கடன் பிரச்சனையில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும்?

அன்றாடம் செய்தி தாள்களில் பார்க்கிறோம். கணவன்,மனைவி, அவர்களுடைய குழந்தை விஷம் குடித்து தற்கொலை. செய்தியை மேற்கொண்டு படித்தால் தற்கொலைக்கு காரணம் தாங்க முடியாத கடன் பிரச்சனை. கணவனும் மனைவியும் தங்கள் சக்தியை உணராது வாங்கிய கடனுக்காக ஒன்றுமறியாத அந்த குழந்தை என்ன செய்தது. அதனுடைய உயிரை போக்க இவர்கள் யார்?

இன்னும் கொடுமை என்ன வென்றால் விஷம் குடித்த அம்மாவும் அப்பாவும் விஷம் குடித்தும் சாக வில்லை, உயிர் பிழைத்து விடுகின்றனர். ஆனால் இவர்களால் விஷம் கொடுக்கப்பட்ட அந்த குழந்தை இறந்துவிடுகிறது. இது என்ன கொடுமை?

ஏற்கனவே இவர்கள் வாங்கிய கடன் பிரச்சனயை கூட முடித்து விடலாம். ஆனால் தங்கள் கையாலேயே கொள்ளப்பட்ட அந்த குழந்தையின் சாவை நினைத்து காலம் பூராவும், தூக்கு தண்டனை கைதியை (appeal ஐ எதிர் நோக்கியிருக்கும் அதாவது தூக்கில் போடுவார்களா அல்லது மாட்டார்களா) போன்ற நிலைமை இவர்களுக்கு. கடன் பிரச்சனையை விட, இவர்களால் கொலை செய்யப்பட்ட குழந்தையின் சாவு எனும் மன பிரச்னைதான் அவர்களை தூங்க விடாமல் கொல்லும்.

கடன் என்பது மனித குலத்திற்கு ஒரு தவிர்க்க முடியாத நிலை. ஆனால் அதற்க்கு ஒரு அளவு உண்டு. கடன் வாங்குவதற்கு முன்பு உங்களை நீங்கள் அறிய வேண்டும். நீங்கள் யார், உங்கள் சக்தி என்ன, உங்களால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியுமா என்று அறிந்து முடியும் என முடிவான விடை கிடைத்தால் கடன் வாங்கலாம். அதாவது 10000 ருபாய் வருமானம் உள்ள ஒருவர் மாதம் 500 ருபாய் கடனுக்காக செலவு செய்கிறார் என்றால் அதில் அர்த்தம் உண்டு. ஆனால் இதே போன்று பலரிடம் கடன் வாங்கி மாதம் 8000 ருபாய் கடனுக்காக்க செலவு செய்தால் என்ன ஆவது? நான் மேலே சொன்ன தற்கொலைதான் ஞாபகத்திற்கு வரும்.

எனக்கு வரும் கேள்விகளில் பெரும்பான்மையான கேள்விகள் கடனை பற்றிதான்  அவற்றில் சமீபத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி “அய்யா என்னுடைய சம்பளம் மாதம் ருபாய் 7000 ஆனால் எனக்கு இருக்கும் கடன் ருபாய் 14 லட்சங்கள், எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று கேட்கிறார்.
சற்று சிந்தித்து பாருங்கள், இவருடைய வருமானம் என்ன, இவருடைய கடன் எவ்வளவு? அநேகமாக அவர் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி கடனாளியாகி இருப்பார் என்று நினைக்கிறேன்.

ஒரு கடனை வாங்கி இன்னொரு கடனை அடைப்பது. பிறகு அந்த கடனை அடைப்பதற்கு இன்னொரு கடனை வாங்க வேண்டியது. இது எப்படி என்றால் கடன் என்ற ஒரு சிறு குழியை தோண்ட வேண்டியது. பிறகு அந்த குழியை மூட அதாவது கடனை அடைக்க இன்னும் சற்று பெரிய குழியை இரண்டாவதாக தோண்ட வேண்டியது. பிறகு இரண்டாவது பெரிய குழியை மூட மூன்றாவதாக சற்று பெரிய குழியை அதாவது கடன் குழியை தோண்ட வேண்டியது. இப்படி ஒரு குழியை மூட இன்னொரு கடன் குழியை தோண்ட கடைசியில் ஒரு பெரிய கடன் குழி மூட முடியாமல் நிற்கும். அந்த குழியை மூட யாரும் மேற்கொண்டு கடன் தர தயாராக இல்லை. ஏற்கனவே கடன் கொடுத்தவர்கள் “கடனை தருகிறாயா இல்லை, இல்லை இந்த குழியில் போட்டு உன்னை மூடி விடவா” என்று மிரட்ட ஆரம்பித்து விடுவார்கள். முடிவு, அவர் தோண்டிய குழியிலேயே அவர் சமாதியாகும் நிலை. ஆம், அவர் வாங்கிய கடனாலையே அவருக்கு சாவு.

தற்கொலை என்பது கடனுக்கு சரியான தீர்வு அல்ல.

சரி, பிறகு கடனிலிருந்து மீள்வதற்கு என்னதான் வழி? சிந்திக்க வேண்டும். தேவைபட்டால் மாற்றி சிந்திக்க வேண்டும்.

அதற்கும் ஒரு உண்மை சம்பவத்தை கூறுகிறேன். அவர் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிரார். நல்ல சம்பளம். சம்பளத்திற்கு தகுந்தவாறு கடன் பிரச்னை. நான் மேலே சொன்ன குழி கதையை போல சிறு குழிகள் எல்லாம் மூடப்பட்டு ஒரு பெரிய கடன் குழி அவர் முன் நிற்கிறது. கடன் கொடுத்தவர்கள் அவரை பிய்த்து எடுக்கின்றனர். வீட்டில் வந்து சத்தம் போட்டு அவமான படுத்துகின்றனர். இதற்க்கு மேலும் அவமான படக்கூடாது, ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று சிந்திக்கிறார்.
சிந்தித்ததின் விளைவாக அவருக்கு இரண்டு வழி கிடைக்கிறது. ஒன்று தன்னுடைய வேலையை விட்டுவிட்டு VRS கொடுத்தால், பணம் கிடைக்கும் அதைவைத்து கடனை ஒழித்துவிடலாம் என்று நினைக்கிறார்.
மற்றொன்று தனக்கு இருக்கும் சொந்த வீட்டை விற்றால் அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு கடனை அடைத்து விடலாம், என்று நினைக்கிறார்.

பல நாட்கள் திரும்ப திரும்ப யோசனை செய்து அவர் ஒரு முடிவுக்கு வருகிறார்.  VRS கொடுத்தால் இன்னும் நமக்கு இருக்கும் service இலிருந்து வரும் மாதந்திர சம்பளத்தை இழந்து விடுவோம். வீடு இல்லையென்றாலும் வாடகை வீட்டில் குடியிருந்து, VRS கொடுக்காமல் இருந்தால் வேலையிலிருந்து கிடைக்கும் சம்பளத்தை வைத்து நிம்மதியாக காலத்தை ஓட்டலாம். வேலை போக மீதம் உள்ள நேரத்தில் ஏதாவது வேலை செய்து, காசு சேர்த்து இன்னொரு வீடு வாங்கலாம்.

ஆனால் permanent வேலை போனால் திரும்ப கிடைக்காது என்று முடிவுக்கு வந்து, வீட்டை விற்று விட்டு கடனை அடைத்து விடலாம் என்று, கடனை அடைத்து விடுகிறார்.

இப்போது அவர் கடனாளி இல்லை. ஆனால் எப்படியாவது மறுபடியும் வீடு வாங்க வேண்டும் என்ற வெறி அவர் மனதில் கொழுந்து விட்டு எரிகிறது.அலுவலகம் போய் வந்து மாலை நேரங்களில், விடுமுறை

நாட்களில், ஓய்வு நேரங்களில் part-time ஆக சில வேலைகளை சொந்தமாக

செய்கின்றார். காசு சேர்க்கின்றார். சில வருடங்களுக்கு பிறகு ஒரு வீட்டை

சொந்தமாக வாங்குகிறார்.

அவர் கடனாளியாகி கலங்காமல் மாற்றி சிந்தித்ததால் இப்போது அவருக்கு தான் பார்க்கும் வேலையின் மூலமாகவும் மாத சம்பளம், பகுதி நேரமாக ஓய்வு நேரத்தில் செய்யும் வேலையின் மூலமாகவும் வருமானம், தான் குடியிருப்பதற்கு சொந்தமாக ஒரு வீடும் அவருக்கு கிடைத்து விடுகிறது.

இவருடைய கடன் பிரச்னை முடிந்து இன்று சந்தோசமாக இருப்பதற்கு காரணம் அவருடைய சிந்தனை, சாதாரண சிந்தனை அல்ல சற்று மாற்றி சிந்தித்ததின் விளைவு, இன்று அவர் கடனாளியாக இல்லாமல் சந்தோசமாக இருக்கிறார். இது ஒரு உண்மை சம்பவம்.

சரி, ஜோதிட ரீதியாக ஒருவர் கடனாளியாக ஆவதற்கு காரணம் என்ன?

ஜாதக கட்டங்கள் மனித வாழ்க்கையின் பல அம்சங்கள் என்று என்னுடைய  இந்த வலை பதிவில் பல கட்டுரைகளில் கூறியுள்ளேன். அதுபோன்று ஒரு மனிதன் கடனாளியாவதர்க்கும் அவர் பிறந்த போது அமைந்த சில கிரகங்களின் கூட்டணி, பார்வை, சேர்க்கை போன்றவை காரணமாகின்றன.

அப்படி காரணமாகும் கிரகங்கள் என்ன வென்று கண்டுபிடித்து அவைகளுக்குரிய சாந்தியினை செய்யும்போது, மேற்கொண்டு கடன் ஏற்படாமல் மனதினை சரியாக சிந்திக்க செய்து இருக்கும் கடன் தீர என்ன செய்யவேண்டும் என்ற அடைபட்ட வழி திறந்து விடப்பட்டு, கடன் தீர என்ன  முயற்சி  செய்ய வேண்டும் என்ற வழி பிறக்கும்.

அதை விடுத்து கிரக சாந்தி செய்து விட்டோம், எனவே கடனை அடைப்பதற்கு பணம் கூரையினை பொத்துக்கொண்டு கொட்டும் என்று யாரும் தவறாக நினைக்க கூடாது. நிச்சயம் பணம் கொட்டாது. கூரை வேண்டுமானால் கொட்டும். ஆனால் கடன் பிரச்சனயில் இருந்து மீள முடியாது.

கடனை அடைப்பதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும். உரிய முயற்சிகள் செய்யும்போது அந்த கிரகங்களும் உங்களுக்கு துணை நின்று உங்கள் முயற்சியை வெற்றி பெற செய்து அதன் மூலம் உங்களுக்கு ஒரு வருமானத்தை கொடுத்து உங்களை கடனில் இருந்து விடுபட செய்யும். ஆனால் முயற்சி செய்ய வேண்டும் அதற்க்கு கிரகங்களின் அனுகூலமும் வேண்டும்.
     
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள