திருமண தடை, திருமண தாமதத்தை நீக்க?

எந்த ஒரு ஆணும் பெண்ணும் பருவ வயதில் திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகளை பெற்று தாம்பத்தியம் என்னும் சம்சார சாகரத்தில் முழுகி சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆனால் ஒரு சிலருக்கு  பார்த்தீர்கள் என்றால் பருவ வயதினையும் கடந்து அதாவது ஆண்கள் என்றால் 25 வயது பெண்கள் என்றால் 21 வயது, திருமணம் ஆகாத நிலைமை.

பெண்ணுக்கு மேல் பெண், மாப்பிள்ளைக்கு மேல் மாப்பிளை, பார்த்து கொண்டு இருப்பார்கள். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தினால் திருமணம் தள்ளி கொண்டு செல்லும்.

சிலருக்கு இதுவே ஒரு மன வியாதியாகி நமக்கு இனிமேல் திருமணமே நடக்காதா, காலம் பூராவும் பிரமசாரி ஆகவே இருக்க வேண்டியதுதானா? என்று யோசித்து யோசித்து பைத்தியம் பிடிக்காத நிலைமையில் இருப்பார்கள்.

இவர்கள் இப்படி என்றால் இவர்களை பெற்றவர்களும், பிள்ளைக்கு திருமணம் ஆக வில்லையே என்று நினைத்து நினைத்து அவர்களும் ஒரு மன நோயாளியாகி, உடல் ரீதியாகவும் பாதிக்க பட்டு விடுகிறார்கள்.

சில திருமணம் ஆகாத ஆணும் சரி பெண்ணும் சரி, திருமணமே நடக்காது என்ற தவறான முடிவெடுத்து தகாத ஆண் பெண்களுடன் உறவு கொண்டு மேலும் சிக்கலில் மாட்டி கொண்டு விடுவார்கள்.

இது போன்று திருமண தாமதம், தடைகள் போன்றவற்றிக்கு காரணம் என்ன?

பாவம் தான் காரணம் என்று கூறவேண்டும். பாவம் என்பது ஒருவருக்கு செய்யும் அநீதி இன்னொருவருக்கு பாதிப்பை ஏற்படுத்துவது. இதில் மிக பெரிய வேடிக்கை என்ன வென்றால் இவர் எந்த பாவமும் செய்திருக்க மாட்டார் ஆனால் மற்றவர்கள் செய்த பாவத்திற்கு இவர் தண்டனை அனுபவிக்கும் நிலை. அதாவது இவருடைய முன்னோர்கள். அதனால் இவருக்கு திருமண தடை, திருமணம் ஆகாத நிலை.

சரி இந்த பாவத்தை போக்கி ஒருவருக்கு விரைவில் திருமணம் நடக்க என்னதான் வழி? ஜோதிட ரீதியாக இதற்க்கு என்ன தீர்வு?

இறைவன் மிக பெரியவன். பிரச்சனைகளை உருவாக்குவதற்கு மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒருவனை தப்பு செய்ய வைத்து, பிறகு அந்த தப்பிற்காக அவனை தண்டனை அனுபவிக்க செய்வதும் அதே இறைவனை.

ஒரு திருடனும் இறைவன் முன்பு “இறைவா இன்று நான் கொள்ளை அடிக்க செல்கிறேன் எனக்கு இன்று நல்ல வேட்டையாக அமைய வேண்டும்” என்று வேண்டுகிறான். அதன் பின்பு ஒரு வீட்டில் கொள்ளையடித்து நிறைய பொருல்களை திருடி வருகிறான்.

பொருளை பறிகொடுத்தவன் அதே இறைவனிடம் “இறைவா திருட்டு போன என் பொருட்கள் மீண்டும் எனக்கு கிடைக்க வேண்டும்” என்று வேண்டுகிறான்.

திருடன் வேண்டியாதால் அவனை கொள்ளையடிக்க செய்து போலீசில் மாட்டி விடாமல் சிறிது காலம் (அதாவது பொருளை பறி கொடுத்தவன் இறைவனிடம் வேண்டும் வரை) திருடனை சந்தோசமாக இருக்க வைக்கிறார், அந்த இறைவன்.

பொருளை பறி கொடுத்தவன் இறைவனிடம் வேண்டியவுடன் அந்த திருடனை போலீசில் மாட்டிவிட்டு, இழந்த பொருளை மீண்டும் அவனிடம் சேர்த்துவிடுவதும் அதே இறைவன்தான்.  

ஆக திருடனும் பக்தன்தான், திருடபட்டவனும் பக்தன்தான் ஆனால் இருவர் வேண்டுதல்களையும் நிறைவேற்றி நியாமாக யாருக்கு உதவி செய்யவேண்டுமோ அவர்களுக்கு கடைசியில் உதவி செய்கிறான். அதனால் திருடபட்டவன் தன்னுடைய இழந்த பொருளை திரும்ப பெறுகிறான்.

அது போன்று யாரோ செய்த பாவங்கள் தோஷங்கள் என்ற பெயரில் ஒருவருக்கு திருமண தடையை உண்டாக்கும்போது, ஜாதகம் வாயிலாக இறைவன் அந்த திருமண தடையை நீக்குவதர்க்கும் வழி சொல்கிறார். கிரகங்கள் இறைவனின் பணியாட்கள். அந்த பணியாட்கள் அவர்களுடைய இயல்பான குணாதிசயங்களின் பேரில் மனிதர்களுக்கு நன்மையையும் தீமையும் செய்கின்றன.

ஜாதக ரீதியாக  ஒருவருக்கு திருமண தடை, கால தாமத திருமணம் போன்றவற்றுக்கு, கிரகங்கள் அமர்ந்த நிலை, சேர்ந்த நிலை, பார்வையின் நிலை, தோஷங்கள், போன்ற பல காரணங்கள் உண்டு.
அவற்றினை ஆய்வு செய்து அதற்க்கு தகுந்த கிரக ப்ரீத்தி செய்யும்போது நீண்ட நாள் தடைபட்ட திருமணம், திருமண கால தாமதம் போன்றவைகளுக்கு தீர்வு காணலாம்.

மற்றபடி திருமணமே ஆகாது, திருமணம் செய்யாமல் இருந்துவிடுவது 

என்பதெல்லாம் மனிதர்களின் அவசரத்தினால் அல்லது தவறான முடிவின் 

விளைவாகும். எந்த மனிதனுக்கும் திருமணமே ஆகக்கூடாது என்பது 

இறைவனின் ஆசை அல்ல.
            
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள