உங்களுடைய இஷ்ட தெய்வம் யார்?

இஷ்ட தெய்வம் என்றால் பிடித்தமான தெய்வம். பிடித்தமான தெய்வம் என்றால் உங்களுடைய ஒவ்வொரு செயல்கள் தொடங்கும்போது அவை நல்ல படியாக முடிந்து உங்களுக்கு நன்மையை தரவேண்டும் என்று வேண்டும்போது அவை உங்களுக்கு மனமுவந்து நன்மையை செய்யும்.

சிலர் பார்த்தீர்கள் என்றால் திருப்பதி ஏழுமலையானை கும்பிடாமல் எந்த ஒரு நல்ல காரியமும் தொடங்க மாட்டார்கள். அவர்களுக்கு அந்த காரியம் நடப்பதற்கு ஏழுமலையான் உதவி செய்வார் என்ற நம்பிக்கை. ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்கு திருப்பதி வெங்கடாசலபதிதான் இஷ்ட தெய்வமாக இருப்பார்.

அதுபோன்று ஒரு சிலருக்கு பழனி முருகன் இஷ்ட தெய்வமாக இருப்பார். எந்த கோயிலுக்கு சென்று அவர்கள் சாமி கும்பிட்டாலும் பழனி முருகன் கோயிலில் சாமி கும்பிட்ட ஒரு திருப்தி அவர்களுக்கு இருக்காது. காரணம் பழனி முருகனை கும்பிட்டு தொடங்கும் நல்ல காரியங்கள் அவர்களுக்கு நல்ல படியாக நடக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

சிலருக்கு பார்த்தீர்கள் என்றால் பல கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவார்கள். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட கோயிலுக்கு சென்று சாமி கும்பிடும்போது கிடைக்கும் நிம்மதி வேறு கோயில்களில் கும்பிடும் போது கிடைக்காது.

சரி, ஒருவருடைய இஷ்ட தெய்வம் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

ஒருவர் பிறந்த போது அமைந்த ஒரு சில கிரக நிலைகளை வைத்து, அவைகள் அமைந்த பாவம், பாவத்தின் தன்மை போன்றவற்றை வைத்து அவருடைய இஷ்ட தெய்வம் யார் என்பதை கண்டுபிடிக்கலாம்.

இஷ்ட தெய்வம் யார் என்பதை தெரிந்து கொண்டால் நம்முடைய நியாயமான இஷ்டங்கள் நமக்கு சாதகமாக நன்மை செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
  
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள