மகிழ்ச்சியையும் வெற்றியையும் தரும் அதிர்ஷ்டக்கல் அல்லது நவரத்தினம்

அதிர்ஷ்டக்கல் அல்லது நவரத்தினம் என்பது இன்று நேற்றல்ல காலா காலமாக நம் முன்னோர்கள் அணிந்து வந்து இருக்கிறார்கள். கழுத்தில் போடும் மாலையாகவும், காதில் அணியும் தோடாகவும், மூக்கில் அணியும் மூக்குத்தியாகவும், கையில் மோதிரமாகவும் அணிந்து வந்து இருக்கின்றனர்.

 நவரத்தின கற்களை ஏன் அதிர்ஷ்டக்கல் என்று கூறவேண்டும்?

அதிர்ஷ்டக்கல் அணிவதால் கஷ்டங்கள் தீர்ந்து நன்மை பயக்குமா?

சற்று விரிவாக இந்த கேள்விக்குண்டான பதிலை பார்ப்போம்.

இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களும் பிறக்கும் போது வானில் சுற்றிக்கொண்டு இருக்கும் கிரகங்கள் எந்த நிலையில் இருந்தனவோ அதற்க்கு தகுந்தாற்போல் அவனுடைய பெயர், வாழ்க்கையின் முக்கிய அம்சங்களான படிப்பு, வீடு, வாகனங்கள், நோய், மனைவி, திருமணம், சொத்துக்கள், வேலை,
தொழில் போன்ற அனைத்தும் அந்த கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப அவை நிலைகொண்டு இருந்த இடத்திற்கு தகுந்தவாறு  நன்மையோ தீமையோ செய்கின்றன.

ஒவ்வொரு கிரகமும் மனித வாழ்வில் ஏற்படும் நிகழும் அம்சங்களை தங்கள் பொறுப்பில் எடுத்து கொள்கின்றன. உதாரனத்திற்க்கு புதன் கிரகம் ஒருவருடைய படிப்பை தீர்மானிக்கின்றது. தேவ குரு எனப்படும் வியாழன் குழந்தை பாக்கியத்தை பற்றி தெரிவிக்கிறது.  திருமணத்தை தீர்மானிக்க சுக்கிரன் தீர்மானிக்கிறது. இதுபோன்று மனித வாழ்க்கையின் வேறு சில அம்சங்களையும் தீர்மானிக்கின்றது. நவகிரகங்களில் மீதம் உள்ள கிரகங்கள் மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் தீர்மானிக்கின்றன.

ஒவ்வொரு கிரகமும் மனிதர்களுடைய வாழ்க்கையின் அம்சங்களை நல்ல விதமாகவும் கெட்ட விதமாகவும் தீர்மானிக்கின்றது. ஒரே கிரகம் ஒருவருக்கு நன்மையையும் மற்றொருவருக்கு தீமையும் செய்கிறது. காரணம் கிரகங்கள் ஒரே இடத்தில் நிலையாக இருப்பதில்லை. அவை இருக்கும் இடத்திற்கு தகுந்தவாறு அவைகளின் குணமும் மாறுபடுகிறது. நன்மை செய்யும் கிரகம் இடத்திற்கு தகுந்தவாறு நன்மையையும் தீமையும் செய்யும். தீமை செய்யும் கிரகம் இடத்திற்கு தகுந்தவாறு நன்மையையும் செய்யும். இது அவர் அவர் பிறந்த நேரத்திற்கு தகுந்தவாறு மாறுபடும்.

  சரி இதுபோன்று கிரகங்களின் குணத்தை மாற்றி மனிதர்கள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்த முடியாதா? 

பொதுவாக ஒரு கிரகம் தீமை செய்கிறது சென்றால் அந்த கிரகம் ஒரு குறிப்பிட்ட மனிதருக்கு வலு குறைந்து உள்ளது என்று அர்த்தம்.
அதாவது வலு குறைந்த கிரகத்தின் தன்மையை அதிகரித்து தங்களின் வாழ்க்கையின் முக்கிய விசயங்களுக்கு அதாவது பண வரவு, தொழில் மேன்மை, நல்ல வேலை, நல்ல திருமணம், திருமண தடை விலக, சொத்து தடை நீங்க, வீடு வாகனம் வாங்க, நோய் நொடிகள்  நீங்க, படிப்பில் ஆர்வம் அதிகரிக்க போன்ற விசயங்களில் அதிர்ஷ்டகல்லை அனிந்து சாதகமாக பயன் படுத்தி கொள்ளலாம்.   
 
நவரத்தினங்கள் மாணிக்கம், முத்து, பவளம், blue sapphire, மரகதம், புஷ்பராகம், வைரம், வைடூர்யம், கோமேதகம் போன்றவையாகும்.
அதிர்ஷ்டகல்  அல்லது நவரத்தினம் என்பது ஒவ்வொரு கிரகத்திற்கும் சம்பந்தப்பட்டது.

மாணிக்கம் என்பது சூரியனுடன் தொடர்பு உடையது. முத்து  என்பது சந்திரனுக்கு சம்பந்தப்பட்டது. இது போன்று ஒவ்வொரு நவரத்தினமும் ஒவ்வொரு கிரகத்திற்கு சம்பந்தப்பட்டது.  ஒவ்வொரு நவரத்தினமும் வீட்டில் உள்ள dish antenna  போன்று அதாவது தொலை காட்சி நிகழ்சிகளை வீட்டில் உள்ள தொலை காட்சியில் தெரிய  செய்வது போன்று நவரத்தினங்கள் வானில் உள்ள கிரகங்களுடன் தொடர்பு கொண்டு அந்த கிரகத்தின் வலுவினை அதிகரிக்க செய்யும் தன்மை உடையவை.

ஒருவர் தாங்கள் பிறந்த நேரத்தில் அமைந்த கிரகங்களின் தன்மையை அறிந்து
அதேபோன்று நடைமுறையில் உள்ள கிரகங்களின் நிலையினை அறிந்து கிரகங்கள் வலு குறைந்து இருந்தால் அதற்க்கு தகுந்த நவரத்தினத்தை
அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை பெற்று அணிந்தால் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களான பண வரவு, தொழில் மேன்மை, நல்ல வேலை, நல்ல திருமணம், திருமண தடை விலக, சொத்து தடை நீங்க, வீடு வாகனம் வாங்க, நோய் நொடிகள்  நீங்கி , படிப்பில் ஆர்வம் அதிகரித்து மகிழ்ச்சியுடன் வாழலாம்.      

   
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள