திருமண யோகம் எப்போது?

திருமணம் என்ற இன்ப நினைப்பு எல்லா பருவ வயது ஆண்களிடமும் பெண்களிடமும் உள்ள இயல்பான நினைப்புதான். பருவத்தில் திருமணம் செய்து பிள்ளைகள் பெற்று வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதும் இயல்பான ஆசைதான்.

ஆனால் சிலருடைய வாழ்க்கையில் பார்த்தால் திருமணம் என்பதே ஒரு கேள்வி குறியாகிவிடும். ஆம், பல வரன்கள் தேடியும் எந்த வரணுமே அமையாத நிலை. வயது ஒரு பக்கம் ஏறி கொண்டே செல்லும். ஒரு கட்டத்தில் நமக்கு திருமணமே நடக்காதா என்ற ஒரு விரக்தியுடன் இருப்பார்கள். அந்த விரக்தியே சிலருக்கு மன வியாதியை உண்டாக்கி விடும்.

சரி, ஒருவருக்கு எப்போதுதான் திருமண யோகம் எப்போது ஏற்படும்? ஜோதிட ரீதியாக இதற்குரிய விளக்கம் என்ன?

ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்கள் மனிதனின் வாழ்க்கையை பிரதி பலிக்கும் கண்ணாடி. ஒருவருடைய குணாதிசயம், குடும்ப வாழ்க்கை, பண வரவு, பேச்சின் தன்மை, சகோதர சகோதரிகளின் உறவு, வீடு, வாகன வசதி வாய்ப்புகள், குழந்தை செல்வம், படிப்பு, கடன், நோய், மனைவி, கணவன், ஆயுள், தொழில், வேலை, கிடைக்ககூடிய லாபம், நிம்மதியான தூக்கம், தாம்பத்திய உறவு, வெளிநாட்டு பயணம் போன்ற அணைத்து விசயங்களையும் சாதகமாக நடக்குமா, பாதகமாக நடக்குமா போன்றவற்றை பிரதி பலிக்கும் கண்ணாடி. பாதகமாக நடக்கும் என்றால் ஏன் பாதகமாக நடக்கும் காரணம் என்ன என்பதை கோடிட்டு காட்டும் கண்ணாடி..

எனவே ஒருவருக்கு திருமண யோகம் எப்போது என்பதையும் அதே ஜாதகம் கோடிட்டு காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒரு  சிலருக்கு திருமண யோகம் அல்லது கல்யாண யோகம் அவர் நினைத்ததிற்கு மாறாக விரைவில் ஏற்பட்டு திருமணம் நடக்கும். அதற்க்கு காரணம் அவர் பிறக்கும் போது அமைந்த கிரகங்களின் நிலைப்பாடு என்றுதான் கூறவேண்டும்.

ஒருவருக்கு திருமண யோகம் என்பது விரைவில் அல்லது உரிய வயதில் அமைகிறது என்றால் அவருடைய பிறந்த நேரத்தில் அமைந்த திருமணதிற்கு முக்கிய பொறுப்பு வகிக்கும் குடும்பச்தானதிபதி, களத்திர ஸ்தானாதிபதி, தேவ குரு, அசுர குரு இவைகள் நல்ல நிலைமையில் அமைந்து, சேர்ந்து, பார்வை பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி எந்த வித தோசங்களினாலும்  பாவங்களினாலும் பாதிக்க பட்டு இருக்க கூடாது. அப்படி இருக்கும் பட்சத்தில் கோசாரத்தில் உள்ள கிரகங்களும் சாதகமாக உலா வரும்போது அவருக்கு திருமண யோகம் ஏற்படுகிறது. திருமணமும் நடந்து விடுகிறது.

சரி இதுபோன்ற கிரக நிலை அல்லது கிரகங்கள் சாதகமாக இல்லையென்றால் திருமணமே நடக்காதா? நிச்சயம் அப்படி கிடையாது.

திருமண யோகம் ஒருவருக்கு தள்ளிக் கொண்டே செல்கிறது என்றால் அது ஒரு குறை. எப்படி உடல்நிலை சரி இல்லை என்றால் ஒரு மருத்துவரிடம் சென்று உரிய மருந்துகளை சாப்பிட்டு வியாதியை குணபடுத்துகிறோமோ  அது போன்று திருமண யோகம் தடைபடுகிறது என்று சொன்னால் அது கிரகங்களினால் ஏற்படக்கூடிய ஒரு வியாதிதான்.

அந்த வியாதிக்குண்டன மருந்தினை அதாவது கிரக ப்ரீத்தி செய்யும்போது அவருக்குண்டான திருமண தடை எனும் வியாதி குணமாகி, திருமண யோகமாக மாறி திருமணம் நடக்கும் என்பதுதான் உண்மை. திருமண யோகமாக மாறும்போது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள், கோச்சாரத்தில் உள்ள கிரக நிலைகள் இவை சேர்ந்து விரைவில் அவருக்கு திருமணம் நடந்து விடுகிறது.
           
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள