ஜோதிடம் என்பது கிரகங்களின் அடிப்படையாக
கொண்டது. வானில் உலவும் ஒன்பது கோள்கள் அதாவது சூரியன், சந்திரன், செவ்வாய்,
புதன்,
வியாழன், சுக்ரன், சனி, ராகு, கேது போன்ற நவ கோள்களின் அடிப்படையாக கொண்டது. வான சாஸ்திரங்களின் அடிப்படியாக கொண்டது. மேலை நாட்டவர்கள் இதனை astronomy என்று கூறுவர்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள வியாழன், சுக்ரன், சனி, ராகு, கேது போன்ற நவ கோள்களின் அடிப்படையாக கொண்டது. வான சாஸ்திரங்களின் அடிப்படியாக கொண்டது. மேலை நாட்டவர்கள் இதனை astronomy என்று கூறுவர்.
இந்த நவகோள்கள் அனைத்தும் மனித குலத்திற்கு இந்த
உலகத்தில் வாழும் உயிர் இனங்களுக்கு நன்மை செய்யவே படைக்க பட்டு இருக்கின்றன.
எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக பூமியில் வாழும் புல், பூண்டு, பூச்சிகள், பறவைகள்,
மிருகங்கள், மனித இனம், போன்ற அணைத்து உயிர் இனங்களுக்கும் நன்மை செய்து கொண்டு
இருக்கின்றன.
நாம் அனைவரும் நம் கண்ணுக்கு எதிராக அன்றாடம்
நமக்கு பலன் அளிக்கும் சூரியனுடைய சந்திரனுடைய பலன்களை அனுபவிக்கிறோம். வெயில்,
இரவில் ஒளி, குளிர்ச்சி போன்றவற்றை கண்கூடாக அனுபவிக்கிறோம். சூரியனின் ஒளியினால்
மனித இனம் மட்டும் அன்றி தாவரங்கள் போன்றவையும் பயன் பெறுகின்றன.
சூரியனுடைய பலனும், சந்திரனுடைய பலனும் எந்த
மதத்திற்காக அல்லது ஒரு இனத்திற்காக சொந்தம் என்று கூற முடியுமா? நிச்சயம்
முடியாது.
சூரியன் சந்திரனை போன்று மற்ற கிரகங்களும் மனித
இனத்திற்காக நன்மை செய்வதற்காக படைக்க பட்டு இருக்கின்றன. சூரியன், சந்திரன்,
செவ்வாய், புதன், வியாழன், சுக்ரன், சனி, ராகு, கேது போன்ற அணைத்து கிரகங்களும்
ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் பிறக்கும் போது எப்படி நிலை கொண்டு இருந்தனவோ அதற்கு
தகுந்தாற்போல் மனித வாழ்க்கையின் அணைத்து அம்சங்களையும் நிர்ணயிர்க்கின்றன.
சூரியனையும், சந்திரனையும் நம் கண்ணால் தினசரி
காண்பதால் அவை புரியும் நன்மை தீமைகளை நாம் ஏற்று கொள்கிறோம். மற்ற கிரகங்கள்
சாதரணமாக நம் கண்களுக்கு புலப்படாததால் அவை செய்யும் நன்மையோ தீமையோ நமக்கு
தெரிவதில்லை.
ஆனால் வான சாஸ்திரத்தில் திறமைசாலிகளான நம்
முன்னோர்கள் பல நூறு வருடங்களுக்கு முன்பே ஒவ்வொரு கிரகத்தின் தன்மை என்ன, நன்மை
என்ன, தீமை என்ன என்று வரையறுத்து வைத்துள்ளனர்.
சந்திர கிரகணம், சூரிய கிரகணம் என்று நிகழும்
என்று எந்த அறிவியலும் இல்லாமல் துல்லியமாக கணித்து வந்தனர். இன்று சந்திர
கிரகணமும் சூரிய கிரகணமும், என்று புயல் வரும் என்று மழை வரும் என்று செயற்கை
கோளின் துணையுடன் என்று நிகழும் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் ஒரு
வருடத்தில் என்று மழை வரும், புயல் வரும் மிக துல்லியமாக பஞ்சாங்கம் மூலம் கணித்து
வைத்து இருந்தனர்.
வானில் உலவும் ஒவ்வொரு கிரகமும் மனிதர்களின்
வாழ்க்கையில் நிலவும் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொறுப்பு ஏற்கின்றன. ஒவ்வொரு
மனிதர்களும் பிறக்கும்போது கிரகங்கள் எந்த நிலையில் இருந்தனவோ அதற்க்கு
தகுந்தாற்போல் மனித வாழ்க்கையில் நிகழ்வுகள் நிகழ்கின்றன.
மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் என்பது அவனுடைய
குணம், பண வரவு, குடும்ப அமைப்பு, சகோதர சகோதரிகள் நிலை, வீடு, வாகனம் யோகம்,
குழந்தை பாக்கியம், கடன், நோய், எதிரிகள் தொல்லை, கணவன் மனைவி அமையும் விதம், ஆயுள்,
பூர்வீக சொத்து, தொழில், வேலை அமைப்பு, லாபம் நஷ்டம் அமைப்பு, தாம்பத்திய சுகம்,
பயணங்கள் போன்ற இன்னும் எண்ணற்ற நிகழ்வுகள்.
இதைதான் அதாவது மனிதன் பிறக்கும்போது இருந்த
கிரக நிலைகளை ஜாதக கட்டங்களில் குறித்து அதற்க்கு தகுந்தாற்போல் பலன்
சொல்லபடுகிறது.
சரி நாம் இப்போது விசயத்திற்கு வருவோம்? ஜோதிடம்
என்பது ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தம் என்பது தவறு என்று தெரிவிப்பதை போல இன்று
அமெரிக்க போன்ற மேலை நாடுகளில் ஜோதிட மேதைகள் இருக்கின்றனர். இணையத்தை
பார்த்தீர்கள் என்றால் இந்த உண்மை தெரியும்.
ஆனால் ஒன்று இந்த ஜோதிடத்தை இங்கிருந்துதான்
மேலை நாட்டிற்க்கு எடுத்து சென்றுள்ளனர் என்பதற்கு ஒரு உதாரணம்.
சீரோ என்ற மேலை நாட்டவர் இந்தியாவில் வந்து
தங்கி பல ஜோதிடர்களிடம் தங்கி அவர்களிடம் இந்த ஜோதிட சாஸ்திரத்தை கற்றுக்கொண்டு
அதில் உள்ள அறிவியல் உண்மைகளை ஏற்று கொண்டு மேலை நாட்டில் ஜோதிடம் சம்பந்தப்பட்ட
விஷயங்கள் பரவுவதற்கு காரணமாக இருந்தார். சீரோ இந்து மதத்தை சார்ந்தவர் அல்ல அவர்
வேற்று மதத்தை சார்ந்தவர்.
நம் முன்னோர்கள் ஒவ்வொரு கிரகத்தின் தன்மையையும்
அந்த காலத்திலேயே துல்லியமாக கணித்து வைத்து இருந்தனர். உதாரனத்திற்க்கு செவ்வாய் கிரகம்
என்றால் சிவப்பு நிறத்திற்கு உரியது என்று அந்த காலத்திலேயே கணித்து
வைத்திருந்தனர். ஆனால் இன்று மேலை நாட்டு விஞ்ஞானிகள் பல கோடி ருபாய் செலவு செய்து
செவ்வாய் கிரகத்தின் தன்மை சிவப்பு என்று கண்டு பிடித்து இருக்கிறார்கள். சனி
கிரகம் என்றால் நீலம் என்று அந்த காலத்திலேயே அறிந்து வைத்து இருந்தனர். அதனால்தான்
பல நூறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட திருநள்ளாறு என்னும் சனிஸ்வரன் கோயிலில்
வானிலிருந்து சனிகிரகத்தினுடைய ஊதா நிற கதிர்களை கோபுரம் வழியாக உள்வாங்கி கோயிலில்
பரவசெய்து சனி கிரகத்தினால் ஏற்படும் தீமைகளை குறைக்கின்றது.
இது போன்று ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு தனி தன்மை
கொண்டது. அவை ஒரு மனிதன் பிறக்கும்போது அந்த கிரகங்கள் எந்த நிலையில் இருந்தனவோ
அதற்க்கு தகுந்தாற்போல் நன்மையோ தீமையோ செய்கின்றன.
ஜோதிடம் என்பது வான சாஸ்திரத்தின் அடிப்படையாக
கொண்டது அறிவியல் சார்ந்தது என்று இன்று பலரும் ஒப்பு கொண்டுவிட்டனர். குறிப்பாக
மேலை நாட்டவர்கள் சாதாரணமாக எந்த ஒரு அறிவியல் சான்றும் இல்லாமல் எதையும் ஒத்துகொள்ளமாட்டார்கள்.
இன்று அவர்கள் ஜோதிடத்தை நம்ப ஆரம்பித்ததின் விளைவாக பல ஜோதிடம் என்பது அறிவியல்
சார்ந்த ஒரு கலை என்று நிருபணமாகிறது.
பொதுவாக எந்த ஒரு அறிவியல் விசயமும் அல்லது
கண்டு பிடிப்பும் மனித இனத்திற்கு நன்மை செய்யுமா என்ற அடிப்படையில் பார்க்க
வேண்டுமே ஒழிய அதை கண்டுபிடித்தவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்று பார்க்க கூடாது
அல்லது அதை கண்டுபிடித்த அந்த மதத்திற்குதான் சொந்தம் என்று முடிவுக்கு
வரக்கூடாது.
அப்படி பார்த்தால் தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார
விளக்கினை கண்டு பிடித்தார் என்பதற்காக மின்சார விளக்கு அவர் சார்ந்த மதத்திற்கு மட்டும்தான் சொந்தம் என்றால் மற்றவர்கள் அதன்
பயனை அனுபவிக்காமல் இருக்கிறார்களா? அல்லது ஏற்க மறுக்கிறார்களா?
எந்த ஒரு அறிவியல் உன்மையும் ஜாதி, மதம்,
இனங்களுக்கு அப்பாற்பட்டவை. அவை எந்த ஒரு சாதிக்கும், மதத்திற்கு, இனத்திற்கும்
சொந்தம் கிடையாது. அனைவருக்கும் பொது.
அதை போன்றுதான் ஜோதிடமும் மனித இனத்திற்கு நன்மை
செய்யும் ஒரு கலை.
மருத்துவத்தின் மூலம் ஒருவருக்கு என்ன வியாதி
என்று கண்டுபிடித்து அதற்க்கு தகுந்தாற்போல் சிகிச்சை எடுத்து கொள்கிறோமோ அதை
போன்று மனிதர்களுக்கு கிரகங்களினால் ஏற்படும் நன்மை தீமைகளை அறிந்து அதற்க்கு தகுந்தாற்போல்
சரி செய்து கொள்ள உணர்த்தும் ஒரு கருவி ஜோதிடம்.
ஜோதிடம் என்பது ரோட்டில் இருக்கும் speed breaker
போன்றது. வாகனங்களில் செல்வோரை ஒரு speed breaker எப்படி எச்சரிக்கை செய்கிறதோ
அதனை போன்று வாழ்க்கையில் நிகழும், நிகழ போகும் நிகழ்வுகளை எப்படி சரி செய்யவேண்டும்
என்று உணர்த்தும் அல்லது எச்சரிக்கை செய்யும் ஒரு கருவி.
எப்படி ஒரு மின்சார விளக்கு மனித இனங்களுக்காக
கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அறிவியல் சாதனை, அந்த அறிவியல் சாதனை எல்லா சாதி, மதம்,
இனம் அனைவருக்கும் பொதுவானது என்பது போல, ஜோதிடமும் மனித இனங்களுக்கு நன்மை
செய்வதற்காக உருவாக்கப்பட்ட கலை என்பதும் இந்த கலை எந்த சாதிக்கும், எந்த
மதத்திற்கும், எந்த இனத்திற்கும் சொந்தம் அல்ல அனைவருக்கும் பொது என்பதே உண்மை.