு பத்திரிக்கை கொடுப்பார்கள். காரணம் குல தெய்வம் ஆசி இருந்தால் அந்த காரியம் நல்ல படியாக நடக்கும் என்று. அது போன்று குழந்தைகளுக்கு முதல் முடி காணிக்கையாக கொடுப்பதும் குலதெய்வம் கோயிலில்தான்.

குலதெய்வம் கோயிலில் உங்கள் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வந்ததால் நீங்கள் அங்கு சென்று வணங்கும்போது அவர்களுடைய ஆசி
உங்களுக்கு மனபூர்வமாக கிடைக்கும் என்று நம்பலாம்.  
பொறுப்புள்ள பெரியவர்கள் தங்களுடைய வருங்கால சந்ததியர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்களுடைய குலதெய்வம் யார் என்பதையும், எங்கு, எப்படி  வணங்க வேண்டும் என்பதை சொல்லி கொடுத்து விடுவார்கள். அதன் அடிப்படையில் குலதெய்வத்தினை குறைந்த பட்சம் வருடம் ஒருமுறையாவது அதாவது சிவன் ராத்திரியன்று குல தெய்வம் கோயிலுக்கு சென்று வணங்கி வருவார்கள். அன்றைய தினம் அவர்கள் சமுகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் அங்கு குழுமி இருந்து குல தெய்வ பூஜை நடத்துவர்.

சரி. முறையான குலதெய்வம் யார் என்று தெரிந்தவர்களுக்கு குல தெய்வ வழிபாடு என்பது ஒரு பிரச்சனை இல்லை.
குலதெய்வம் யார் என்று தெரியாதவர்கள் யாரை குலதெய்வமாக நினைத்து வழிபடுவது?

குலதெய்வம் யார் என்று தெரியாதவர்களுக்கு அவர்களுடைய அவர்கள் பிறக்கும்போது அமைந்த கிரகங்களின் அடிப்படையில் யாரை குலதெய்வமாக வணங்க வேண்டும் என்று கண்டுபிடிக்கலாம். அதன் அடிப்படையில் குல தெய்வம் யார் என்று தெரியாதவர்கள் அந்த தெய்வத்தினை குலதெய்வமாக வணங்கலாம்.    
        
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள