வேலை பார்க்கவேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்.
புருஷ லக்ஷணம் என்றால் ஒருவர் வேலை பார்க்கவேண்டும்.
பெரும்பாலனவர்கள் தங்களுடைய வாழ்க்கையை
நகர்த்துவதற்காக ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பார்க்கும் வேலை அவர்கள் தகுதிக்கேற்ற
வேலையாகவும், அனுபவத்திற்கு ஏற்ற வேலையாகவும் இருந்தால் மனமுவந்து அந்த வேலையை
செய்வார்கள். செய்யும் வேலைக்கு தகுந்தவாறு நல்ல ஒரு திருப்தியான வருமானத்தையும்
ஈட்டுவார்கள்.
ஒருவர் தான் செய்யும் வேலை பிடித்து விட்டது என்றால் அந்த வேலையிலேயே நிரந்திரமாக இருந்து சம்பாதித்து கொண்டு இருப்பார்கள். ஒரு வேலை பிடித்து அதில் ஒருவர் நிரந்திரமாக இருக்க வேண்டும் என்றால் அந்த வேலைகுண்டான அனுபவம், திறமை, அறிவு எல்லாம் நிரம்ப இருந்தால்தான் அவரால் அந்த வேலையில் சந்தோசமாகவும், நிரந்தரமாகவும் இருக்க முடியும்.
ஆனால் சிலர் பார்த்தீர்கள் என்றால் அடிக்கடி
வேலையை மாற்றி கொண்டு இருப்பார்கள். எந்த ஒரு வேலையிலும் நிரந்திரமாகவே இருக்க
மாட்டார்கள். காரணம் அவர்களுக்கு பிடித்தமில்லாத வேலையில் ஏதோ வலுகட்டாயமாக வேலை
செய்தாக வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தின் பேரில் வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.
சரி, ஒருவருக்கு நல்ல வேலை கிடைக்க
வேண்டுமென்றால் ஜோதிட ரீதியாக என்ன தீர்வு?
ஒருவருக்கு நல்ல வேலை அமைய வேண்டும் என்றால்
முதலில் அவருடைய உயிர் ஸ்தானம் கெட்டு போகாமல் இருக்க வேண்டும். கெட்டு போகாமல்
என்றால் பார்வை, சேர்க்கை, இருப்பிடம் போன்றவைகளால் அவை பாதிக்கப்பட்டு
இருக்ககூடாது.
அடுத்து அவருடைய உயிர் ஸ்தானாதிபதி கர்ம
ஸ்தானத்தில் நல்ல வலுவுடனும், பார்வை, சேர்க்கை, இருப்பிடம் போன்றவற்றினால்
பாதிக்கபடாமல் இருந்தால் அவருக்கு மன திருப்தியான வேலை கிடைக்கும்.
இவைகளை தவிர இன்னும் சில முக்கிய ஸ்தானங்கள்
பாதிக்க படாமல் இருந்தால் நல்ல சம்பளமும், கிடைக்கும் அந்த சம்பளம் நல்ல உபயோகமான
காரியங்களுக்கும் செலவாகும். சேமித்து வைக்க வாய்ப்பும் உருவாகும்.
சரி இது போன்று அமைப்பு இல்லாதவர்களுக்கு நல்ல
வேலை கிடைக்காதா?
ஏன் கிடைக்காது? கிடைக்கும்.
பாதிக்கப்பட்ட கிரகங்களுக்கு உரிய வழிமுறைகளை
மேற்கொள்ளும்போது தடைகள் விலகி, நல்ல வேலை கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.