தந்தை வழி தொழிலை செய்து பிள்ளைகள் வெற்றியடைய?

தந்தை செய்யும் அல்லது செய்த தொழிலை அவருடைய வாரிசுகள் தொடர்ந்து செய்து வருவதை அனுபவத்தில் பார்த்து வருகிறோம். ஒரு டாக்டர் தன்னுடைய பிள்ளைகள் டாக்டராகத்தான் வரவேண்டும் என்று அவர்களுடைய பிள்ளைகளை டாக்டராக்கி தன்னுடைய திறமை அனுபவத்தை அவர்களுக்கு கற்று கொடுத்து பிள்ளைகளையும் சிறந்த மருத்துவராக்கி  விடுவர்.

அது போன்று ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வெற்றிகரமாக இயக்கி கொண்டு இருக்கும் ஒரு தந்தை தன்னுடைய பிள்ளையை அதே ஏற்றுமதி நிறுவனத்தில் இணைத்து தான் செய்த தொழில் தன்னுடைய பிள்ளைகள் காலத்திலும் தொடர்ந்து வரவேண்டும் என ஆசைப்பட்டு தான் செய்த அதே தொழிலில் பிள்ளையையும் ஈடுபடுத்தி விடுவார்கள்.

எனக்கு தெரிந்த ஒருவர் ஏற்றுமதி நிறுவனத்திற்க்கு ஆடை தயார் செய்யும் நிறுவனம் வைத்து நடத்துகின்றார். நல்ல அனுபவம். நல்ல வருமானம். ஆனால் அவர் படித்ததோ வெறும் 5 ஆம் வகுப்புதான், அதனால் இன்னொரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்திற்கு இவர் ஆடைகள் தயார் செய்து அவர்கள் மூலம் ஏற்றுமதி செய்து வருகிறார்.

இப்போது பையனை நன்றாக படிக்க வைத்து, தொழில் நுணுக்கங்களையும் கற்று தந்து தற்பொழுது நேரடியாக ஏற்றுமதி செய்து வருகின்றார். படிப்பறிவு இன்மையை தன்னுடைய பையனின் மூலமாக சரி செய்து ஏற்றுமதி நிறுவனத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். அதேசமயத்தில் பையனுக்கும் ஒரு நல்ல தொழிலை ஏற்படுத்தி கொடுத்து விட்டார்.

இது போன்று எத்தனையோ தொழில்களை சொல்லலாம்? ஓட்டல் நடத்தும் ஒருவர் தன் பிள்ளைகளை கேட்டரிங் படிக்கவைத்து அவர் செய்த ஓட்டல் தொழிலையே தொடர்ந்து செய்து வர வழி வகுப்பார். இது போன்று மளிகை கடை, ஜவுளி கடை, நகைக்கடை, பொருட்களை உற்பத்தி செய்யும் நிருவனங்கள் போன்ற எத்தனயோ தொழில்களை நடத்துபவர்கள் தங்களுடைய வாரிசுகளும் தாங்கள் செய்த தொழிலையே செய்ய வேண்டும் என்று விரும்புவர்.

ஆனால் நடைமுறையில் பார்க்கும்போது தந்தை செய்து வந்த தொழிலை செய்து வளராமல், நிறுவனத்தையோ அல்லது தொழிலையோ மூடிவிட்டு சம்பளத்திற்கு வேலை செய்யும் எத்தனயோ வாரிசுகளும் இருக்கின்றனர்.

எனக்கு தெரிந்த ஒரு ஓட்டல். நகரத்திலேயே மிகவும் பிரபல்யமான ஓட்டல். அந்த ஓட்டலில் எது செய்தாலும் சுவையாக இருக்கும். அந்த சுவைக்கேன்றே ஒரு கூட்டம் இருக்கும். நல்ல வியாபாரம். வயது மூப்பின் காரணமாக ஓட்டலை
நேரடியாக கவனிக்க முடியாத சூழ்நிலை. பையனிடம் பொறுப்பை ஒப்படைத்தார் தந்தை. ஆனால் தந்தை வியாபாரத்தின் மீது கொண்ட அக்கறை போல பையனிடம் இல்லாததால் சிறுக சிறுக பழைய சுவை மறைந்து வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டலையே  மூடிவிட வேண்டிய சூழ்நிலை ஆகி விட்டது.

இதுபோன்று தந்தையால் கவனித்து வந்த எத்தனையோ புகழ் பெற்ற நிறுவனங்கள், கடைகள், தொழில்கள் அவர்களுக்கு பின்பு அவர்களுடைய பிள்ளைகளால் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தமுடியாமல் மூடிவிட்ட நிகழ்வுகள் நிறைய உண்டு.

ஆனால் சிலர் பார்த்தீர்கள் என்றால் தந்தையால் தொடர்ந்து செய்து வந்த தொழிலை தானும் தொடர்ந்து செய்து தந்தைக்கு மேல் வியாபாரத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிறுவனங்களும், கடைகளும் எத்தனையோ உண்டு.

சரி, இது போன்று ஒரு சிலர் தந்தை செய்து வந்த அல்லது செய்து வரும் தொழிலை தொடர்ந்து செய்து வர முடியாமல் நஷ்டபடுவதும், ஒரு சிலர் மட்டும் அபரீதமாக வெற்றி பெறுவதற்கும் காரணம் என்ன?

ஜோதிட ரீதியாக இதற்கு என்ன தீர்வு?

எல்லோராலும் தந்தை வழி தொழிலை வெற்றிகரமாக செய்ய முடியாதா? முடியும். ஒருவர் பிறக்கும்போது அமைந்த கிரகத்தின் அடிப்படையில் பிதாகாருகன் வலுவுடன் இருக்க வேண்டும். அதற்கும் மேலாக அவருடைய உயிர் ஸ்தானாதிபதி நல்ல நிலமையில் இருக்கவேண்டும். இவைகளை தவிர தனத்திற்கு அதிபதி, லாபத்திற்கு அதிபதி,
இவைகள் அமைந்த இடம், சேர்ந்த இடம், சேருபவர்களின் தன்மை, பார்ப்பவர்களின் வலு போன்றவற்றின் அடிப்படையில் நல்ல வழுவாக இருக்கும் பட்சத்தில் தந்தை வழி தொழிலை செய்து மேன்மை அடையலாம்.

சரி, அப்படி வலுவில்லாதவர்கள், தந்தை வழி தொழிலை செய்ய ஆசைபடும் போது வெற்றியடைய முடியாதா?

ஏன் முடியாது. அவர்களுடைய பிறந்த நேரத்தின் போது அமைந்த கிரக நிலைகளை ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்து அவர்களும் தந்தை வழி தொழிலை செய்து மேன்மையடையலாம்.  
                                               
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள