கஷ்டங்களில் இருந்து விடுபட்டு சந்தோசமாக வாழ்வது எப்படி?

  ஒவ்வொரு மனிதரும் 27 நட்சத்திரங்களின் கட்டுப்பாட்டில் பிறந்து இருப்பார். அந்த வகையில் 27 நட்சத்திரங்களும் 9 கிரகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்த 9 கிரகங்களும் 27 நட்சதிரங்களும்தான் ஒரு மனிதன் சந்தோசமாக இருப்பதற்கும் கஷ்டப்படுவதற்கும் காரணமாக இருக்கின்றன.

ஒரு மனிதனுடைய குணாதிசயம், அவனுடைய குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் , அவனுடைய பண வசதி எப்படி இருக்கும், அவனுடைய சொல் வன்மை எப்படி இருக்கும், எதிரிகளை அவனால் சமாளிக்க முடியுமா, கடன் மற்றும் நோய்களிலிருந்து விடுபட முடியுமா, வீடு வசதி வாகன வசதி அமையுமா, குழந்தை செல்வம் உண்டாகுமா, காலத்தில் திருமணம் நடக்குமா அல்லது கால தாமதமாக திருமணம் நடக்குமா அல்லது திருமணமே நடக்காமல் போய் விடுமா, ஆயுள் எப்படி இருக்கும், பூர்வீக சொத்துக்கள் கிடைக்குமா அல்லது அப்படி கிடைத்தால் அது விரயம் ஆகி விடுமா, என்ன மாதிரியான தொழில் அமையும் அல்லது வேலை அமையும், எந்த மாதிரியான தொழில் அல்லது வேலை செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் அல்லது காசு தாரளமாக புழங்கும், தொழில் அல்லது வேளையில்  லாபம் உண்டாகுமா, உள்ளூரில் வேலை கிடைக்குமா அல்லது வெளியூரில் வேலை கிடைக்குமா, உள்ளூரில் தொழில் செய்தால் நல்லதா அல்லது வெளியூரில் தொழில் செய்தால் நல்லதா, வெளி நாடு செல்லும் யோகம் உண்டா, நிம்மதியான தூக்கம் கிடைக்குமா, கணவன் மனைவி உறவு சுகமாக இருக்குமா அல்லது போர்களமாக இருக்குமா, கணவரிடத்தில் மனைவி விசுவாசமாக இருப்பாரா அல்லது கணவர் மனைவியிடத்தில் விசுவாசமாக இருப்பாரா போன்ற பல விசயங்களை கிரகங்களும் நட்சத்திரங்களும் தான் தீர்மானிக்கின்றன.

பிறக்கும்போது ஒவ்வொரு மனிதனும் ஒன்பது கிரகங்களின் கட்டுபாட்டுக்குள்  வந்து விடுகிறான். இந்த ஒன்பது கிரகங்களும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் கட்டுபாட்டுக்குள் வந்து விடுகின்றன. நட்சத்திரங்கள் என்பவை கிரகங்களின் remote control. 

மேலே சொல்லப்பட்ட மனிதவாழ்க்கையின்   அம்சங்கள் அதாவது பணம், தொழில், குடும்பம், மனைவி, மக்கள், ஆயுள், நோய், கடன், எதிரி, தைரியம்
வீடு, வாகனம், தாய் அன்பு, தந்தையின் அன்பு, பூர்விக  சொத்து, குழந்தை பாக்கியம் போன்ற முக்கியமான வாழ்க்கையின் அம்சங்கள் அனைத்தும் இந்த நட்சத்திரங்களின் கட்டுபாட்டுக்குள்ளும் , கிரங்களின் கட்டுபட்டுக்குள்ளும் வந்து விடுகின்றன.

ஒரு மனிதன் நல்லவனாகவும் கெட்டவனாகவும் இருப்பதற்கு இந்த கிரகங்களும் நட்சத்திரங்களும்தான் காரணம்.    

இந்த உண்மையை நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே கண்டு கொண்டு வரும் முன் காப்போம் என்ற பல மொழிக்கு ஏற்ப கிரகங்களினால் ஏற்பட்ட கஷ்டங்களை ஜாதகத்தின் மூலம் உரிய தெய்வ வழிபாடுகள் மூலம் தவிர்த்து சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.

பிதாகாரனுக்கு  உரிய நட்சத்திரங்கள் கிருத்திகை, உத்திரம், உத்திராடம். மாத்ரு காரகனுக்கு உரிய நட்சத்திரங்கள் ரோகினி, ஹஸ்தம், திருவோணம். சகோதரகாரனுக்கு  உரிய நட்சத்திரங்கள் மிருகசிரிடம், சித்திரை, அவிட்டம்.
வித்யாகாரகனுக்கு  உரிய நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி. புத்திர காரகனுக்கு உரிய நட்சத்திரங்கள் விசாகம், சுவாதி, பூரட்டாதி. களத்திரகாரகனுக்கு உரிய நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம். கர்ம காரகனுக்கு உரிய நட்சத்திரங்கள் அனுஷம், பூசம், உத்திரட்டாதி. ஞான காரகனுக்கு உரிய நட்சத்திரங்கள் மகம், மூலம், அஸ்வினி. ராகு என்று சொல்லப்படும் சர்ப்ப கிரகத்திற்கு உரிய நட்சதிரங்கள் சுவாதி, சதயம், திருவாதிரை.

இந்த நட்சத்திரங்களுக்கு உரிய கிரகங்கள் ஒருவருடைய ஜாதகத்தில் எப்படி அமைந்திருக்கின்றதோ அதற்க்கு தகுந்தாற்போல் ஒருவருடைய வாழ்க்கையில் பல அம்சங்கள் அதாவது பணம், தொழில், குடும்பம், மனைவி, மக்கள், ஆயுள், நோய், கடன், எதிரி, தைரியம், வீடு, வாகனம், தாய் அன்பு, தந்தையின் அன்பு, பூர்விக  சொத்து, குழந்தை பாக்கியம் அமைகின்றன.  

ஒவ்வொரு மனிதர்களும் அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் விரக்தியால் சோர்ந்து போவதும் மேலே கூறப்பட்ட அம்சங்கள்தான்.  மேலே கூறப்பட்ட அம்சங்கள் நல்லபடியாக அமைவதற்கும் அமையாமல் போவதற்கும்  இந்த கிரகங்களின் விளையாட்டும் நட்சத்திரங்களின் விளையாட்டுக்களே காரணம்.

நட்சத்திரங்கள் கிரகங்களை ஆட்டுவிக்கின்றன. கிரகங்கள் மனிதர்களை நல்லவிதமாகவும் தீய விதமாகவும் அவர் அவர் பிறந்த நேரத்தில் அவைகள் நிலை கொண்ட விதத்தில் ஆட்டுவிக்கின்றன.

மனிதன் அல்லல் படும்போது அல்லது வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களான பணம், தொழில், குடும்பம், மனைவி, மக்கள், ஆயுள், நோய், கடன், எதிரி, தைரியம், வீடு, வாகனம், தாய் அன்பு, தந்தையின் அன்பு, பூர்விக  சொத்து, குழந்தை பாக்கியம் போன்றவை பாதிக்கப்படும்போது ஜாதகத்தின் துணையோடு உரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளும்போது விடிவு காணலாம்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள