தமிழில் தியான பயிற்சி பெற

தேவையில்லாத நினைவுகள், பயம், பொறாமை, தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத மனப்பான்மை இவை அனைத்துக்கும் காரணம் ஒருவருடைய மனதுதான்.

இவை அனைத்தும் பின்பு மறக்கமுடியாத கவலைகளாகவும், tension ஆகவும்,
மாறி நம்முடைய குடும்பத்திலும் நாம் தொழில் பார்க்கும் இடத்திலும் கோபமாகவும், தவறாக முடிவெடுக்கும் நிலைமையும் ஏற்ப்பட காரணமாகிறது.

மன அமைதி என்பது ஒருவருக்கு நிச்சயம் தேவை.
மன அமைதி இல்லை என்றால் வாழ்க்கை சிறக்காது. மகிழ்ச்சிகரமாக இருக்காது.
குடும்பம், தொழில் இவை அனைத்திலும் மன அமைதியின்மை இருக்காது.

மன அமைதி இல்லை என்றால் வெறுப்பு, மன வியாதி, திருப்தியின்மை, ஏமாற்றம், கவலைகள் இவை அனைத்தும் வாழ்க்கையில் பிரதிபலிக்கும்.

இது போன்று மன அமைதியின்மையை களைந்து அல்லது போக்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா?
நிச்சயமாக முடியும்.
ஆம் தியானத்தின் மூலமாக நிச்சயமாக மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.  
தியானம் செய்வதின் மூலமாக தேவை இல்லாத வெறுப்பு, மன வியாதி, திருப்தியின்மை, ஏமாற்றம், கவலைகள் 
இவற்றிலிருந்து விடுபடலாம்.   
தியானம் செய்வதின் மூலம் குடும்பம், தொழில் இவை அனைத்திலும் மன அமைதி கிடைக்கும்.

தியானம் செய்வதின் மூலம் நம் குடும்பத்திலும், நாம் தொழில் செய்யும் இடத்திலும் சரியான முடிவெடுக்கலாம்.
தியானம் செய்வதின் மூலம் தேவையில்லாத நினைவுகள், பயம், பொறாமை, தோல்வியை தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை இவற்றை பெறலாம்.  

தியானம் செய்வதின் மூலமாக உங்களுடைய மனதை சரியான வழிக்கு அழைத்து செல்லலாம். உங்களுடைய மனது சரியான வழியில் செல்லும்போது உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 
மன உபாதை, உடல் உபாதையிலிருந்து விடுபடலாம்.  
இயற்கையாகவே மனது சுத்தமானதுதான். நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்தான் மனதை அசுத்தபடுத்துகிறது. 
மனது அசுத்தபபடும் போதுதான்  தேவை இல்லாத நினைவுகள், பயம், பொறாமை, ஏமாற்றங்களில் இருந்து விடுபடாத நிலைமை, மறக்க முடியாத கவலைகள், முன்கோபம், தவறாக முடிவெடுத்தல் போன்ற அனைத்திற்கும் காரணமாகிறது.   
மனது குழப்பமடையும் போது நாம் பலவிதத்திலும் அவஸ்தைபடுகிறோம். மன குழப்பத்திலிருந்து விடுபட்டு சரியான பாதையில் செல்ல  தியானம் உதவுகிறது.   
தெளிவான மனநிலைதான் நாம் பல அவஸ்தைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சிகரமான வாழ்க்கையும், மன அமைதியும் பெறுவதற்கு உதவுகிறது.  
எளிய மன பயிற்சியின் மூலமாக தெளிவான மன நிலையை அடையலாம். இந்த மன பயிற்சியைத்தான் நாம் தியானம் என்று கூறுகிறோம். 
ஏனைய பயிற்சி போன்று தியானம் செய்வதின் மூலம்   நீங்கள் உங்கள் உடலை வருத்தவேண்டியதில்லை. கடுமையான உடற்பயிற்சி செய்ய வேண்டியதில்லை
ஒரு நாளில் ஒரு சில மணிதுளிகளை ஒதுக்கி உங்கள் மனதை தியானம் என்ற பயிற்சி மூலமாக ஒழுங்கு படுத்தும்போது உடலாலும், மனதாலும் பலவிதமான பலன்களை அடையலாம்.
தியானத்தின் மூலமாக உடலாலும், மனதாலும், பல நண்மைகளை அடையலாம் என்பதற்கு விஞ்ஞானபூர்வமான உண்மை என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   
 தியானம் செய்வதற்கு வயது வரம்பு கிடையாது. 
குடும்ப பெண்கள், மாணவர்கள், மாணவிகள், உத்தியோகத்தில் இருப்பவர்கள், அலுவலகத்திற்கு செல்வோர், தொழில் செய்பவர்கள், அனைவரும் தியானம் செய்து பயன் பெறலாம்.

தியானத்தின் மூலமாக தேவையில்லாத நினைவுகள், பயம், பொறாமை, கவலைகள், முன்கோபம், தவறான முடிவெடுத்தல் போன்றவற்றிலிருந்து விடுபடலாம். 
தியானம் செய்வதால் மனதிற்கும், உடலுக்கும் நல்லதொரு அமைதி ஓய்வு கிடைக்கிறது. தியானத்தினால் கிடைக்கும் அமைதியும், ஓய்வும் தூக்கத்தினால் கிடைக்கும் ஓய்வை விட மிகவும் பயனுள்ளதாகும்.
தியானம் செய்வதினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. தியானம் செய்வதற்கு முன்பும், தியானம் செய்வதற்கு பின்பும் சிலரை வைத்து ஆராய்ச்சி செய்ததின் விளைவாக இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
ஒருவருடைய வாழ்க்கையின், தொழில் உள்ள குறிக்கோள்களை அடைய தியானம் பெரிதும் உதவி புரிகிறது.  
ஒருவர் நல்ல மன நலம் மற்றும் உடல் நலம் பெற தியானம் என்பது சரியான மருந்தாகும்.
தியானம் என்பது ஒருவருடைய மனதை குணப்படுத்த பக்க விளைவுகள் இல்லாத சரியான மருந்தாகும்.
தியானத்தை தொடர்ந்து செய்யும்போது நல்ல உடல் ஆரோக்கியமும், தெளிவான மன நிலையையும் அடையலாம் என்று நம்பலாம்.  
இந்த வலைப்பதிவின் நிறுவனர் ஒரு அனுபவமிக்க தியான பயிற்சியாளர். பலருக்கு தியானப்பயிற்சி கற்று தந்து  வளமான வாழ்க்கையை  ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.