தைரியம் இல்லாமை ஏன்?

தைரியம் என்பது மனிதர்களுக்கு மிக மிக அவசியம். தைரியம் இல்லை என்றால் வாழ்க்கையில் எந்த ஒரு விசயத்தையும் எதிர்கொள்ள முடியாது.


வாழ்க்கை என்பதே ஒரு challenge மாதிரிதான். Challenge இல்லாத வாழ்க்கை என்பது ஒரு சுவாரஸ்யம் இல்லாத திரைப்படம் போன்றதுதான். எப்படி திரைப்படத்தில் கதாநாயகன் காதலியை வில்லனிடம் இருந்து காப்பாற்றுவதற்கு சண்டை போட்டு காதலியை காப்பற்றுகிறாரோ அதுதான் challenge.

ராமபிரான் கூட அசுரனாகிய ராவனிடம் இருந்து சீதையை மீட்பேன் என்று தைரியமாக போர் செய்ததால்தான் ராமாயணம் என்ற ஒரு காவியத்தை பற்றி மனித குலம் தெரிந்து கொண்டது.

ஒருவர் ஒரு வேலைக்கு முயற்சி செய்கிறார் என்றால் பல போட்டியாளர்கள் வருவார்கள், பங்கேற்ப்பார்கள் அவர்களை வென்று நாம் அந்த வேலையை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற தைரியம் வேண்டும். இந்த தைரியம் இல்லை என்றால் எந்த வேலைக்குமே செல்ல முடியாது.

அதே போன்று தொழில் செய்யும் ஒருவருக்கு தைரியம் இல்லை என்றால் சக தொழில் செய்பவர்களை பார்த்து பாய்ந்து ஐயோ இவர்கள் நமக்கு போட்டியாக வந்துவிட்டார்களே நம்மால் தொழில் செய்ய முடியுமா என்று தைரியம்  இல்லாமல் இருந்தால் தொழிலை மூடிவிட்டு போகவேண்டியதுதான்.

அதே போன்று திருமணம் செய்தால், பிள்ளை பிறக்கும், பிள்ளையை வளர்க்க வேண்டி வரும், விற்கும் விலைவாசியில் பிள்ளையை படிக்க வைக்க முடியுமா, குடும்ப செலவை சமாளிக்க முடியுமா, நமக்கு கிடைக்கும் சம்பளம் போதுமா குடும்ப செலவுகளை சமாளிப்பதற்கு என்று தைரியம் இல்லாமல் இருந்தால் கல்யாணமே செய்யாமல் இருந்தால் பிரமச்சாரியாக இருந்து கடைசியில் ஈம கடன்கள் செய்வதர்க்குகூட ஆள் இல்லாமல் இறந்து போக வேண்டியதுதான்.

தைரியம் என்பதும் புத்திசாளித்தனமான தைரியம் வேண்டும். அவசியமான செயல்களுக்கு மட்டும் தைரியம் அவசியம் தேவை. அவசியம் இல்லாத காரியங்களுக்கு தைரியசாலி என்று எண்ணிக்கொண்டு கோதாவில் இறங்கினால் பிரச்சனைதான் வரும்.

சரி, ஒருவருக்கு தைரியம் இல்லாது குறித்து ஜோதிட ரீதியாக என்ன பதில்?

மனிதன் பிறக்கும் போது அமைந்த கிரகங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஜாதக கட்டங்கள் மனிதனின் பல வித விசயங்களை தெளிவு படுத்துகிறது. ஒருவருக்கு தைரியம் குறைவாக அல்லது இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

ஒருவர் பிறக்கும்போது அவருடைய தைரியச்தானதிபதி வலு குறைந்தோ, சேர்க்கைகள், இருப்பிடம், பார்வைகள்  சரி இல்லாமல் இருந்தாலோ அவருக்கு தைரியம் குறைவு அல்லது இல்லை என்றுதான் கூறவேண்டும்.
அப்படி இருக்கும்பட்சத்தில் அவருக்கு தைரியமே வராதா? நிச்சயம் தைரியம் வரும். உண்டாகும்.

பாதிக்கப்பட்ட ஸ்தானத்தை சில உரிய வழிமுறைகளின் மூலம் வலுவூட்டும்போது இல்லாத தைரியத்தை வரவழைக்கலாம்.

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள