தொழில், வியாபாரத்திற்கு நல்ல வேலையாட்கள் அமையாமல் போவதற்கு காரணம்?

தொழில் அல்லது வியபாரத்திற்கு மிகவும் முக்கியமான அத்தியாவசியமான தேவை வேலையாட்கள். ஒருவரே செய்யும் வியாபாரம் அல்லது தொழிலாளாக இருந்தால் வேலையாட்கள் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அவரே முதலாளி. அவரே தொழிலாளி.

ஆனால் சில தொழில்களுக்கு ஒருவர் மட்டும் உழைத்தால் போதாது. பலர் சேர்ந்து உழைத்தால்தான் அந்த தொழில் சிறக்கும். முதல் போட்டால் மட்டும் ஒரு தொழில் சிறந்து விளங்கும் என்று சொல்ல முடியாது. செய்யும் தொழிலை வாடிக்கையாளர்களிடத்தில் எடுத்து சொல்ல, எடுத்து செல்ல நல்ல திறமையான தொழிலாளர்கள் தேவை. அது போன்று நல்ல திறமையான தொழிலாளர்கள் கிடைக்க பெற்றவர்கள் தான் அவர்கள் ஈடுபடும்  தொழிலில் வெற்றியடைய முடியும்.
சரியான தொழிலாளர்கள் கிடைக்கபெறாத எத்தனயோ தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தினை சந்தித்தும் அல்லது தொழில் நிறுவனத்தை மூடும் நிலையில் இருக்கின்றனர்.

ஒரு ஓட்டல் தொழிலை நடத்தும் ஒருவருக்கு சமையல் செய்வதிலிருந்து, வாடிக்கையாளர்களை கவனிக்கும் சர்வர், டேபிள் துடைக்கும் cleaner வரை அணைத்து தொழிலாளர்களும் சிறப்பாக அமையபெற்றால்தான் ஒருவரால் ஓட்டல் தொழிலை திறம்பட நடத்தமுடியும், லாபம் சம்பாதிக்க முடியும்.
இல்லையென்றால் அடிக்கடி ஆள் பற்றாக்குறை, உணவில் சுவையின்மை, வாடிக்கையாளர்களை சரியாக கவனிக்க முடியாத நிலமை, சுகாதாரமாக வைத்து கொள்ள முடியாத நிலைமை போன்ற பல பிரச்சனைகளில் சிக்கி, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அல்லது ஓட்டலையே மூட வேண்டிய நிலைமை உருவாகும்.

ஓட்டல் தொழிலுக்கு மட்டும் அன்றி அது ஜவுளி கடையாக இருக்கட்டும், பாத்திர கடையாக இருக்கட்டும், நகை கடையாக இருக்கட்டும், பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக இருக்கட்டும் மற்றும் எந்த தொழிலாக இருக்கட்டும் வேலையாட்கள் தாரளமாக கிடைக்க வேண்டும், திறமையான வேலையாட்களாகவும் இருக்கவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில்தான் ஒருவர் அவர் எந்த தொழில் சார்ந்தவராக இருந்தாலும் அதில் வெற்றியடைய முடியும்.

சிலர் பார்த்தீர்கள் என்றால் நல்ல திறமையான தொழில் செய்ய கூடியவராக இருப்பார், ஆனால் அவர் ஒருவரால் மட்டும் அந்த தொழிலை செய்ய முடியாது. உதாரனத்திற்க்கு ஒரு ஓட்டல் தொழில். அதற்க்கு பணியாட்கள் தேவை. அந்த பணியாட்கள் இவர் திறமையானவராக இருந்தும் சரியாக அமைய மாட்டார்கள். அல்லது வேலையாட்கள் அமைந்தாலும் அவர்கள் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். அடிக்கடி ஆள் பற்றாக்குறை. இதற்கு என்ன காரணம்?

ஜோதிட ரீதியாக இதற்க்கு என்ன விளக்கம்?

ஒருவர் பிறந்த நேரத்தில் அமைந்த கிரகங்கள் மனிதர்களின் நல்லது கெட்டவைகளை, அவர்களுடைய வாழ்க்கையில் பல விதத்திலும் தீர்மானிக்கின்றன.

அந்த விதத்தில் ஒருவருக்கு நல்ல வேலையாட்கள் அமைய வேண்டும் என்றால் அவருக்கு அமைந்த லக்கினம், வாக்கு ஸ்தானம், வித்யாகாரகன், கர்ம காரகன் போன்றவர்கள் நல்ல நிலமையில் அமைந்து, சேர்க்கை, பார்வை, இருப்பிடம் போன்றவற்றில் கெட்டு போகாமல் இருக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் அவருக்கு நல்ல திறமையான வேலையாட்கள் அமைவார்கள்.

அப்படி இல்லாத பட்சத்தில் அதாவது மேலே கூறிய நிலைகள் சரியாக அமைய பெறாமல், வேலையாட்கள் கிடைக்காமல் சிரம படுபவர்கள், கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய வழிமுறைகளை செய்யும்போது, வேலையாட்கள் கிடைப்பதர்க்குண்டான தேக்க நிலையில் இருந்து விடுபட்டு முன்னேற்ற பாதையில் செல்லலாம் என்பதில் சந்தேகம் இல்லை.   
    
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள