சந்தோசமாக வாழும் அமைப்பு யாருக்கு?


பொதுவாக மனிதர்களை பொறுத்தவரை சந்தோசமாகத்தான் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். கஷ்டம் என்று வந்துவிட்டால் துவண்டு விடுவார்கள். என்னடா இது வாழ்க்கை? என்று அலுத்து கொண்டு கவலை பட ஆரம்பித்து விடுவார்கள்.

ஆனால் சிலருக்கு மட்டும் பார்த்தால் சந்தோசமாக வாழும் அமைப்பு அவர்களுக்கு மட்டும்தான் என்று அணைத்து விசயங்களிலும் சந்தோசமாக வே இருப்பார்கள். நல்ல குணம், நல்ல பழக்க வழக்கம், நல்ல பணவசதி, நல்ல வேலை வாய்ப்பு, நல்ல தொழில் வாய்ப்பு, நல்ல மனைவி, நல்ல கணவன், நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், பெரியவர்களின் அல்லது முன்னோர்களின் ஆசிர்வாதம், தொழிலில் நல்ல லாபம், நல்ல தூக்கம் போன்ற எல்லா விசயங்களிலும் சந்தோசமாகவே இருப்பார்.

ஒரு சிலருக்கு மட்டும் ஏன் அதுபோன்று சந்தோசம்? பலருக்கு ஏன் சந்தோசம் இல்லாமை?

இதற்க்கு ஜோதிட ரீதியாக என்ன பதில்.  இவை எல்லாமே கிரகங்களின் விளையாட்டு தான் காரணம். ஒருவர் பிறக்கும்போது அவர் பிறந்த நேரத்தில் கிரகங்கள்  வான ரீதியில் எப்படி விளையாடி கொண்டு இருந்தனவோ அதற்க்கு அதற்க்கு தகுந்தாற்போல் மனித வாழ்க்கையில் விளையாட்டு நல்ல விதமாகவும் கெட்ட விதமாகவும் நடக்கின்றன.

பொதுவாக ஒரு மனிதர் சந்தோசமாக வாழ்வது என்பது அவர் பிறக்கும்போது உயிர்ஸ்தானத்தில்  அமர்ந்த கிரகங்களை பொறுத்துதான். அதுமட்டுமன்றி அந்த உயிர்ஸ்தானத்தில் ஏற்படும் கிரக கூட்டு, உயிர்ஸ்தானத்தின் அதிபதியின் நிலைமை அவர் இருக்கும் இடத்தின் நிலைமை அவர் பார்வை பெரும் நிலைமை இவற்றை வைத்து ஒருவருடைய வாழ்க்கையின் அணைத்து சுகங்களும் அமைகின்றன.

சரி உயிர்ஸ்தானம்  நல்லபடியாக அமைந்து கவலை இல்லாமல் வாழ்பவர்களை பற்றி நாம் கவலை பட வேண்டாம்.
அம்பானியை பற்றி நாம் கவலை பட வேண்டாம். வாழ்க்கையில் அவதி பட்டு கொண்டு இருக்கும் அழகப்பனை பற்றி நாம் கவலை படுவோம்.

அவதி பட்டு கொண்டு இருக்கும் அழகப்பனை அவனை படைத்த கடவுள் ஒருவரால்தான் காப்பாற்ற முடியும். ஆம் உயிர் ஸ்தானம் என்று கூறப்படும் ஸ்தானம் ஜோதிடரீதியாக பாதிக்கப்பட்டு ஒருவர் வாழ்க்கையில் அவஸ்தைப்படும் போது அவருடைய ஜாதகத்தை ஆராய்ந்து உரிய வழிபாடுகளை மேற்கொண்டால் அம்பானி போன்று ஒரு வாழ்க்கை வாழ முடியாவிட்டாலும் சராசரியான சந்தோசமான மனிதனாக வாழலாம்.
               
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள