வெளிநாட்டில் சிறப்பான வாழ்க்கை யாருக்கு அமையும்?


சில வருடங்களுக்கு முன்பெல்லாம் வெளிநாடு செல்வது என்பதெல்லாம் ஒரு மிக பெரிய ஆச்சரியமான விசயமாக இருந்தது. யாராவது ஒருவர் வெளி நாடு சென்று வந்தால் அவருக்கு சமுகத்தில் கொடுக்கப்படும் மரியாதையே தனியாக இருக்கும்.

ஆனால் இப்போது அப்படியில்லை. எப்போது தகவல் தொழில் நுட்பம் மக்களை வெகு அருகாமையில் கொண்டு வந்து விட்டதோ அப்பொழுதே வெளிநாட்டு பயணம் என்பது சர்வ சாதரணமாகிவிட்டது.

இப்போது வெளிநாட்டில் வேலைக்காக செல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிவிட்டது. படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக்க எல்லோருடைய குறியும் படித்து முடித்தவுடன் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்ற முடிவுடன்தான் படித்து வருகிறார்கள். காரணம் dollar, euro, pounds வருமானம்.

வெளி நாட்டுக்கு வேலைக்கு செல்வதில் தப்பில்லை. ஆனால் எத்தனை பேர் வெளிநாட்டில் வேலை கிடைத்து, திருப்தியான சம்பளத்தை பெற்று, வேறு நாடாக இருந்தாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் சிக்காமல், பாதுகாப்பான பயணங்கள் மேற்கொண்டு, சம்பாதிக்கும் பணத்தை சொந்த நாட்டுக்கு அனுப்பி, ஊர் திரும்பும் போது சந்தோசமாகக திரும்புபவர்கள் எத்தனை பேர்? மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருப்பார்கள்.

முதலில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்று போலியானவர்களை நம்பி பணத்தை கொடுத்து ஏமாறக்கூடாது.

அடுத்து பொருத்தமான வேலைக்குதான் வெளிநாட்டுக்கு செல்லவேண்டும். படித்த படிப்பு, அனுபவம் இவற்றுக்கு ஏற்ற வேலை மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் ஒத்துகொண்ட வேலை ஒன்றாக இருக்கும் பிறகு அங்கு செய்யும் வேலை வேறொன்றாக இருக்கும்.

வேலைக்கு சேர்ந்தவுடன் அங்கு உள்ள சீதோசன நிலைமை, உணவு பழக்க வழக்கங்கள் பாதிக்காதவாது நல்ல உடல் ஆரோக்கியம் தேவை.
அதன் பின்பு சம்பாதித்த பணத்தை சொந்த ஊருக்கு அனுப்புவதில் அந்த நட்டு சட்ட திட்டங்களால் எந்த வித பிரச்னையும் இருக்க கூடாது அப்படி இருந்தால் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றதற்க்கு அர்த்தமே கிடையாது.

வேலை நிமித்தமாக அல்லது சொந்த நாட்டிற்கு வரும்போது பயணங்கள் மேற்கொள்ளும்போது விபத்தின்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
வேலை பார்க்கும் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.

இது போன்று இன்னும் பல காரணங்களை கூறலாம்.

ஆனால் நடைமுறையில் பார்த்தால் எல்லோருக்குமே சந்தோசமான வெளிநாட்டு வாழ்க்கை அமைவதில்லை.

கூட வேலை பார்ப்பவர்களிடம் பிரச்னை, பயணங்களில் பாதுகாப்பின்மை, தீவிரவாத அச்சுறத்தல், உடல் ஆரோக்கியமின்மை, அதிக வேலை பளு, நல்ல உணவின்மை, நல்ல தூக்கமின்மை, குறைவான சம்பளம் போன்ற பல பிரச்சனைகளில் மாட்டிகொண்டு அவதிபடுபவர்கள் எத்தனையோ பேர்.

ஆனால் அதேசமயத்தில் நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல தூக்கம், நல்ல பயணங்கள், நல்ல உடல் ஆரோக்கியம், வேலை பார்க்கும் இடத்திலும் குடியிருக்கும் இடத்திலும் நிம்மதி போன்றவை எத்தனையோ பேருக்கு நல்ல படியாக அமைந்து விடுகிறது.

சரி, இதுபோன்று ஒருசிலருக்கு நல்ல வெளிநாட்டு வாழ்க்கையும், ஒரு சிலருக்கு மோசமான சூழ்நிலையும் ஏற்படுவதற்கு காரணம் என்ன?
ஜோதிட ரீதியாக இதற்க்கு என்ன விளக்கம்?

கிரகங்கள் மனித வாழ்க்கையின் சுக துக்கங்களை நிர்ணயிக்கின்றது. அதுபோன்று ஒருவருக்கு நல்ல வெளிநாட்டு வேலை வாய்ப்பும், வெளிநாட்டில் வாழும்போது எந்த வித பிரச்சனையும் அன்றி நல்ல சம்பாதிக்க கூடிய அமைப்பு ஒரு சில கிரக அமைப்புகள் அவர்கள் பிறந்தபோது நல்ல படியாக அமைந்து இருந்தாலே ஒழிய அவர்களால் சந்தோசமாக வெளிநாட்டில் வாழ முடியும்.

ஜாதக கட்டத்தில் ருனஸ்தானம், அட்டம ஸ்தானம், அயன ஸ்தானம் மற்றும் இதர ஸ்தானங்களின் கிரக அமைப்புகள், இவைகள் பாதிக்காத பட்சத்தில் ஒருவருக்கு நல்ல வெளிநாட்டு வேலை வாய்ப்பும் சந்தோசமான வெளிநாட்டு வாழ்க்கை அமைய வேண்டும் என்பது ஜோதிட விதி.   

சரி, அப்படி சரியான கிரக அமைப்பு இல்லாதவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்பது அவர்களுக்கு ஒரு கனவுதானா அல்லது அப்படியே வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைத்தாலும் சந்தோசமாக வாழ முடியாதா?

நிச்சயம் அப்படி இல்லை. நோய்க்கு மருந்து சாப்பிட்டு வியாதியை குனமாக்குவதை போல, என்ன கிரக கோளாறு என்று அறிந்து அதற்குரிய சாந்தியை செய்தால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு  மற்றும் சிறப்பான வெளிநாட்டு வாழ்க்கை அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
        
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள