மனித உடல் என்பது வானில் சுற்றும் ஒன்பது கிரகங்களின் கலவை.
என்று ஒரு மனிதன் தாயின் கருவறையிலிருந்து பூமியை எட்டி பார்க்கின்றானோ அன்றே வானில் சுழன்று கொண்டு இருக்கும் கிரகங்களின் பிடியில் அகப்பட்டு கொள்கிறான்.
அதன் பின்பு அவனுடைய ஒவ்வொரு அசைவும், எண்ணமும், சிந்தனையும், செயலும் அனைத்தும் அந்த ஒன்பது கிரகங்களின் கட்டுபாட்டுக்குள் தான் இருக்கும்.
சில கிரகங்களின் கட்டுப்பாடு அவனுக்கு நன்மையாகவும் சில கிரகங்களின் கட்டுப்பாடு தீமையாகவும் இருக்கும். ஆனால் எல்லோருக்கும் நன்மை தீமைகள் ஒரே மாதிரியாக இருக்காது. ஒருவருக்கு நன்மை செய்யும் கிரகம் இன்னொருவருக்கு நன்மைதான் செய்யும் என்று கூறமுடியாது. அதே போன்று ஒருவருக்கு தீமை செய்யும் கிரகம் இன்னொருவருக்கு தீமை தான் செய்யும் என்றும் கூறமுடியாது.
ஒவ்வொருவருக்கும் அவர்கள் பிறந்த நேரத்தில் அந்த கிரகங்கள் நின்ற நிலையில் அல்லது இடத்தை வைத்து நன்மையோ தீமையோ நடக்கும். அந்த கிரகங்கள் நின்ற நிலையை தான் ஜாதகத்தில் கிரகங்கள் நின்ற நிலை காட்டபடுகிறது. அவற்றை வைத்துதான் ஜோதிட பலன்கள் கூறப்படுகிறது. இது ஒரு விஞ்ஞான பூர்வமான உண்மை என்று கூறலாம்.
அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கிரகங்களின் அசைவினை வைத்து பஞ்சாங்கத்தை வைத்து என்று மழை பெய்யும் என்று வருடம் பூராவும் கணித்து வைத்திருந்தனர். சந்திர கிரகணம் சூரிய கிரகணம் அமாவசை பௌர்ணமி இவைகள் எல்லாம் என்று வரும் என்று துல்லியமாக கணித்து வைத்திருந்தனர்.
அன்று எந்த ஒரு செயற்கை கோலும் கிடையாது. ஆனால் இன்று செயற்கை கோளின் உதவியுடன் வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் என்று மழை வரும் என்று வெயில் அடிக்கும் என்று கணிக்கின்றனர். இன்று விஞஞான பூர்வ உண்மை என்று ஒத்துகொள்ளும் பல விஷயங்களை அன்று நம் முன்னோர்கள் சர்வ சாதாரணமாக வான சாஸ்திரம் என்ற யூகிக்கும் கலை மூலமாக தெரிந்து வைத்து அசத்தி இருக்கிறார்கள்.
ஜோதிடமும் அது போன்று வானசாஸ்திரத்தின் அடிப்படையாக கொண்டதுதான். இன்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கும் தகவல்கள் விஞ்ஞான பூர்வ உண்மை என்று ஒத்து கொண்டால் ஜோதிடமும் விஞ்ஞான பூர்வமான உண்மைதான்.
ஒரு மனிதன் பிறக்கும்போது கிரகங்கள் இருந்த நிலையில் ஒருவருக்கு நன்மை தீமை நடக்கிறது என்று சொல்லும்போது நன்மை செய்யும் கிரகங்களை மேலும் நன்மை செய்ய வைக்க அல்லது தீமை செய்யும் கிரகங்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இயற்க்கை சாதனங்கள் ஏதாவது உண்டா?
ஏன் இல்லை. நிச்சயமாக இருக்கிறது
அவைதான் நவரத்தின கற்கள் என்னும் அற்புத கற்கள். காற்றினிலும் மழையினிலும் வெய்யிலிலும் காய்ந்து வானில் உள்ள கிரகங்களின் நேரடி
சக்தியை பெற்று மனிதனின் வாழ்க்கையை வளமை படுத்துவதற்காகவே இயற்கையால் படைக்கப்பட்ட அற்புதமான ஆச்சரிய பட செய்யும் நவரத்தின கற்கள்.
இந்த நவரத்தின கற்களை யார் அணியலாம்?
ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் காரகங்கள் அல்லது வேலைகள் ஒரு ஜாதகருக்கு பாதகமாக அல்லது தீமையாக நடக்கின்றபோது வலுவிழந்த அந்த கிரகதிர்க்குரிய கற்களை அணிந்து அவை உடலில் படும்போது அந்த கிரகதிர்க்குண்டான வலு கூட்ட படுகிறது.
வலு கூடும்போது அதை அணிபவருக்கு அந்த கிரகத்தினால் நடக்க வேண்டிய பலன்கள் நல்லவிதமாக நடக்கின்றது.
உதாரனத்திற்க்கு பவள கற்களுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் சம்பந்தம் உண்டு. செவ்வாய் ரத்தம்
சம்பந்தப்பட்டவைகளோடு தொடர்பு உள்ளது.
ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுவிழந்து காணும்போது அவருக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் அவர் உடம்பில் கண்டிப்பாக இருக்கும். அவர் செவ்வாய் கிரகத்துக்கு உரிய பவள கற்களை அணியும்போது ரத்தம் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் சரியாகிறது.
இதுபோன்று ஒவ்வொரு நவரத்தின கற்களும் ஒரு மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட கிரகம் வலுவிழந்து அவைகள் நன்மை செய்யாத பட்சத்தில் குறிப்பிட்ட நவரத்தின கற்களை அணியும்போது அந்த குறைபாடு களையப்பட்டு அந்த மனிதருக்கு நல்லது நடக்கிறது.
நவரத்தின கற்கள் என்பது dish antenna போன்றது. செயற்கை கோளில் இருந்து படங்களை பெற்று தொலை காட்சி வாயிலாக நமக்கு துல்லியமாக தருவது போல நவரத்தின கற்களை நாம் அணியும்போது அவை சம்பந்தப்பட்ட கிரகங்களின் நேரடி தொடர்பு பெற்று அவைகளின் சக்தியை நம்முடைய உடம்பில் ஊடுருவ செய்து நன்மை உண்டாக்குகின்றது
ஆனால் நவரத்தினங்களை அணியும் போது ஜாதகதினை ஆய்வு செய்து அதன் பிரகாரம் கற்களை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கற்களை அணியும்போது அந்த கிரகங்களின் பகை, நீசம், நட்பு, பார்வை போன்றவைகளை ஜாதகதினை ஆய்வு செய்து அதன் பின்பு தான் அணிய வேண்டும். இல்லையென்றால் எதிர்மறை விளைவுகள் உண்டாகி தீமைகள் அதிகமாகும்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள