திருமண பொருத்தம் என்பது திருமணமாகும் ஆணினுடைய மற்றும்
பெண்ணினுடைய நட்சத்திரம், ராசி இவைகளின் அடிப்படையில் 10 பொருத்தங்கள் பார்க்கப்பட்டு பொருத்தங்கள்
அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமண பொருத்தம்
இருக்கிறது என்று முடிவு செய்து திருமணம் செய்து வைக்கின்றனர் சிலர்.
பத்து திருமண பொருத்தங்கள் என்பது தின
பொருத்தம், கன பொருத்தம், மகேந்திர பொருத்தம், ஸ்திரீ தீர்க்கம், யோனி பொருத்தம்,
ராசி பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், வேதை
பொருத்தம் போன்றவையாகும்.
இன்று இன்டர்நெட் போன்றவற்றில் இலவசமாக
கிடைக்கும் சில திருமணம் பற்றிய இலவச தகவல்களின் மூலம் சிலர் திருமண பொருத்தம்
பார்த்து திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் முடிவும் எடுக்கின்றனர்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பல
மொழி உண்டு. ஒரு தம்பதியருக்கு பிறக்கும் வாரிசுகள் அவர்களுக்கு பிறக்கும் வாரிசுகள்
மூலமாகவும், அதன் பின்பு பிறக்கும் வாரிசுகள் மூலமாகவும் எத்தனையோ தலைமுறைகள்
உருவாக போகின்றன. அதனால்தான் திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என்று கூறி
இருக்கலாம்.
எனவே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்ய
10 திருமண பொருத்தங்களின் அடிப்படையில் மட்டும் திருமணத்தை நடத்தலாமா
அல்லது வேண்டாமா என்று முடிவு எடுக்கலாமா?
என்னை பொறுத்தவரை திருமண பொருத்தம் பார்க்க
வேண்டும் என்பது அவசியம் ஆனால் அதே சமயத்தில் திருமண பொருத்தம் என்ற ஒரு விஷயத்தை
மட்டும் வைத்து கொண்டு ஒரு திருமணத்தை நடத்துவதா வேண்டாமா என்று முடிவு செய்வது
தவறு.
அதனால்தான் திருமண பொருத்தம் பார்த்து செய்யும்
சில திருமணங்கள் நீடித்து இருப்பதில்லை அல்லது விவாகரத்து வரை சென்று விடுகிறது.
நான் மேலே சொன்னவாறு திருமண பொருத்தங்கள் என்பது ஒரு ஆணினுடைய மற்றும் ஒரு
பெண்ணினுடைய ராசியையும் நட்சத்திரத்தையும் வைத்து மட்டும் கணிக்க படுகிறது. அதில்
அவ்வளவு துல்லியமாக பொருத்தத்தை அறிய முடியாது. ராசி நட்சத்திரம் என்பது
பலருக்கும் பொதுவான அம்சம்.
அப்படி என்றால் எது சரியான முறை?
பெண் மற்றும்
ஆண் இருவருடைய ஜாதகத்தில் உள்ள மற்ற அம்சங்களை பார்க்கவேண்டும். ஜாதகத்தில் உள்ள
மற்ற அம்சங்களை பார்க்கும்போதுதான் அந்த பெண்ணுக்கோ அல்லது அந்த ஆணுக்கோ என்ன
தோஷங்கள் இருக்கின்றது, குழந்தை பிறப்பிற்கு தடை எதுவும் இருக்கின்றதா, ஆயுள் தீர்க்கமாக
இருக்கின்றதா, குடும்பத்தினை கட்டி அணைத்து செல்லும் மனைவியாக இருப்பாரா போன்ற பல
விசயங்களை பார்க்க முடியும். ஒரு ஜாதகத்தின் மூலம் ஒரு ஆண் அல்லது பெண்ணினுடைய உண்மையான
குணாதிசயத்தை அறிந்து கொள்ள முடியும்.
அப்படி ஜாதகத்தினை ஒப்பிட்டு பார்த்து, அதில்
உள்ள கிரகங்களின் பார்வை, இருப்பிடம், சேர்க்கை போன்றவற்றை கணக்கில் கொண்டு, அதன்
பின்பு திருமண பொருத்தத்தையும் கணக்கில் கொண்டு, திருமணம் செய்யலாமா வேண்டாமா
என்பதை முடிவு செய்யவேண்டும்.
இது போன்று திருமண பொருத்தம் மற்றும் ஜாதக
பொருத்தம் இரண்டையும் ஒரு சேர பார்த்து, அதன் அடிப்படையில் செய்யப்படும்
திருமணங்கள் நீடித்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள