கணவன் மனைவியரிடையே ஒற்றுமையின்மை ஏன்?

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம். ஆனால் இன்று பெரும்பாலான குடும்பங்களில் நல்ல பாடங்கள் சொல்லி கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் கணவன் மனைவியர் இடையே ஒற்றுமை இல்லை.

பேருந்தில் நடத்துனரும் ஓட்டுனரும் ஒற்றுமை இல்லாமல் இருந்தால் போய் செல்ல வேண்டிய தூரத்திற்கு எப்படி போய் சேர்வது?

ஒற்றுமை இல்லாத கணவன் மனைவியிரடையே குழந்தைகள் இருந்தால் இன்னும் பிரச்னை அதிகம்.

எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி ஒரே வீட்டில் இருக்கின்றனர். கணவன் வங்கியில் வேலை பார்க்கிறார். மனைவி ஆசிரியராக இருக்கிறார். ஆனால் இருவருக்கும் இடையில் misunderstanding. கிட்டத்தட்ட 15 வருடங்களாக பேச்சு வார்த்தை கிடையாது. ஆனால் ஒரே வீட்டில் இருக்கின்றனர். இரு குழந்தைகள். ஆண் ஒன்று பெண் ஒன்று. அப்பா அம்மா இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாத நிலையில் தினம் தினம் அவர்களை பார்த்து கொண்டு இருக்கும் இந்த பிள்ளைகளின் மன நிலை எப்படி இருக்கும்?
கண்டிப்பாக பாதிப்பு இருக்கும். 

கணவன் மனைவியரிடையே புரிந்துணர்வு இல்லாமல் இருப்பதற்கு
பல காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம் என்னவென்றால் தாம்பத்திய சுகத்தில் அவர்களில் ஒருவர் ஏமாற்ற பட்டிருக்கலாம். யாராவது ஒருவர் அவர்கள் உடல் நிலை அல்லது உடல் அமைப்பு காரணமாக மற்றவருக்கு தாம்பத்திய சுகம் அளிக்க முடியாத நிலைமையில் இருக்கலாம். அந்த உண்மையினை திருமணத்தின் போது மறைத்து இருக்கலாம்.  பெரும்பாலான குடும்பங்களில் இந்த தாம்பத்திய பிரச்சனையில் தான் கணவன் அல்லது மனைவியர் இடையே  குழப்பம் உண்டாகிறது.  எந்த ஒரு ஆணும் அல்லது பெண்ணும் தாம்பத்திய சுகத்தில் ஏமாற்றப்படும்போது மிகுந்த வேதனைக்கு உண்டாவது என்பது சகஜமே.

வாழ்க்கை என்னும் மரத்தில் குழந்தைகள் என்னும் கனிகள் படைத்தது ஆண்டாண்டு ஆண்டாண்டு காலம் தழைத்து நிற்கலாம் என்ற கனவில் இல்லறத்தில் அடி எடுத்து வைக்கும்போது இது போன்ற இடி
(தாம்பத்திய சுகம் மறுக்கப்படும் போன்ற நிகழ்வு) மரத்தை தாக்கும்போது மரமே கருகி போய்விடுமே.

சரி. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஜோதிடத்தில் என்ன அறியமுடியும்? நிச்சயமாக அறிய முடியும். ஜாதகம் என்பது மனித வாழ்க்கையின் பிரதி அல்லது கண்ணாடி. அந்த கண்ணாடியை கொண்டு வாழ்வின் முக்கிய அணைத்து அம்சங்களை பற்றியும் தெரிந்துகொள்ளலாம். எப்படி ஸ்கேன் எடுத்து பார்த்து உடம்பில் உள்ள குறைகளை ஒரு மருத்துவர் கண்டுபிடிக்கிறாரோ அதைபோன்று ஜாதகதினை கொண்டு ஒரு மனிதருடைய வாழ்க்கையில் நிகலபோகும் நல்ல கெட்ட விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

அந்த அடிப்படையில் ஒரு ஆணுக்கோ ஒரு பெண்ணுக்கோ அவருடைய ஜாதகத்தில் அயன சயன போகம் எனும் பாவம் கிரகங்களின் அமர்வு, பார்வை, சேர்க்கையில் கணவன் மனைவி இருவரில் ஒருவருக்கு கெட்டு போய் இருந்தால் தாம்பத்திய சுகம் கிடைக்காமல் போய் விடுகிறது.

அதேபோன்று குடும்பஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் கிரகங்களின் அமர்வு, பார்வை, சேர்க்கை போன்றவற்றால் இருவருக்குமே பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த தம்பதியரிடையே ஒற்றுமை இருக்காது.

இதுபோன்ற ஒற்றுமையின்மையை திருமணதிற்கு முன்பே சரி செய்ய முடியாதா? நிச்சயம் சரி செய்ய முடியும். ஜாதகங்களின் சாதக பாதகங்களை
முன்பே அறிந்து அதற்க்கு தகுந்தாற்போல் ஜோடிகளை தேர்ந்தெடுத்து மணம்  முடித்தால் பிற்காலத்தில் கணவன் மனைவியரிடையே ஒற்றுமைஇன்மை என்ற பேச்சுக்கு இடம் இருக்காது.    
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள