பரம்பரை தொழிலை செய்யலாமா?


சில குடும்பத்தில் பார்த்தால் எல்லோரும்  நன்றாக படித்து இருப்பார்கள். ஆனால் பிறரிடம் சம்பளத்திற்க்கு வேலைக்கு செல்லமாட்டார்கள். காரணம் அவர்கள் குடும்பமே பரம்பரை பரம்பரையாக ஏதாவது தொழில் செய்து வந்து கொண்டு இருப்பார்கள். அவர்களுடைய பரம்பரை தொழிலையே தொடர்ந்து வரும் சந்ததியனர் அனைவரும் கால காலமாக செய்து வருவர்.

உதாரணதிற்க்கு ஒரு குடும்பத்தில் ஒட்டல் தொழில் பரம்பரை பரம்பரையாக நடத்தி வருகிறார்கள் என்றால் எல்லோருக்கும் அந்த ஒட்டல் தொழில் சிறப்பாக நடக்கும் என்று சொல்ல முடியாது.

ஒரு பரம்பரை சந்ததியில் ஆகா ஒகோ என்று இருந்த தொழில் அடுத்த தலைமுறை மக்களால் சிறப்பாக நடத்த முடிவதில்லை. அதாவது ஒரு தலைமுறையினரால் நல்ல லாபம் சம்பாதித்து வந்த தொழில் அடுத்த தலைமுறையினரால் லாபம் சம்பாதிக்க முடியாமல் நஷ்டட்த்தை அடைந்து அந்த தொழிலை மூட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இல்லையென்றால் கவுரவத்திர்காக நஷ்ட பட்டு கொண்டவது அந்த பரம்பரை தொழிலை செய்து வருவார்கள்.

சரி யாரால் அவர்களுடைய பரம்பரை தொழிலை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தி வர முடியும்?

ஒருவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானாதிபதி குடும்ப ஸ்தானதித்தில்  நல்ல வலுவான நிலையில் இருக்க வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானம் பாதிக்க பட்டு இருக்க கூடாது. நல்ல நிலமையில் இருக்க வேண்டும். லாபாதிபதியும் எந்த வித பாதிப்பும் அடையாமல் இருக்க வேண்டும். வித்யாகாரகனும் புத்தி காரகனும் நல்ல அமைப்பில் இருக்க வேண்டும்.
சரி இது போன்று அமைப்பு இல்லை ஆனால் ஒருவர் தன்னுடைய குடும்ப தொழிலை செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தால் அவர் தன்னுடைய குடும்ப தொழிலை செய்ய முடியாதா?

அவர்களுடைய குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின் ஜாதகத்தினை ஆராய்ந்து அதன் பிறகு அவர் தன்னுடைய குடும்ப தொழிலை தொடர்ந்தால் வெற்றி அடைய முடியுமா அல்லது வேறு எந்த தொழிலை செய்யலாம் என்பதை முடிவு செய்யலாம்.    




ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள