ஜாதகமும் மனித வாழ்க்கையும்.Astrology facts and human life.

ஜாதகம் என்பது  ஒருவர் பிறக்கும் நேரத்தில் கிரகங்கள் எப்படி நிலைகொண்டிருந்தனவோ அந்த கிரகங்களின் நிலையினை தெரிவிக்கும் கட்டமாகும். நிலை என்றால் ஒருவருக்கு நன்மை செய்யுமா அல்லது தீமை செய்யுமா என்பதை தெரிவிப்பது. கிரகங்கள் அமைந்த கட்டத்திற்கேற்ப அந்த கிரகங்களின் குணத்திற்கு ஏற்ப மனிதர்களுடைய வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும்
நடக்கும்.

கெட்டது என்றால் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் கெட்டது நடக்கும் என்றால்
அவைகளால் பதிப்பு ஏற்ப்படதவாறு எந்த தெய்வத்தை வணங்கவேண்டும்
என்பதையும்
ஜாதகத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

கிரகங்கள் ஒரே இடத்தில் நிலைத்து நிற்பதில்லை.
ஒவ்வொரு இடமாக குறிப்பிட்ட கால கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கும்.
அப்படி நகரும் போது வாழ்க்கையில் சிலருக்கு நன்மையையும், சிலருக்கு தீமையையும் நடக்கின்றது.

உதாரணதிற்கு சனி கிரகமானது இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை
வானவெளியில் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடம் நகர்ந்துகொண்டு இருக்கிறது. அதைதான் நாம் சனிப்பெயர்ச்சி என்றும் சனிப்பெயர்ச்சி பலன்கள் என்றும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

சனி கிரகமானது எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தை வைத்து அந்த இரண்டரை வருடங்களில் ஒருவருடைய வாழ்க்கையில் நன்மையையும் தீமையும் செய்கின்றது.

தீமை என்பதைவிட அனுபவங்களை கற்று தருகிறது.
அந்த அனுபவங்களின் மூலம் வாழ்க்கை என்றால் என்ன என்பதை மனிதனுக்கு உணர்த்துகிறது. அதே போன்றுதான் எல்லா கிரகங்களும் நன்மையை செய்வதற்கும் அனுபவங்களை கற்று கொடுப்பதற்கும் இயற்கையால் படைக்கப்பட்டிருக்கிறது.

கிரகங்கள் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் அனுபவத்தைதான் தீமை என்று தவறாக கூறுகிறார்கள்.

மனித வாழ்க்கையில் நன்மையையும் தீமையும் அல்லது அனுபவங்கள் ஒருவருடைய ராசி, நட்சத்திரம், லக்கினம், மற்றும் பிறந்தபோது கிரகங்கள் இருந்த நிலைமை இவற்றை வைத்துதான் நடக்கும்.

கிரகங்கள்தான் மனிதனுடைய வாழ்க்கையில் நல்லதையும் கெட்டவைகளையும் நிர்ணயிக்கின்றன.

சூரியன் மற்றும் சந்திரன் என்பது நம்முடைய கண்ணுக்கு தெரியும் அல்லது
நாம் பார்க்க கூடிய கிரகங்கள். நம் கண்ணுக்கு தெரியாத மற்ற கிரகங்கள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி,
ராகு,  கேது.

சூரியனுடைய சக்தியால் நாம் பலவித
நண்மைகளை அனுபவிக்கிறோம் என்பதை நாம் ஏற்று கொண்டால்
கண்ணுக்கு தெரியாத மற்ற கிரகங்களும்  மனிதனுடைய வாழ்க்கையில் நன்மையையும்
தீமையையும் நிர்ணயிக்கின்றன
என்பதையும் ஏற்று கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கிரகமும் மனிதனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களையும் தங்கள் வசம் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு நன்மையையும் தீமையையும் செய்கின்றன. அதாவது

நல்ல தொழில், உத்தியோகம், தொழில் நல்ல லாபம், தாய், தந்தை, படிப்பு, குழந்தைகள், செல்வம், செல்வாக்கு, மனைவி, கணவன், ஆயுள் போன்றவற்றையும் இந்த கிரகங்கள் தான் நிர்ணயம் செய்கின்றன.

முன்னோர்கள் சொத்து கிடைக்கும் பாக்கியம், அவர்களுடைய ஆசி, நோய், கடன் போன்றவற்றகளை பற்றியும்
ஒருவருடைய ஜாதகத்தின் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஜாதகம் என்பது ஒரு மருத்துவ ஆலோசனை போன்றது. நோய் வாய் பட்டிருக்கும்போது
மருத்துவரை நாடி சென்று வியாதிக்குண்டான தீர்வு காண்பதை போலாகும்.
நமக்கு வரப்போகின்ற கஷ்டங்களை அறிந்து அதற்க்குண்டான வழிமுறைகளை தெரிவிப்பது ஜாதகமாகும்.

ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு கட்டுப்பட்டது. எனவே எந்த தெய்வத்தை நாம் வணங்கினால் நம் கஷ்டத்திலிருந்து தப்பிக்கலாம் என்பதையும் ஜாதகத்தின் மூலம் தேர்ந்து கொள்ளலாம்.

ஜாதகம் என்பது மனித வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்கமாகும். ஜோதிடம் என்ற அறிவியலின் வாயிலாக ஜாதகத்தின் பலனை நாம் தெரிந்துகொள்ளலாம்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள