திருமணம் சொந்தத்தில் யாருக்கு அமையும்?

சொந்தத்தில் திருமணம் அமையும் அமைப்பு யாருக்கு உண்டு?

தொழில் மற்றும் வேலை காரணமாக வெளியூர், வெளிநாடு என்று வாழும் சூழ்நிலை இன்று சர்வ சாதாரனமாகிவிட்டது. தகவல் தொழில் நுட்ப சாதனங்களான செல்போன், இன்டர்நெட் போன்றவை மக்களிடையே பிரபல்யமாகி விட்ட சூழ்நிலையில், யாரையும் அவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நொடி கணக்கில் தொடர்பு கொண்டு விடலாம் என்ற சூழ்நிலையில் சொந்த ஊர், நாட்டை விட்டு பிற ஊர், பிற நாடு என்று வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள் ஏராளம்.

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் மக்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட ஊரில் அல்லது பகுதியில் அவர்களுடைய சொந்தம், சுற்றம் சூழ வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். அந்த பகுதியிலேயே ஏதாவது ஒரு வேலைக்கு சென்று வருமானத்தை ஈட்டி வந்தனர் அல்லது அந்த பகுதியிலேயே தொழிலை செய்து வந்தனர். விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள் தாங்கள் இருக்கும் கிராமத்திலேயே வயல் வேலை செய்து வந்தனர். அதனால் பிற இடங்களுக்கு குடி பெயர வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று.

திருமண வயதில் இருக்கும் தங்கள் பெண்ணுக்கோ, பையனுக்கோ அறிமுகம் இல்லாத ஊரில் அல்லது குடும்பத்தில் திருமணம் செய்ய மாட்டார்கள்.
சொந்தங்கள் எல்லாம் அக்கம் பக்கத்தில் இருக்கும்போது அதை தவிர்த்து வெளியூரில் பெண் எடுக்க மாட்டார்கள். அப்படி எடுக்கும் பட்சத்தில் தாய் வழி  உறவு, தந்தை வழி  உறவு, மாமன் வழி உறவு  என்று வெளியூரில் இருந்தால் அந்த பெண்ணின் குடும்பம், பையனின் குடும்பம் போன்றவைகளை தீர விசாரித்துதான் பெண்ணையோ பையனையோ திருமணம் செய்து வைப்பார்.

அதே போன்று உள்ளூராக இருந்தால் பிரச்சனையே இல்லை. அனைவருக்கும் நன்கு தெரிந்தவர்கள் அல்லது தாய் வழி , தந்தை வழி, மாமன் வழி சொந்தத்தில் உள்ளவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் குணாதிசயம் தெரியும். தைரியமாக பெண்ணையோ பையனையோ திருமணம் செய்து வைப்பார்கள்.

சொந்தத்தில் திருமணம் செய்து வைப்பதை பெரிதும் விரும்புவதற்கு காரணம் சொத்து பிரியாது. சொந்தங்களுக்குலேயே சொத்தை அனுபவிப்பார்கள். அதனால் முகம் தெரியாதவர்களிடம் சொத்து பிரிவதை காட்டிலும் மாமன்
வழி, அத்தை வழியில் சொத்து சேர்வதையே  விரும்புவார்கள்.

சொந்தங்களில் திருமணம் செய்யும்போது திருமணத்திற்கு முன்பு பையனுடைய கேரக்டர் பெண்ணினுடைய கேரக்டர் பற்றி நன்கு தெரிய வாய்ப்பு உள்ளது. நல்ல பழக்கம் உள்ளவர்களா, வேறு ஏதும் திருமணத்திற்கு முன்பு தவறான தொடர்பு இருந்ததா என்பது பற்றி தெரிய வாய்ப்பிருந்தது. அதனால் சொந்தங்களில் திருமணம் செய்வதை பெரிதும் விரும்புவர்.

இது போன்று திருமணமாக போகும் ஒரு பெண் மற்றும் ஒரு ஆணை பற்றி தீர விசாரித்து திருமணம் செய்யும்போது பிற்காலத்தில் திருமண முறிவு, விவாகரத்து, காவல் நிலையங்களில் வழக்கு,  கணவன் மனைவிகிடையே ஒற்றுமை இல்லாமை போன்றவை தவிர்க்க படுகிறது. நீண்ட நாட்கள் ஒற்றுமையாக குடும்பம் நடத்துவதற்கு வாய்ப்பாகிறது.

சரி. ஒருவருக்கு ஜோதிட ரீதியாக திருமணம் சொந்தத்தில் அமையுமா என்பதை எப்படி அறிவது?

கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறவுமுறையை குறிக்கும். அந்த வகையில் ஒருவருக்கு தந்தை வழியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தால் களத்திரகாரகன், பிதாகாருகன் என்று கூறப்படும் கிரகத்துடன் சம்பந்தப்பட்டு, சேர்க்கை, பார்வை, இடம் போன்ற வகையில் பாதிக்கபடாமல் இருந்தால் அந்த பெண்ணுக்கோ பையனுக்கோ தந்தை வழி  உறவில் திருமணம் அமையும் என்று கூறலாம்

அந்த வகையில் ஒருவருக்கு தாய் வழியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தால் களத்திரகாரகன், மாதாகருகன்  என்று கூறப்படும் கிரகத்துடன் சம்பந்தப்பட்டு, சேர்க்கை, பார்வை, இடம் போன்ற வகையில் பாதிக்கபடாமல் இருந்தால் அந்த பெண்ணுக்கோ பையனுக்கோ தாய் வழி  உறவில் திருமணம் அமையும் என்று கூறலாம்.
       
 அந்த வகையில் ஒருவருக்கு மாமன் வழியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தால் களத்திரகாரகன், வித்யாகாருகன்  என்று கூறப்படும் கிரகத்துடன் சம்பந்தப்பட்டு, சேர்க்கை, பார்வை, இடம் போன்ற வகையில் பாதிக்கபடாமல் இருந்தால் அந்த பெண்ணுக்கோ பையனுக்கோ மாமன் வழி  உறவில் திருமணம் அமையும் என்று கூறலாம்.  
         
அந்த வகையில் ஒருவருக்கு சொந்தங்கள் இல்லாது, தூரத்து சொந்தமோ அல்லது காதல் திருமணம், கலப்பு திருமணம் போன்றவை அமைய களத்திர ஸ்தானம், களத்திரகாரகன், கர்ம காரகன், பாம்பு கிரகங்கள்   என்று கூறப்படும் கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு இருந்தால் அந்த பெண்ணுக்கோ பையனுக்கோ தூரத்து சொந்தத்தில் அல்லது காதல் திருமணம், கலப்பு திருமணம் அமையும் என்றும்  கூறலாம்.  
    
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள