இன்டர்நெட், ஈமெயில், தொலைக்காட்சி சேனல் என்று அறிவியல் வளர வளர ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்து நெருக்கம் அதிகமாக அதிகமாக காதலிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகின்றது.
இது குறித்து உலகநாயகன் கமல ஹாசன் பாடிய பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
"ஆல்வார்பேட்டை ஆளுடா
அறிவுரையே கேளுடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னோர் காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா மவனே
மவனே, லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா மவனே
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்ஸு பொண்ணை காதலி
கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோய் ஹோய்
ஆல்வார்பேட்டை, ஆல்வார்பேட்டை
ஆல்வார்பேட்டை ஆண்டவா
வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
பன்னனு வயசில் பட்டாம்பூச்சி பறக்குமே
லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே
கண்ணை பார்த்து பேச சொல்ல
கழுத்துக்கு கீழ் பார்க்குமே
லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே
கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது
உன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்லே
ஜவுளி கடை பொம்மையை பார்க்கும் போது
உன் புத்திக்குள்ள கவுலி கத்தும் அதுவும் லவ் இல்லே
இதுக்கு ஏன் உசுர குடுக்கணும்
எதனையும் புரிஞ்சு நடக்கணும்
காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா
இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா
ஆல்வார்பேட்டை, ஆல்வார்பேட்டை
ஆல்வார்பேட்டை ஆண்டவா
வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னோர் காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
…போடு
….வா நர்சம்மா
…ஐய்யோ
பார்க்கபோனா மனுஷனுக்கு first தோல்வி காதல்தான்
நல்லது அனுபவம் உள்ளது
காதலுக்கு பெருமையெல்லாம் first காணும் தோல்விதான்
சொன்னது கவிஞர்கள் சொன்னது
டாவு கட்டி தோத்து போனவன் எல்லாம்
கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா
ஒன்னு ரெண்டு escape ஆன பின்னே
உன் லவ்வுதான் மூணாம் சுத்தில் முழுமை காணுமடா
ஐய்யயோ இதுக்கா அழுவுரே
lifeஇலே ஏன்டா நழுவுரே
காதல் ஒரு கடலு மாறிடா
அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா
டேய் டேய்
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்ஸு பொண்ணை காதலி
கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோய் ஹோய்"
"காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா
இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா"
இது குறித்து உலகநாயகன் கமல ஹாசன் பாடிய பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
"ஆல்வார்பேட்டை ஆளுடா
அறிவுரையே கேளுடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னோர் காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா மவனே
மவனே, லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா மவனே
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்ஸு பொண்ணை காதலி
கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோய் ஹோய்
ஆல்வார்பேட்டை, ஆல்வார்பேட்டை
ஆல்வார்பேட்டை ஆண்டவா
வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
பன்னனு வயசில் பட்டாம்பூச்சி பறக்குமே
லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே
கண்ணை பார்த்து பேச சொல்ல
கழுத்துக்கு கீழ் பார்க்குமே
லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே
கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது
உன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்லே
ஜவுளி கடை பொம்மையை பார்க்கும் போது
உன் புத்திக்குள்ள கவுலி கத்தும் அதுவும் லவ் இல்லே
இதுக்கு ஏன் உசுர குடுக்கணும்
எதனையும் புரிஞ்சு நடக்கணும்
காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா
இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா
ஆல்வார்பேட்டை, ஆல்வார்பேட்டை
ஆல்வார்பேட்டை ஆண்டவா
வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னோர் காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
…போடு
….வா நர்சம்மா
…ஐய்யோ
பார்க்கபோனா மனுஷனுக்கு first தோல்வி காதல்தான்
நல்லது அனுபவம் உள்ளது
காதலுக்கு பெருமையெல்லாம் first காணும் தோல்விதான்
சொன்னது கவிஞர்கள் சொன்னது
டாவு கட்டி தோத்து போனவன் எல்லாம்
கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா
ஒன்னு ரெண்டு escape ஆன பின்னே
உன் லவ்வுதான் மூணாம் சுத்தில் முழுமை காணுமடா
ஐய்யயோ இதுக்கா அழுவுரே
lifeஇலே ஏன்டா நழுவுரே
காதல் ஒரு கடலு மாறிடா
அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா
டேய் டேய்
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்ஸு பொண்ணை காதலி
கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோய் ஹோய்"
இந்த பாடலிலேயே மிகவும் பிடித்த வரி மற்றும் உண்மை இதுதான்.
"காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா
இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா"
காதலை எதிர்ப்பவன் நான் அல்ல. ஆனால் அந்த காலத்து அம்பிகாபதி அமராவதி, சாஜஹான் மும்தாஜ் போன்ற காதலர்கள் பெரும்பாலும் இந்த காலத்தில் இல்லை. சாஜஹான் கட்டிய தாஜ் மஹால் காதலின் பெருமையை எத்தனையோ ஆண்டுகள் கடந்தும் இன்றும் பறை சாற்றிகொண்டிருக்கிறது.
இன்றும் அடிக்கடி செய்திதாள்களில் பார்க்கும் சில செய்திகள் கண்களை குளம் ஆக்குகின்றது.
"பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி எறிந்தது யார்?" இது போன்று அடிக்கடி செய்திகள்.
இன்றைய காதல்கள் பெரும்பாலும் காமத்தின் அடிப்படையிலேயே தான் இருக்கின்றது அதனால்தான் இதுபோன்று குப்பை தொட்டியில் ஒன்றும் அறியாத இளம் சிறார்கள் தொப்புள் கொடியுடன் கூட வீசி எரிய படும் பரிதாப நிலை.
ஒன்றும் அறியாத இந்த பிள்ளைகள்தான் பிற்காலத்தில் சமூகத்தில் அநாதைகள் என்றும் அப்பன் பேர் தெரியாத பிள்ளை என்றும் வசவுகளை ஏந்தி, அந்த வசவுகளே அவர்களை கொடும் செயல்கள் செய்ய தூண்டி சமூக விரோதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஆக்கபடுகின்றனர்.
யாரோ இரண்டு பேர் காதல் என்ற பெயரில் காம விளையாட்டு விளையாடி ஒன்றும் அறியாத ஒரு அப்பாவி குழந்தையை சமுக விரோதியாக்கி விடுகின்றனர்.
ஹார்மோன்கள் செய்யும் கலாட்டாவில் ஒரு தேசத்திற்க்கே சவால் விடும் தீவிரவாதிகள் உருவாகுவதற்கு ஒரு சிலர் காதல் என்ற பெயரில் நடத்தும் காம நாடகம்தான் இது.
இது போன்ற செயல்களை தடுக்க வேண்டுமென்றால் காமத்துக்காக காதல் செய்பவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும். அப்படி செய்தால் உண்மையான காதலும் வளரும் சமூக விரோதிகளும் தீவிர வாதிகளும் உருவாகமாட்டார்கள்.
ஆனால் இதையும் மீறி ஒரு சில ஜோடிகள் காதலித்து கல்யாணம் செய்து
நீண்ட நெடும் நாட்களாக தம்பதியர்களாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள். திரைப்பட நடிகர் S .S ராஜேந்திரன் மற்றும் நடிகை விஜயகுமாரி அவர்கள் ஒரு நல்ல உதாரணம்.
சரி ஜோதிட ரீதியாக இதுபோன்று தவறான காதல் ஜோடிகள் அல்லது தோற்று போகும் காதலர்கள் உருவாக காரணம் என்ன?
ஹார்மோன் விளையாட்டை போல கிரகங்களின் விளையாட்டுதான் காரணம்.
மனிதனின் வாழ்க்கையை தீர்மானிப்பதற்கு பல கிரகங்கள் காரணமாகின்றன. அதுபோன்று ஒருவருக்கு காதல் உண்டாவதற்கும் கிரகங்களின் தூண்டுதலே காரணமாகிறது.
நல்ல நேரங்களில் தூண்டப்படும் காதல் உணர்வுகள் நல்லபடியாக திருமணம் வரை சென்று நீடித்து நிற்கும் தம்பதியராக நிலைக்க செய்கின்றது. ஆனால் கெட்ட நேரங்களில் உண்டாகும் காதல் உணர்வுகள் காமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அல்லது அந்த காதல் கல்யாணம் வரை செல்லாமல் முறிந்து விடும்.
ஒருவரது ஜாதகத்தில் உயிர் ஸ்தானாதிபதி, குடும்ப ஸ்தானாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி மற்றும் கொடும் கிரகங்களான ஆயுள் காரகன், அங்காரகன், சாய கிரகங்களின் பார்வை, சேர்க்கை இல்லாமல் இருந்தால் அதுபோன்ற ஜோடிகளின் காதல் கை கூடி திருமணம் வரை நீடித்து செல்லும்.
அதை விடுத்து உயிர் ஸ்தானதிபதி, குடும்பஸ்தானாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி, பூர்வ புண்ணியம், பாக்கியம் போன்றவைகள் கொடும் கிரகங்களான ஆயுள் காரகன், அங்காரகன், சாய கிரகங்களின் பார்வை, சேர்க்கையுடன் இருந்தால் அந்த காதல் நீடித்து நிற்காது திருமணதிற்கு முன்பே முறிந்து விடும் அல்லது திருமணத்திற்கு பின்பு சில காலம்தான் நீடித்து நிற்கும்.