சந்தோசமான திருமண வாழ்க்கை அமைய

 நிம்மதியான திருமண வாழ்க்கை என்பது எல்லோரும் விரும்புவதுதான்.
நல்லதொரு திருமண வாழ்க்கை அமைந்தால்தான் வாழ்க்கை சந்தோசமாகவும் நிம்மதியாகவும் கழியும். நல்ல திருமண வாழ்க்கை செய்யும் வேலையில், தொழிலில் நிம்மதியை தரும். வாரிசுகளும் நல்லபடியாக வளர்ந்து பெற்றோர்கள் பெயர் சொல்லும் பிள்ளையாக இருப்பார்கள்.

இந்த நிம்மதியான திருமண வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுகின்றதா? சற்று கஷ்டமான கேள்விதான். ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் எல்லாமே அவசரம். எங்கும் அவசரம்.

சிலர் தங்களுக்குரிய வாழ்க்கை துணையை தாங்களே தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள்.  சிலர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர். சிலர் பெற்றோரை எதிர்த்து தனியாக வாழ்க்கை நடத்துகின்றனர்.

இன்னும் சிலர் பெற்றோர் கூறும் அல்லது அவர்கள் பார்த்து வைக்கும் மாப்பிள்ளையோ பெண்ணையோ திருமணம் செய்து கொல்கின்றனர்.

திருமணம் எப்படி நடந்தாலும் கணவன் மனைவி இருவருக்கிடையே ஒத்து செல்லும் மனப்பான்மை இல்லை என்றால் அவர்களுடைய திருமண வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எப்போது பார்த்தாலும் சண்டை, வாக்குவாதம்.

சரி, ஜோதிட ரீதியாக என்ன விளக்கம். மனித வாழ்வு கிரகங்களின் அடிப்படையில். அந்த விதத்தில் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையும் ஒரு ஆணினுடைய அல்லது பெண்ணினுடைய பிறந்த நேரத்தில் அமைந்த கிரக நிலைகளை வைத்துதான். இதைதான் ஜாதக கட்டங்களில் எழுதி வைக்க படுகின்றன.

ஒருவருக்கு நல்லதொரு நிம்மதியான திருமண வாழ்க்கை அமைய வேண்டுமென்றால் லக்கினாதிபதி பாதகம் இல்லாமல் இருக்கவேண்டும். அதன் பின்பு குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம்,மாங்கல்ய ஸ்தானம்,  பாக்ய ஸ்தானம் போன்றவைகள்  தீய கிரகங்களின் பார்வை, சேர்க்கை போன்றவைகளால் பாதிக்கப்பட்டு இருக்ககூடாது. இந்த ஸ்தானங்கள் துர்
ஸ்தானங்களிலும் மறைய கூடாது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண பொருத்தங்கள் இருந்தாலும் கூட, ஜாதக அமைப்பில் இது போன்ற தீய அமைப்பு இருந்தால் அத்தகைய திருமணங்கள் சந்தோசம் நிம்மதி தருவதில்லை.  
      
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள