திருமண தாமத்திற்கு தோஷங்கள் ஒரு காரணமா?

திருமணம் என்பது பொதுவாக ஆண்களுக்கு 25 வயதுக்குள் நடக்க வேண்டும். பெண்களாக இருந்தால் 21 வயதுக்குள் நடக்க வேண்டும். இந்த வயதுக்குள் திருமணம் நடைபெறும் போது பின்னாளில் இவர்கள் ஓய்வு எடுக்க வேண்டிய வயதில் பிள்ளைகள் தலையெடுத்து அல்லது சற்று உடல் நலம் நன்றாக இருக்கும்போதே பிள்ளைகளால் பயன் பெறலாம். இவர்களுக்கு 50 வயதாகி ஓரளவு நல்ல உடல் நிலை இருக்கும்போதே பிள்ளைகள் சம்பாரிக்கும் திறன் பெற்று குடும்பத்தை நிர்வகிக்கும் நிலைக்கு வந்து விடுவார்கள்.

ஆனால் எல்லோருக்கும் இது போன்று அதாவது 25 வயதுக்குள் திருமணம் நடைபெறுமா என்பது சற்று சந்தேகம்தான். ஒருவருக்கு திருமணம் கால தாமதம்  ஆவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவை குடும்ப சூழ்நிலைகள் காரணமாக கூட இருக்கலாம். வசதியின்மை, அக்கா,  தங்கைகளுக்கு திருமணம் ஆகாமல் இருத்தல், வேலையின்மை, தாய், தந்தையரின் உடல் நிலை, பொருளாதார சூழ்நிலை போன்ற இன்னும் பல காரணங்களை கூறலாம்.

ஒரு மனிதனுடைய இன்றைய வாழ்க்கை என்பதே கடந்த பிறவியின் சுக துக்கங்களின் அடிப்படையில்தான். இதை தவிர இந்த பிறவியில் செய்த நன்மை தீமைகளும் அடங்கும்.

பேங்க் அக்கௌன்ட் பாஸ் புக் போல. செய்யும் புண்ணியங்கள் வரவு வைக்க படும். செய்யும் பாவங்கள் செலவில் காட்டப்படும். பாஸ் புக்கில் இருக்கும் இருப்பை போன்றதுதான் மனித வாழ்க்கையின் மகிழ்ச்சியும் துன்பமும். அதிக இருப்பு இருந்தால் அதிக மகிழ்ச்சி. குறைவான இருப்பு இருந்தால் குறைவான மகிழ்ச்சி. இருப்பு குறைவாக அல்லது இல்லாமலே இருந்தால் மகிழ்ச்சி என்பது இல்லாமை அல்லது துன்பம்.


இதில் பெற்றோரின் நன்மை தீமைகளும் அடங்கும். ஏனென்றால் அவர்கள் செய்யும் நன்மை தீமைகள் அவர்களுடைய குடும்பத்தாரையும் பாதிக்கும்.

ஒருவர் தான் செய்த நன்மை தீமைகளும், அவர்களுடைய முன்னோர்கள் செய்த நன்மை தீமைகளும் தோஷங்கள் என்ற பெயரில் ஒருவருடைய வாழ்க்கையில் புகுந்து விளையாடும். அவற்றில் ஒன்றுதான் இந்த திருமணம்.

ஒருவருக்கு திருமணத்திற்குறிய அத்தனை தகுதிகள் இருந்தும் அதாவது நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல தொழில், நல்ல வசதிகள் இருந்தும் திருமணம் மட்டும் தாமதமாகி கொண்டே செல்லும்.

அதற்க்கு முக்கிய காரணம் தோஷங்கள் தான். தோஷங்கள் என்பது அவர் அவர் செய்யும் நன்மை தீமைகளின் அடிப்படையில் இருக்கும். தீமைகளை தெரிந்து செய்தாலும் தோஷந்தான். மற்றவர்கள் செய்யும் தீமைக்கு பலி கடா ஆனாலும் தோஷம்தான். உதாரனத்திற்க்கு தாய் தந்தையர் செய்யும் பாவ காரியங்களுக்கு        

அதேபோன்று ஒருவருக்கு திருமண தடை உண்டாவதற்கு காரணம் வசதியின்மை, அக்கா, தங்கைகளுக்கு திருமணம் ஆகாமல் இருத்தல், வேலையின்மை, தாய், தந்தையரின் உடல் நிலை, பொருளாதார சூழ்நிலை போன்ற இன்னும் பல காரணங்களை கூறலாம். இதுவும் கூட ஒருவர் தான் அல்லது பெற்றோர்கள் செய்யும் தீமைகளின் அடிப்படையில் உருவாகும் தோசத்தின் காரணமாக கூட இருக்கலாம்.

சரி இதுபோன்று தோஷம் உள்ளவர்களுக்கு திருமணமே ஆகாதா? அப்படி கூற முடியாது. திருமண தோசத்திற்க்கு பல காரணங்கள் உண்டு. என்ன தோஷத்தினால் ஒருவருக்கு திருமண தடை உண்டாகிறது என்பதை ஒருவருடைய பிறவி ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்களின் அடிப்படையில் கண்டு பிடித்து உரிய வழிமுறைகள் செய்யும் போது அங்கு தோஷ நிவர்த்தி ஆகின்றது. எல்லோருக்கும் எல்லா தோஷமும் இருக்கும் என்று கூறமுடியாது.

ஒருவருக்கு முன்னோர்களின் சாபம் இருக்கலாம், ஒருவருக்கு சர்ப்ப தோஷம் இருக்கலாம், ஒருவருக்கு களத்திர தோஷம் இருக்கலாம், ஒருவருக்கு சூரிய தோஷம் இருக்கலாம். இது போன்று இன்னும் வேறு சில தோஷங்களும் இருக்கலாம்.


திருமண தாமதத்திற்கு உரிய காரணமான தோஷத்தை அறிந்து அதற்குரிய வழிமுறைகளை மேற்கொண்டு செய்யும்போது தடை பட்டிருக்கும் திருமணம் விரைவில் நடக்கும் என்று கூறலாம். தோஷ நிவர்த்திகளை மேற்கொள்ளும்போது பிற்காலத்தில் ஏற்படக்கூடிய கஷ்டங்களும் குறைந்து நல்ல சந்தோசமான வாழ்க்கையும் அமையும் என்றும் நம்பலாம்.

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள