திருமணம் தள்ளி கொண்டே போவதற்கு என்ன காரணம்?

திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை தரக்கூடிய விஷயம்.

ஆனால் ஒரு சிலருக்கு பார்த்தால் திருமணம் தள்ளி கொண்டே போகும். நிறைய வரன்கள்  வந்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற்க்காக திருமணம் தள்ளி கொண்டே போகும்.

இது போன்று திருமணம் தள்ளி கொண்டே செல்லும்போது பெண்களின் நிலைமைதான் மிகவும் மோசம்.

ஊரார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.

பெண்ணாக இருந்தால் நல்ல அழகும், படித்திருந்தால் சம்பாதிக்கும் நிலையும் இருக்கும் ஆனால் திருமணம் மட்டும் பல வரன்கள் வந்து தட்டி சென்று கொண்டே இருக்கும்.

ஆணாக இருந்தாலும் நல்ல அழகும், படிப்பும், வேலையும் இருந்தாலும் திருமணத்திற்கான வரன் சாமான்யமாக அமையாது.

இதெற்கெல்லாம் ஜோதிட ரீதியாக என்ன காரணம்?

ஒருவருக்கு திருமணம் தடைபடுவதர்க்கு வாழ வேண்டிய ஒருவரை வலுகட்டாயமாக வாழ விடாமல் செய்வது, சந்தோசமாகக இருப்பவர்களை சங்கடத்தில் உள்ளாக்குவது, மற்றவர்களை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்துவது, உதவி செய்ய முடிய வில்லை என்றாலும் உபத்திரவங்கள்  செய்வது, பெண்களுக்கோ ஆண்களுக்கோ துரோகம் செய்வது,  இது போன்று இன்னும் செய்யக்கூடாத பாப செயல்கள் தான் ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமண தடை என்ற ரூபத்தில் வந்து கஷ்டபடுத்தும்.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால் திருமண வயதில் இருக்கும் ஒரு ஆணோ, பெண்ணோ அவர்களுக்கு தெரிந்து எந்த பாவமும் செய்யாமல் அவர்களுடைய திருமணம் தள்ளிக்கொண்டே போகும்.

அவர்கள் பாவம் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களுடைய தாய் தந்தையர் மேலே கூறியது போன்ற  பாவ செயல்கள் செய்திருந்தாலும் அது பிள்ளைகள்   தலையில்தான் விடியும்.

சரி, தாய் தந்தையரும் நல்லவர்கள்தான் ஆனால் அவர்களுக்கு ஏன் இந்த சோதனை?

காரணம் அவர்கள் முன்னோர் செய்த பாவம் இவர்கள் பிள்ளைகள் தலையில் வந்து விடியும்.

சரி, இதற்க்கு என்னதான் தீர்வு.

சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணின் பிறந்த நேரத்தின் போது அமைந்த கிரகநிலைகள், அவற்றின் கூட்டணி, பார்வை பலன், மறைவு பலன்கள் போன்றவற்றை ஆய்வு செய்தால் எந்த மாதிரியான காரணங்களினால் திருமணம் தடை உண்டாகிறது என்று கண்டுபிடித்து அதற்குரிய வழி  முறைகளை மேற்கொண்டால், கால தாமத திருமணத்தை தவிர்க்கலாம்.

திருமண தடை என்பது நிரந்தரம் அல்ல உரிய வழிமுறைகளை மேற்கொள்ளும்போது தடைகள்  பனி போல் விலகும்.
 
   
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள