கல்வியின் முக்கியத்துவம் பெருகி வரும் வேலையில் படிப்பவர்களின் எண்ணிக்கை இன்று சர்வ சாதரனமாகிவிட்டது. இங்கு நான் கூறுவது உயர் கல்வி அதாவது பட்ட படிப்பு அல்லது அதற்க்கு மேல் உள்ள மேல் நிலை படிப்புகள்.
சாதாரண பட்ட படிப்பு என்பது இன்று மிகவும் சர்வ சாதரணமாகி விட்டது. தேர்வில் மதிப்பெண்கள் அதிகம் எடுத்தால் மட்டும் ஒருவர் அறிவாளி என்ற நிலைமை என்று மாறி உலக அனுபவங்களை பற்றியும் அவர் எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்பதை வைத்துதான் அவருக்கு நல்லதொரு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அது போன்று பட்ட படிப்புடன் ஒருவர் படிப்பை நிறுத்தி விட்டால் அவருக்கு எந்த விதத்திலும் பிரயோஜனமில்லை. முதுநிலை பட்ட படிப்பு, அவர் எந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்கின்றாரோ அந்த துறையில் ஆராய்ச்சி படிப்பு போன்றவை இருந்தால் தான் நாளைக்கு வேலைக்கு செல்லும் இடத்தில அங்கு உள்ள போட்டி தேர்வாளர்களிடம் இவர் தனியாக தெரிவார். வேலை கொடுப்பவர்களும் இவரிடம் உள்ள அபரித திறமையை வைத்து வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுப்பார்.
சரி எல்லோராலும் பட்டபடிப்பு மேல்நிலை படிப்பு அதற்க்கு மேல் ஆராய்ச்சி படிப்பு போன்று படித்து நிபுணர்கள் முடியுமா?
ஒரு மனிதனுடைய அத்தனை அம்சங்களையும் ஜாதகம் பிரதிபலிக்கும். நல்லவனா, கெட்டவனா, மற்றவர்களிடத்தில் எப்படி நடந்து கொள்வான், புத்திசாலியா, மற்றவர்களுக்கு அறிவுரை கூற லாயக்கு இல்லாதவனா போன்ற பல விசயங்களை தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக ஒருவர் நல்ல படிப்பு அறிவை உலக அறிவை பெறுவதற்கும் உண்டான அமைப்புகள் ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். ஒரு தனி மனிதனுடைய குணத்தை
பற்றி தெரிவிக்கும் லக்னமும், படிப்புக்கு காரகனான வித்யாகாரகன், படிப்பு குரிய ஸ்தானாதிபதி, லக்னாதிபதி போன்றவை நல்ல நிலமையில் இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு மேல்படிப்பு என்பது சர்வ சாதாரணம். மேல் படிப்பு என்ன அதற்க்கு மேல் ஒரு படிப்பு இருந்தாலும் பூ இவ்வளவு தானா என்று கேட்பார்கள்.
ஒருவருக்கு படிக்கும் அமைப்பு நல்ல படியாக அமைந்து விட்டால் நல்ல வேலை வாய்ப்பு, நல்ல பொருளாதார நிலைமை இவை எல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள