அதிர்ஷ்டதிர்க்கும் வெற்றிக்கும் உங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கவேண்டும்?


குழந்தைகளுக்கு பெயர் (Hindu baby names) வைப்பது என்பது நம்முடைய இந்து கலாச்சாரத்தில் மிக முக்கியமான வைபவமாகும்.

நம்முடையமுன்னோர்கள் இந்த பெயர் சூட்டும்(baby naming function) வைபவத்தை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே தங்கள் குடும்ப உறுப்பினர்கள்,உறவினர்கள் புடைசூழ நடத்துவார்கள்.

நம்முடைய கலாச்சாரத்தில் நாம் கடைபிடிக்கும் அணைத்து பழக்கவழக்கங்கலுமே நம்முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்தபழக்கங்கள் ஆகும். அனைத்துமே அறிவியல் சார்ந்த உண்மையும் அவற்றில் அடங்கி இருக்கும்.

ஒரு குழந்தையை(baby name) பெயர் சொல்லி அழைக்கும்போது
அந்த பெயரானது காற்றில் கலந்து இருக்கும் இயற்க்கை சக்திகளுடன் ஒத்துசெல்லும் விதத்தில் நம்முடைய பண்டைய கலாச்சாரமான ஜோதிடத்தையும் (astrology),எண்கணிதத்தையும்(numerology)கலந்து
பெயர் வைப்பர்கள்.

ஜோதிடமும் எண்கணிதமும் (astrology and numerology) இயற்க்கை சக்திகளான கிரகங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.கிரகங்கள் இல்லையென்றால்
இந்த உலகமே இல்லை.

சற்று நினைத்து பாருங்கள் சூரியன் என்ற கிரகம்(planet sun) இல்லையென்றால் சூரிய ஒளி கிடையாது. சூரிய ஒளி இல்லையென்றால் மனிதஇனம் அழிந்துவிடும். புல்பூண்டுகள், செடிகள்,கொடிகள் தழைக்காது முளைக்காது. 

சந்திரன்(planet moon) இல்லையென்றால் எப்போதுமே பகல்தான் இரவு என்பதே இருக்காது.

இந்த இரண்டு கிரகங்களுக்கே இப்படி என்றால் மீதமுள்ள 7 கிரகங்களும் இல்லையென்றால் நிலைமை என்னவாகும்

வானில் சுற்றிகொண்டிருக்கும் இந்தகிரகங்கள்தான் தங்களுக்கண்டான சக்தியை பூமியில் உமிழ்ந்து கொண்டிருக்கின்றன.

பூமியில் சுற்றிகொண்டிருக்கும் கிரக சக்திகளுக்கேற்றவாறுதான் ஒவ்வொரு மனிதனுடைய சொல்,செயல்,சிந்தனைஅமைந்திருக்கும்.

ஒரு மனிதன் தாயுடைய வயிற்றிலிருந்து முதல் முதலாக வெளிவந்து இந்த உலகத்தை சுவாசிக்கும்போதே 9 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டுவிடுகிறான்.

அவன் பிறக்கும் போது நிலைகொண்டிருக்கும் கிரகங்களுக்கு
ஏற்றவாறு அவனுடைய சொல், செயல், சிந்தனை அனைத்தும்
அவன் இந்த உலகத்த��விட்டு மறையும் வரை தொடரும்.

இதில் குழந்தைகளின் பெயர் (babynames)என்பது அந்த குழந்தைக்கு
வைக்கப்படும் பெயரை பொறுத்து சொல், செயல்,சிந்தனைகள்
சாதகமாகவோ,பாதகமாகவோ நடக்கின்றது.

இந்த உலகத்தின் இயக்கமே கிரகங்களின் சக்தியால் மட்டுமே என்பதால் குழந்தைகளுக்கு(baby name) வைக்கப்படும் பெயரை அவர்கள் பிறக்கும்போது சஞ்சரித்து கொண்டிருந்த கிரக சக்திகளுக்கேற்ப வைத்தோம் என்றால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் அந்த கிரகங்களின் அணுக்கரனையால் மிகவும் சந்தோசமாகவும் வளமாகவும்
மனஅமைதியுடனும் வாழ்வார்கள் என்பதே உண்மையாகும்.

இந்த உலக இயக்கமே வானில் சுற்றி கொண்டிருக்கும் கிரகங்களின் அடிப்படையில்தான் இருக்கும்.

கிரகங்களின் சக்திகள் பூமியெங்கும் வியாபித்திருக்கின்றன. முக்கிய கிரகங்களான சூரியன்,சந்திரன்,வியாழன்சனி,ராகு,கேது, போன்ற கிரகங்களின் சக்திகள் பூமியில் கலந்திருக்கின்றன.

இப்படி காற்றில் கலந்திருக்கும் சக்திகள் ஒவ்வொரு மனிதனுடைய
செயலையும் அந்தந்த கிரகசக்திகேற்ப நடத்துகின்றன.

 உதாரணமாக சூரியனுக்கும் மனிதனுடைய தொழிலுக்கும்,அரசியல் வாழ்க்கைக்கும் சம்பந்தம் உண்டு.

சந்திரனுக்கும் மனிதனுடைய சிந்தனை சக்திக்கும் தொடர்புஉண்டு.

வியாழன் என்று சொல்லபடுகின்ற குருவிற்கும் மனிதனுடைய நல்ல நடத்தைக்கும் தொடர்பு உண்டு.

இதுபோன்றுமீதமுள்ளகிரகங்களான செவ்வாய், புதன், சுக்கிரன்
மனிதனுடைய சொல், செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்தவுடனேயே வானில் சுற்றி கொண்டிருக்கும் கிரகங்களின் புவி ஈர்ப்பு சக்திக்குஆளாகிவிடுகின்றது.

அதாவது அந்த குழந்தை பிறக்கும் போது வானில் உள்ள கோள்கள் எந்தநிலையில் இருக்கின்றனவோ அதன் அடிப்படையில்தான் அந்த
குழந்தையினுடைய வாழ்க்கை அமையும்.

பிறக்கும்போது புதன்கிரகம் வலுவாக இருந்தால்அந்த குழந்தை நல்ல அறிவாளியாக இருக்கும்.
மூளையை வைத்தே அந்த குழந்தைபெரியவனாகி பிழைத்துக்கொள்ளும்.

பிறக்கும் போது சந்திரன் வலுவாக இருந்தால் கலைத்திறனை
வைத்து அந்த குழந்தையினுடைய வாழ்க்கை பிற்காலத்தில்அமையும்.

இதுபோன்று பிறக்கும்போது ஒவ்வொரு கிரகங்களின் நிலையினைவைத்து அந்த குழந்தையினுடைய பிற்காலவாழ்க்கை அமையும்.

சரிகுழந்தையினுடைய பெயருக்கும்(Baby name) கிரகங்களுக்கும்
என்ன சம்பந்தம்?

ஆம் சம்பந்தம் உண்டு.

ஒரு குழந்தையினுடைய பெயரை (baby name)உச்சரிக்கும்போது
உண்டாகும் ஒலியினால் காற்றில் உலவிகொண்டிருக்கும்
கிரக அலைகள் சம்பந்தம் உண்டாகி அதிர்வுகள் ஏற்படுகின்றன.
இந்த அதிர்வானது நல்லஅதிர்வை உண்டாக்கினால் அந்த குழந்தைக்கு நண்மை உண்டகும்.

தீய அதிர்வை உண்டாக்கினால்அந்த குழந்தைக்கு தீமை உண்டாகும். இது குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் பெரியவர்களுக்கும் பொருந்தும்.

சரி நல்லஅதிர்வு தீய அதிர்வு எப்படிஉண்டாகிறது.ஒருமனிதன்
பிறக்கும்போது இருந்த கிரகங்களின் அடிப்படையில் பெயரை வைக்கும்போது அந்த பெயரானது காற்றில் உலவிக்கொண்டிருக்கும் அதிர்வலைகலுடன் கலந்து அவனுக்கு சாதகமான பலன்களை செய்யும்.

அப்படி பெயர்வைக்காத பட்சத்தில் அவனுக்கு பாதகமான பலன்கள் உண்டாகிறது.

இதன் அடிப்படையில்தான் நம் முன்னோர்கள் குறிப்பாக தமிழ்மக்கள் குழந்தை பிறந்தவுடன் கிரகநிலைகளை கொண்டு ஜாதகம்( horoscope) எழுதி
அதன் பின்பு எண்கணிதத்தையும் அடிப்படையாக வைத்து
நம் தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைத்துவந்திருக்கிறார்கள்.

இது ஒருஅறிவியல்உண்மையும்கூட. அதை அந்தகாலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர். கடைபிடித்தும் வந்திருக்கின்றனர்.

உங்களுடைய அப்பா,அம்மா,தாதா,பாட்டி இவர்களுடைய பெயர்களெல்லாம் நிச்சயமாக ஜாதகம்( horoscope)மற்றும் எண்கணித(numerology) அடிப்படையில்தான் அமைந்திருக்கும்.

ஜாதகம் மற்றும் எண்கணித அடிப்படையில் பெயர் வைப்பது என்பது
குறிப்பாக நம் தமிழ் மக்கள்(tamil peoples) காலம் காலமாக கடைபிடித்து வரும் பழக்கமாகும்.

குழந்தை பிறந்த பின்பு அந்த(tamil baby name) தமிழ் குழந்தைக்கு பெயர் சூட்டுவதையே ஒரு விழாவாக அவர் அவர்கள் சக்திகேற்ப ஒருகுறிப்பிட்ட
நல்ல நாளில்அந்த குழந்தை பிறந்தநேரம், நாள் இவைகளை
அடிப்படையாக வைத்து அந்த குழந்தைக்கு ஜாதகம்(astrology) மற்றும் எண்கணித(numerology)அடிப்படையில் பெயர்வைப்பார்கள்.

ஆனால் என்று நவீனகலாச்சாரத்தின் அடிப்படையில்
தமிழுக்கு சம்பந்தமே இல்லாத பெயர்களை அழகுக்காகவும்
மற்றவர்கள் பாராட்டவேண்டும் என்ற அடிப்படையில்
நம் (Tamil babies name) தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது அது அந்த குழந்தைக்கு பெற்றோர்கள் செய்யும் பாதக செயலாகும்.