பண பிரச்சனைக்கு காரணம் என்ன?

பணம் என்பது இந்த காலத்தில் மிகவும் அத்தியாவசியமான அவசியமான ஒரு பொருளாகிவிட்டது. பிறப்பதற்கும் காசு வேண்டும். இறந்து போனாலும் காசு வேண்டும். ஒரே ஒரு இடத்தில மட்டும் காசு என்பது தேவை இல்லை. எங்கு என்றால் காசு என்று என்னவென்று தெரியாத இடத்தில். அது போன்று ஒரு இடம் இந்த பூமியில் இருக்கிறதா என்று தெரிய வில்லை. வேண்டுமென்றால் நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாத பழங்குடியினர் எவராது என்கிறது வாழ்ந்தால்தான். அவர்களையும் சில சுய நல மிக்க மனிதர்கள் காசு ஆசை காட்டி கெடுத்து விட்டார்கள்.
ஆனால் மனிதராய் இந்த உலகில் பிறந்து விட்ட நமக்கு காசு என்பது மிகவும் அவசியமான ஒன்று ஆகிவிட்டது. பல் விலக்க வாங்கும் tooth paste முதல், குடிக்கும் தண்ணீர் வரை காசு இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. தூங்கி எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை காசு இருந்தால்தான் தூங்கவும் முடியும், தூங்கி எழுந்திருக்க முடியும் இல்லையென்றால் பணம் இல்லாதவன் பிணத்துக்கு சமானம்தான்.
சரி பணம் என்பது அவசியமான ஒரு பொருள்தான். அதன் தேவைக்கு என்ன செய்ய வேண்டும்? வேலைக்கு செல்ல வேண்டும். அல்லது தொழில் செய்ய வேண்டும் அல்லது சுய தொழில் செய்ய வேண்டும். தொழில் என்பது முதல் போட்டு செய்வது. சுய தொழில் என்பது முதல் இல்லாமல் கமிசன் அடிப்படையில் செய்வது. தொழில் செய்தால் மட்டும் பணம் கொட்டுமா? வேலை செய்தால் பணம் கொட்டுமா? சரியான தொழிலோ அல்லது வேலையோ செய்தால்தான் பணம் கொட்டும். செய்யும் தொழில் அல்லது வேலையில் நல்ல அனுபவம் திறமை மிளிர வேண்டும். திறமை மிளிர்ந்தால் பணம் கொட்டும். தொழிலில எப்போது நல்ல லாபம் கிடைக்கும். அவருக்கு தெரிந்த தொழிலை அவருக்கு பரிச்சயமான தொழிலை தேர்ந்தெடுத்து செய்யும்போது அவருக்கு லாபம் கொட்டும். அப்போதுதான் பணம் மடை திறந்த வெள்ளம போல் வரும் கொட்டும். அதை விடுத்து தெரியாத தொழிலில் தலையை விட்டால் பணம் எங்கிருந்து வரும்? நஷ்டம் தான் வரும்.
எனவே நல்லதொரு தொழிலை உங்களுக்கு தெரிந்த தொழிலை உங்களுக்கு மிகவும் பரிச்சயமான தொழிலை தேர்ந்தெடுங்கள் பண பிரச்சனைக்கு முற்று புள்ளி வையுங்கள்.
ஜாதக ரீதியாக என்ன தீர்வு? ஒருவருக்கு நல்லதொரு லாபம் தரும் தொழில் அமைய பெற்றிருக்கிறார் என்றால் அவருடைய தன ஸ்தானாதிபதி அவருடைய் ஜாதகத்தில் நல்ல வலுவான நிலையில் இருக்க வேண்டும். அதே போன்று அவருடைய லாபாதிபதியும் அவருடைய ஜாதகத்தில் நல்ல வலுவான நிலையில் இருக்க வேண்டும். இவர்களை தவிர உடல் காரகன், மன காரகன், வித்யா காரகன், தன காரகன், தனாதிபதி, லாபாதிபதி, இவர்கள் எல்லோரும் பகை, நீசம், மறைவு, கெட்டவர்களின் பார்வை சேர்க்கை பெறாது இருந்தால் பணம் கொட்டும் பண பிரச்னை தீரும்.



ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள