சுய தொழில் யாருக்கு லாபம் தரும்?

சுய தொழில் செய்தால் லாபம் வரவேண்டும். லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்க்குதான் எல்லோரும் சுய தொழில் செய்கின்றனர்.

சுய தொழிலில் யாருக்கும் அடிமை இல்லை. நாமே ராஜா, நாமே மந்திரி, குறித்த நேரத்தில் கையெழுத்து போடவேண்டிய அவசியம் இல்லை, அதிகாரிக்கு முன்பு நின்று தலையை சொரிய வேண்டியதில்லை. வேலைக்கு போனால் மாதம் ஒருநாள்தான் சம்பளம் என்ற பெயரில் பணம் வரும். சுய தொழிலாக இருந்தால் மாதம் பூராவும் என்று வேண்டுமானாலும் பணம்  வரும். 

ஆனால் சுய தொழில் செய்யும் எல்லோருக்கும் லாபம் கிடைக்குமா? அவர்கள் செய்யும் தொழில் வளர்ச்சி அடையுமா?

அப்படி எதிர்பார்க்க முடியாது. எத்தனயோ பேர் சுய தொழில் என்று ஆரம்பித்து அதில் சரியான வருமானம் இல்லாமல் மூடி விட்டவர்களும் இருக்கின்றனர்.

ஒரு சுய தொழில் வெற்றி பெற வேண்டும் என்றால் அந்த தொழிலை மக்களிடம் எடுத்து செல்லக்கூடிய விதத்தில் அவர்கள் விரும்பக்கூடிய விதத்தில் அந்த பொருள் இருக்கவேண்டும். அந்த தொழிலை பற்றிய அறிவு, நுணுக்கங்கள் உடலோடும் மனதோடும் ஒட்டி இருக்க வேண்டும்.

பணியாட்களிடம் வேலை நேரத்தில் முதலாளியாகவும் வேலை இல்லாத நேரத்தில் தோழனாகவும் பழகும் பண்பு இருக்க வேண்டும். அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளும் மனப்பான்மை இருக்க வேண்டும்.

"இவர் போல் யார் உண்டு என்று ஊர் சொல்லவேண்டும்" என்ற குணம் வேண்டும்.

“நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்” என்ற அடக்கம் வேண்டும். 

சரி, சுய தொழில் செய்யும்  அனைவரும் லாபம் சம்பாதிக்க முடியவில்லை ஏன்?

இதற்கு பெரும்பாண்மையான காரணம் முதலில் அவர்களுக்கு சுய தொழில் சரியாக வருமா, அப்படி சரியாக வரும் என்றால் எந்த தொழிலை செய்வது,
என்பதை சரியாக அறியாமல் சுய தொழிலில் இறங்கி  நஷ்டபட்டவர்கள் ஏராளம்.

"தெரிந்த தொழிலை செய்யாதவனும் முட்டாள், தெரியாத தொழிலை செய்தவனும் முட்டாள்"

ஒருவருக்கு ஒரு தொழிலை பற்றி நன்றாக தெரிந்து, அதன் நெளிவு சுளிவுகளைஎல்லாம் அறிந்தவர்களாக இருந்தால் அவர் நிச்சயம் அந்த சுய தொழிலில் வெற்றி பெறலாம்.

அதை விடுத்து "எங்க ஆத்து காரரும் கச்சேரிக்கு போகிறார்" என்று, சங்கீத
ஞானமே இல்லாத ஒருவர் கச்சேரிக்கு போனால், அவர் அங்கு போய் என்னத்தை ரசிக்க முடியும்.

சரி ஜோதிடரீதியாக ஒருவர் தனக்கு பொருத்தமான லாபம் தரும் சுய தொழிலை தேர்ந்து எடுக்க முடியுமா? முடியும்.

ஒருவருடைய பிறப்பின்போது நிலை கொண்டிருந்த கிரகங்களின் அடிப்படையில், அவருடைய ஜாதகத்தின் அடிப்படையில் அவருக்கு பொருத்தமான தொழிலை, லாபம் தரும் சுய தொழிலை இடம், பார்வை, சேர்க்கை போன்ற அமசங்களை கொண்டு கண்டுபிடிக்கலாம்.

அது போன்று லாபம் தரும் சுய தொழிலை தேர்ந்தெடுத்து செய்யும்போது நிச்சயமாக லாபம் கிடைக்கும் என்று நம்பலாம்.        

  
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள