வெற்றியை தரும் உங்களுக்கு ஏற்ற தொழில் எது?

இந்த உலகத்தில் எத்தனையோ வகை தொழில்கள் இருந்தாலும் எல்லோராலும் எல்லா தொழிலும் வெற்றி பெற முடியாது.
காரணம் அவர் அவர்கள் தேர்ந்தெடுக்கும் தொழிலை பொருத்தது ஒரு தொழிலின் வெற்றி தோல்வி அமையும்.

எல்லோருக்கும் எல்லா தொழில்களும் வெற்றி வாய்ப்பை தராது. உங்கள் ஊரில் உள்ள பிரபல நிறுவனங்களின் வியாபாரத்தை பார்த்தாலே தெரியும். ஒரு நகை கடையை எடுத்து கொள்ளுங்கள். ஒரு துணி கடையை எடுத்து கொள்ளுங்கள். ஒரு electronics பொருள்கள் விற்கும் கடையை எடுத்து கொள்ளுங்கள்.

ஆயிரம் நகை கடைகளை எடுத்து கொண்டீர்கள் என்றால் அதில் ஒரு சில கடைகள் மட்டுமே நல்ல லாபத்துடன் இயங்கும். அவற்றில் ஒரே ஒரு கடை மட்டும் அபரீதமான லாபத்துடன் இயங்கும். மக்கள் கூட்டம் அந்த ஒரு கடையில் மட்டும் அலை மோதும். அதேபோன்றுதான் மற்ற தொழில்களிலும்.    

ஒரு நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதற்கு தொழிலை பற்றிய அனுபவமும், அறிவும் முக்கியம் என்றாலும் கூட கிரகங்கள் சாதகமாக செயல்பட்டால்தான் ஒருவர் தன்னுடைய தொழிலில் வெற்றிகரமாக இயங்க முடியும். கிரகங்கள் சாதகமாக இருந்தால்தான் ஒருவர் வெற்றிகரமான தொழிலை தேர்ந்தெடுத்து அதில் ஈடுபட்டு வெற்றியடைய முடையும். இல்லையென்றால் என்னதான் தொழிலை பற்றிய அனுபவமும் அறிவும் இருந்தாலும் கூட வெற்றி பெறுவது இயலாத காரியம். கூட்டத்தில் ஒருவராகத்தான் இருக்க முடியுமே ஒழிய முதல்வனாக இருக்க முடியாது.

ஆனால் ஒருசிலருக்கு ஒரு தொழிலை பற்றிய போதுமான அறிவும் அனுபவமும் இல்லையென்றாலும் கூட கிரகங்கள் சாதகமாக இருந்தால் வெற்றியடைய முடியும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள்.   

உலக புகழ் பெற்ற Microsoft நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் அவர்கள் software துறையில் உள்ள அனுபவத்தை விட நிர்வாகம் செய்வதில் திறமையானவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நிர்வாகம் செய்வதில் என்றால் அவர் ஒரு கிரேட் administrator.

ஆனால் அவர் தன்னை சுற்றி வைத்துள்ள நபர்கள் software துறையில் பெரிய திறமைசாலிகள். இவருடைய நிர்வாக திறமையும், மற்றவர்களுடைய software திறமையும் சேர்த்து சரியாக பயன் படுத்தி இன்று software துறையில் ராஜாவாக திகழ்கிறார்.

காரணம் சாப்ட்வேர் துறை பற்றிய ஆர்வம் மற்றும் உந்துதல் காரணமாக பொருத்தமான ஒரு தொழிலை தேர்வு செய்து அதில் இன்று முடி சூடா மன்னராக திகழ்கின்றார்.  இதுதான் அவருக்கு வெற்றி வாய்ப்பை தரும் தொழில் என்று தெரிந்தோ அல்லது தெரியாமலோ கிரகங்கள் உணர்த்திய உள்ளுணர்வு மூலம் உணர்த்திருக்கலாம். சாப்ட்வேர் துறையை தவிர வேறு எந்த துறையில் சென்று இருந்தாலும் அவர் இந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பை பெற்று இருப்பாரா என்பது சந்தேகமே.  

ஜோதிட ரீதியாக இதற்க்கு என்ன பதில்?

கிரகங்கள் மனித வாழ்க்கையின் சுக துக்கங்களை அவர் அவர் பிறந்த நேரத்தில் அமைந்த கிரக நிலைகள் மற்றும் கிரகங்களின் குணாதிசயங்களின் அடிப்படையில் முடிவு செய்கின்றன. எல்லா கிரகங்களும் நன்மை செய்யும் என்று கூற முடியாது. சில கிரகங்கள் அதனுடைய இயல்புக்கு ஏற்ப நன்மை மட்டும் செய்யும். சில கிரகங்கள் அதனுடைய இயல்புக்கு ஏற்ப தீய பலன்களை மட்டுமே கொடுக்கும்.

அந்த விதத்தில் மனிதர்களுடைய வாழ்க்கையின் முக்கிய அம்சங்களான திருமணம், தொழில் மற்றும் இதர அம்சங்களை ஒருவர் பிறந்த போது அமைந்த கிரகங்களின் அடிப்படையில் நன்மையோ அல்லது தீமையோ செய்கின்றன.

ஒருவர் நன்மை செய்யும் கிரகங்களின் அடிப்படையில் சார்ந்து செல்லும்போது அவருக்கு வெற்றிகள் குவிகின்றன.

அதுபோன்றுதான் ஒருவர் தொழில் செய்து வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும்போது அவருக்கு பொருத்தமான தொழில் எது என்பதை அவர் பிறக்கும்போது அமைந்த கிரகங்களின் நிலை கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

எல்லோருக்கும் ஏதாவது ஒரு கிரகம் நன்மை செய்யும் அமைப்பில் இருக்கும். அந்த கிரகமானது இருக்கும் இடம், சேர்ந்துள்ள அமைப்பு, பார்வை பெரும் அமைப்பு போன்றவற்றை கொண்டு அந்த தொழிலில் ஈடுபடும்போது அதில் வெற்றியடையலாம் என்பதில் சந்தேகம் இல்லை. 
அந்த தொழில்தான் அவருக்கு வெற்றியை தரும் தொழில் என்று கூறலாம்.                                

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள