முதல் போடாமல் லாபம் சம்பாதிக்கும் தொழில் யாருக்கு வெற்றியை தரும்?


தொழில்களில்  இரண்டு வகை தொழில்கள் உண்டு. ஒன்று முதல் போட்டு செய்யும் தொழில் மற்றொன்று முதல் இல்லாமல் செய்யும் தொழில். முதல் போட்டு செய்யும் தொழிலில் மிகவும் risk அதிகம். போட்ட முதலுக்கு கணிசமான லாபம் கிடைத்தால் நல்லது. இல்லையென்றால் முதல் முளுகி போய் கடன் ஆகி கடைசியில் வியாபாரத்தை இழுத்து மூடி விட வேண்டிய நிலமைக்கு வந்து விட வேண்டியதுதான்.

சரி எல்லோருக்கும் இது போன்ற நிலமை வருமா? அப்படி சொல்ல முடியாது. 

ஆம்.

ஒருவருடைய பிறவி ஜாதகத்தில் ஒருவர் தொழில் செய்து நல்ல லாபம் சம்பாதிக்க வேண்டும் என அமைப்பு இருந்தால் கண்டிப்பாக அவர் நிச்சயமாக தொழில் செய்து நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். அதற்க்கு தகுந்தாற்போல் அவருடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவர் தொழில் செய்யலாம். லாபம் சம்பாதிக்கலாம். என்ன தொழில் செய்து லாபம் சம்பாதிப்பது என்பதை அவருடைய ஜாதகத்தின் தொழில் ஸ்தானாதிபதி, தனஸ்தானாதிபதி, மற்றும் இதர கிரக நிலைகள் அறிந்து அவருக்குண்டான சரியான தொழிலை தேர்ந்தெடுத்து செய்தால் நிச்சயம் அவரால் அந்த தொழிலில் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். வெற்றி பெற முடியும்.

சரி. அதுபோன்று முதல் போட்டு தொழில் செய்தால் அந்த தொழில் சரியாக வராது, நஷ்டம்தான் வரும் என்று ஜாதகத்தில் அமைப்புடையவர்கள் என்ன செய்வது?

அது போன்று அமைப்புள்ளவர்கள் முதல் போட்டு தொழில் செய்யும் எண்ணத்தை ஒதுக்கி வைத்து விட்டு முதல் போடாமல் தொழில் செய்யும் அமைப்பில் இறங்கலாம்? ஆம்.

முதல் போடாமல் கமிசன் அடிப்படையில் வியாபாரம் செய்யும் தொழிலை தேர்ந்தெடுத்து செய்தார்கள் என்றால் நிச்சயமாக வெற்றி பெறலாம்.
  
எல்லோராலும் முதல் போடாமல் கமிசன் அடிப்படையில் லாபம் சம்பாதிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. 

அவர்களுடைய ஜாதகத்தில் முதல் போடாமல் லாபம் சம்பாதிக்கலாம் என்ற அமைப்பு இருந்தால்தான் அவர்கள் கமிசன் அடிப்படையில் செய்யபடும் தொழிலில் ஈடுபட்டு லாபம் சம்பாதிக்க முடியும்.

எல்லா துறைகளிலும் கமிஷன் அடிப்படையில் செய்யும் தொழிலை செய்தால் லாபம் சம்பாதிக்கமுடியுமா? முடியாது.

அவர்களுடைய ஜாதகத்தினை ஆராய்ந்து அதில் உள்ள கிரக நிலைகளை ஆராய்ந்து அவைகளின் இருப்பிடம், பார்வை, கூட்டு போன்றவற்றையும் கணக்கில் எடுத்து கொண்டு அதற்க்கு தகுந்தாற்ப்போல் உள்ள தொழில்களில் கமிசன் அடிப்படையில் ஈடுபட்டார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் பணம் சம்பாதிக்க முடியும். வெற்றி பெற முடியும்.