அரசாங்க வேலை யாருக்கு அமையும்?

அரசாங்க வேலை யாருக்கு அமையும்?

அரசு வேலை வாய்ப்புகள் இன்று ஏராளமாக உள்ளது. தினசரி பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்கள் இதற்க்கு சாட்சி. மத்திய அரசு வேலை வாய்ப்புகள், மாநில அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் வங்கி பணிக்கு என்று ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள்.

தகுதியுள்ளவர்கள் விளம்பரத்தை பார்த்து தங்களது கல்வி தகுதிக்கு ஏற்ப விண்ணப்பித்து கொண்டு இருக்கின்றனர். பெரும்பாலான பதவிகள் போட்டி தேர்வு கொண்டு நிரப்ப படுகின்றன.

ஆயிரக்கணக்கான காலி இடங்களுக்கு லட்சகணக்கான விண்ணப்பங்கள் அனுப்ப படுகின்றன.

ஆனால் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று, அதன் பின் நேர்முக தேர்வில் தேர்ந்தெடுக்க படுபவர்கள் ஆயிரக்கணக்கில் மட்டுமே.

சரி. அரசு தேர்வில் நீந்தி கடல் ஏறி நேர்முக தேர்விலும் ஜெயித்து வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும் ஜோதிட ரீதியாக என்ன பதில்?

தேர்வு எழுதி, நேர்முக தேர்வில் வெற்றி பெற்று வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு திறமை, அறிவு போன்றவை இருந்தால் கூட கிரகங்களின் அனுசரணை இருந்தால் நிச்சயமாக அரசு வேலை கிடைக்கும்.

ஒருவர் பிறவி ஜாதகத்தில் அரசு வேலைக்கு வகை செய்யும் அமைப்புகளான தசம ஸ்தானம், அங்காரகன், ஆதித்யன், தசம ஸ்தானாதிபதி போன்றோர் நல்ல நிலைமையில், பார்வையில், கூட்டணியில், மறைவில் இடம் பெறாது இருந்தால், திறமையும் தகுதியும் இருந்தால், நிச்சயம் அரசாங்க வேலை கிடைக்கும்.
   
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள