Pet Business யார் செய்யலாம்?

Pet business அல்லது செல்ல பிராணிகள் வியாபாரம் என்பது இன்று மிகவும் பிரபல்யமாக இருக்கிறது.

செல்ல பிராணிகள் வியாபாரம் என்பது நாய், பூனை, Gold fish எனப்படும் தங்க மீன்கள், வாஸ்து சாஸ்திர மீன்கள், பறவை இனங்கள், போன்ற என்னும் பல.

மனிதர்களிடையே செல்ல பிராணிகளை வளர்க்கும் ஆசை இன்று பரவலாக எல்லோரிடமும் பெருகி வருகிறது. காரணம் செல்ல பிராணிகள் காட்டும் அன்பு, பாசம், நன்றி மறவாமை போன்றவைக்கு ஈடு இணை எதுவுமே இல்லை.

“நன்றி கெட்ட மனிதர்களை விட நாய்கள் மேலடா” என்று ஒரு தமிழ் கவிஞர் பாட்டாக எழுதி வைத்துள்ளார்.        .    

ஒரு நாய் ஒன்று வீட்டில் வளர்த்தல் அது கொடுக்கும் பாதுகாப்பு சம்பளத்திற்காக வேலை செய்யும் காவலாளியை விட ஆயிரம் மடங்கு மேல். காவலாளி வேண்டுமானால் கடமையை மறந்து தூங்கி விடலாம் ஆனால் நாய் கடமையிலிருந்து என்றும் தவறாது.

சம்பளம் வாங்கும் காவலாளி வேண்டுமானால் பொன் பொருளுக்கு மயங்கி எஜமானருக்கு துரோகம் செய்யலாம் ஆனால் ஒருவர் வளர்க்கும் நாய் அவர் சாகும் வரை அவருக்கு விசுவாசமாக இருப்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

முதலில் நாய் என்றாலே வெறுக்கும் சிலர், பின்பு அதுகாட்டும் நன்றியை பார்த்து அதை விட்டு பிரிய மனமில்லாதவர்கள் எத்தனையோ பேர்.
இது போன்று எத்தனையோ விசுவாசங்களை வாயில்லா பிராணிகள் மனிதர்களிடம் காட்டுகின்றன.


சரி இப்போது விசயத்திற்கு வருவோம். மனிதர்களிடையே செல்ல பிராணிகள், பறவைகள், மீன்கள் வளர்க்க வேண்டும் என்ற ஆவல் பெருக பெருக அதை பற்றிய வியாபாரமும் இப்போது அமோகமாக நடந்து வருகின்றது. ஒரு சிலர் நல்ல லாபமும் சம்பாதித்து வருகின்றனர்.

சரி. எல்லோராலும் இது போன்ற செல்ல பிராணிகள், பறவைகள், மீன்கள் செய்யும் வியாபாரம் லாபம் சம்பாதிக்க முடியுமா? ஜோதிட ரீதியாக இதற்க்கு என்ன பதில்?

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு மாத்ருச்தானம் சாதகமாக இருந்தால்தான் இந்த செல்ல பிராணிகள் வியாபாரம் நல்ல லாபத்தினை தரும். சாதகம் இருந்தால் ஸ்தானாதிபதி பாதிக்காமல், கூட்டணியில் கெடாமல், பார்வையில் கெடாமல் இருக்கும் பட்சத்தில் ஒருவர் செல்ல பிராணிகள் வியாபாரம் தொடங்கினால் அபரிதமான லாபம் அடையலாம் என்பதில் சந்தேகம் இல்லை.  
                 
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள