பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் யார் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவர் அவர்களுடைய status க்கு தகுந்தவாறு பிரச்சனைகள் உண்டு. சாதாரண மனிதனுக்கு தூங்கி எழுந்து படுக்கைக்கு போகும்வரை பிரச்சனைகள். பெரும்பாலான வர்களுக்கு பணம் தான் பிரச்னை. சிலருக்கு பார்க்கும் வேலையில்பிரச்னை. மேல் அதிகாரிகளிடத்தில் பிரச்னை. தனக்கு கீழ வேலை பார்ப்பவர்களிடம் பிரச்னை. வீட்டில் மனைவி மக்களிடம் பிரச்னை.
ஒரு சிலர் மிக லாவகமாக சமாளிப்பார்கள். ஒரு
சிலர் பிரச்னை என்று வந்து விட்டால் தலையில் கையை வைத்து விட்டு உட்கார்ந்து
விடுவார்கள்.
பிரச்சனைகளை லாவகமாக சமாளிப்பதற்கும்
சமாளிக்காமல் அசந்து போய் விடுவதற்கும் ஜாதக ரீதியாக என்ன காரணம்?
ஒருவருடைய ஜாதகத்தில் உயிர் ஸ்தானம் என்று
சொல்லப்படும் லக்னமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும், பாக்கிய ஸ்தானமும் வலுவாக
இருக்கும் பட்சத்தில் அவரால் எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் பூ என்று ஊதி
விடுவார். இந்த மூன்று ஸ்தானங்களும் எந்த வகையிலும் அதாவது பார்வை, சேர்க்கை,
கூட்டு, இருப்பிடம் என்று பாதிக்க படாமல் இருந்தால் எந்த பிரச்னையாக இருந்தாலும்
அவருக்கு தூசிதான். ஈசியாக சமாளித்து விடுவார்.
அதுபோன்று லக்னாதிபதியும் மன காரகனும் வலுவுடன்
இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகர் பிரச்சனைகள் ஏற்படும்போது மனதாலும் உடலாலும்
துவண்டு போகாது சரியான நடவடிக்கை எடுத்து அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு
வருவர்.
சரி அதுபோன்று கிரக நிலைகள் வலுவில்லாதவர்
எப்படி பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவது? அவருடைய ஜாதகம் தான் அவருடைய
பிரச்சனைக்கு தீர்வு சொல்லும்.