புத்தகங்கள் என்பவை மனிதர்களின் அறிவு
விருத்திக்கு மிக பெரிய பங்காற்றுகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள
பொதுவாக ஒரு துறையில் வல்லுனர்களாக
இருப்பவர்கள்தான் அவர்கள் சார்ந்த துறையை பற்றி புத்தகங்கள் எழுத முடியும். சமையல்
கலையில் வல்லுனர்களாக இருப்பவர்கள் சமையல் செய்வது எப்படி என்று புத்தகம் எழுதுவார்கள்.
கல்லூரி களில் ஒரு துறையில் வல்லுனராக இருப்பவர்கள் அவர் சார்ந்த துறையை பற்றி மாணவர்கள்
பயன் பெரும் விதத்தில் புத்தகம் எழுதுவார்கள். இதுபோன்று விஞ்ஞானம், கணிதம், கலை,
வியாபாரம், marketing, போன்ற துறையில் உள்ளவர்கள் அவர்கள் தாங்கள் சார்ந்த துறைகளை
பற்றி மற்றவர்களுக்கு பயன் பட வேண்டும் என்று புத்தகம் எழுதுவார்கள்.
இவைகளை தவிர மக்களுக்கு பிடித்தமான தலைப்புகளில்
வார பத்திரிக்கைகள், மாத பத்திரிக்கைகள் போன்ற பத்திரிக்கைகளில் எழுதுபவர்களும்
இருக்கின்றனர். பெண்களுக்கு என்று பத்திரிக்கை, குழந்தைகளுக்கு என்று பத்திரிக்கை,
சினிமா ரசிகர்களுக்கு என்று பத்திரிக்கை, பொழுதுபோக்கு அம்சங்களுக்கு என்று
பத்திரிக்கை என்று பல வித பத்திரிக்கைகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.
சரி, இதுபோன்று எழுதுபவர்கள் எல்லாம் பொழுது
போக்கிற்காக எழுதுகின்றனரா? இருக்கலாம் ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும்
குறைவாகத்தான் இருக்கும்.
பெரும்பாலானவர்கள் தங்கள் அனுபவம், திறமை
மற்றவர்களுக்கு பயன் பட வேண்டும் என்ற நோக்கத்திலும், அதே சமயத்தில் பொருளாதார
ரீதியாக தாங்களும் புத்தகம், பத்திரிக்கை வெளியிடுவதின் மூலமாக ஒரு தொகை
சம்பாதிப்பதற்காகதான் என்று சொன்னால் அதில் தவறு ஒன்றும் இல்லை.
ஆனால் புத்தகம் எழுதும் எல்லோரும் பத்திரிக்கை
வெளியிடுபவர்கள் எல்லோரும் நல்ல வருமானமும் புகழும் அடைய முடியுமா?
ஒரு நிஜ உதாரணத்தை இங்கு கூறுகிறேன். உங்களுக்கு
எல்லாம் தெரியும் Harrypotter என்ற நாவல்கள் சமீபத்தில் உலக அளவில் புகழ் பெற்ற
நாவல்கள், அந்த நாவல்களை எழுதிய ஆசிரியர் J.K.Rowling என்ற
பெண்மணி ஆவார். இங்கிலாந்து நாட்டில் 1965
ஆம் ஆண்டு பிறந்த அவர் 1999 ஆம் ஆண்டு முதல் புகழ் பெற்ற Haary Potter நாவல்களை எழுதி இன்று உலகின் எழுத்து மூலம் தன்னுடைய
புத்தகங்கள் மூலம் சம்பாதித்து கொண்டு இருக்கும் மிக பெரிய கோடீஸ்வரி ஆவார்.
உலகில் எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கின்றனர்,
ஆனால் எல்லோராலும் J.K Rowling போன்று புகழ் பெற்ற எழுத்தாளர்கள் ஆக முடியாவிட்டாலும்,
ஓரளவு ஆவது புகழ் பெற முடிவதில்லையே ஏன்?
ஜோதிட ரீதியாக இதற்குரிய விளக்கம் என்ன?
ஒருவர் புத்தகம் எழுதி அதை வெளியிட்டு புகழ்
மற்றும் பணம் பெற வேண்டும் என்றால், ஏதாவது ஒரு துறையில் நல்ல நிபுணத்துவம்
இருக்கவேண்டும். அடுத்து சமயோசிதபுத்தியும் நல்ல கற்பனை திறனும் வேண்டும்.
அதற்க்கு அடுத்து எழுதும் புத்தகத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து
அதற்குரிய லாபம் கிடைக்க வேண்டும்.
இவை அனைத்தும் ஒருவர் பிறக்கும்போது அமைந்த கிரக
நிலைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். அந்த விதத்தில் ஒருவருடைய ஜாதகத்தில்
வித்யாகாரகன், மாத்ருகாருகன், தேவ குரு, தன ஸ்தானாதிபதி, லாபாதிபதி,
கர்மச்தானதிபதி போன்றவை நல்லவிதத்தில் அமைய பெற்று, சேர்க்கை, பார்வை போன்றவற்றில்
பாதிக்கபடாமல் இருந்தால் ஒருவர் நிச்சயமாக புத்தகங்கள் எழுதி, பத்திரிக்கைகள்
வெளியிட்டு புகழும், பணமும் பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.