வருங்கால மனைவி எப்படி இருப்பார்?

பொதுவாக தனக்கு திருமணமாகி மனைவியாக வரப்போகும் பெண் எப்பேர்பட்ட குணவதியாக இருப்பார் என்று அறிந்து கொள்வதில் பொதுவாக அனைவருக்குமே ஒரு ஆவல் இருக்கும். ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.

இதுகுறித்து ஒரு பழைய திரைப்பட பாடல்களின் வரி எனக்கு நினைவுக்கு வருகிறது.

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" .

அதே போன்று திருமணமாகி கணவன் வீட்டுக்கு செல்லும் தங்கைக்கு ஒரு அண்ணன் அறிவுரை சொல்லும் பாடல்.

"புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் - அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

மாமனாரை மாமியாளை மதிக்கணும் - உன்னை
மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக்கோழி கூவையிலே முழிக்கணும் குளிச்சு
சாணம் தெளிச்சு கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்
புருஷன் வீட்டில் வாழ்ப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே
கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
காணாததை கண்டேனுன்னு சொல்லாதே - இந்த
அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே - நம்ம
அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

புருஷன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான் - ஓடும்
பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான் -
அரசன் நடுக்க நீதி சொன்னவ பொண்ணுதான் - அவுங்க
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்றேன் கேளு முன்னே

புருஷன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல மகிழ்ந்து
கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
கொறைஞ்சிடாம நெறைஞ்சு கிட்டு ஆஆஆஆஆ
  
மக்களைப் பெத்து மனையப் பெத்து மக்க வயத்திலே பேரனைப் பெத்து
பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து நோயில்லாம நொடியில்லாம
நுறூ வயசு வாழப்போற தங்கச்சி- நமக்கு
சாமி துணை இருக்கு சாமி துணை இருக்கு தங்கச்சி"

என்ன அருமையான பாடல்.

ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இது சாத்தியமாகுமா?

சற்று கஷ்டம்தான். காரணம் கணவன் மனைவியின்டையே சரியான புரிந்துணர்வு இல்லாமை தான் காரணம்.

கணவனை மனைவி மதிக்க வேண்டும். மனைவியை கணவன் மதிக்கவேண்டும்.

என்னை நம்பி வந்துவிட்டாய் அதனால் நான் சொல்வது தவறாக இருந்தாலும் சரி என்றுதான் நீ சொல்ல வேண்டும் என்று கணவன்
மனைவியிடம் எதிர்பார்க்ககூடாது.

என்னை விட்டால் உன்னுடன் யார் குடும்பம் நடத்துவார்கள் அதனால் நான் சொல்லும்படிதான் நீ கேட்க வேண்டும் என்று மனைவி கணவனிடம் எதிர்பார்க்க கூடாது.

ஆனால் ஒரு சில குடும்பத்தில் பார்த்தால் கணவனை வேலைக்காரர்களை போல நடத்தும் மனைவியர் இருக்கின்றனர். தன்னுடைய சொந்தத்தை தூக்கி வைத்து கொண்டு ஆடுவதும் கணவன் சொந்தகாரர்களை நெருங்க விடாமல் செய்வதும் போன்ற குணமுடைய கொடுமைக்கார மனைவிகளும் இருக்கின்றனர். மாமனார் மாமியார் என்றாலே மிக பெரிய  விரோதி போல பாவித்து அவர்களை வீட்டை விட்டு துரத்தும் எத்தனையோ மருமகள்கள் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒன்றை மறந்து விடுகிறார்கள்.
தனக்கும் ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கும் ஒரு கல்யாணம் ஆகும். அவனுக்கும் ஒரு மனைவி வருவாள். நாம் எப்படியோ அப்படிதான் நமக்கும் என்பதை மறந்து விடுகின்றனர். "முன் ஏர் எப்படியோ அதே போல்தான் பின் ஏரும்". நாமும் பிற்காலத்தில் நம்முடைய மருமகள்களால் துரத்தி விடப்படுவோம் என்பதை மறந்து விடுகின்றனர்.

பொதுவாக ஒருவருக்கு வரப்போகும் மனைவி தேவை படும் நேரத்தில் கணவனுக்கு நல்ல ஆலோசனை வழங்குபவராகவும், தாம்பத்தியத்தில் குறை வைக்காதவராகவும்(ஏன் என்றால் இந்த விசயத்தில் நிறைய ஆண்கள் திசை மாறி சென்று விடுகின்றனர்) கணவன் மனைவி இருவீட்டு சொந்தங்களையும்
அனுசரித்து செல்பவராகவும், குடும்ப நிர்வாகத்தில் திறமையானவராகவும்,
குடும்ப பணிகளை கணவனுக்கு ஒத்தாசையாக இருப்பவராகவும், மாமனார் மாமியாரை தாய் தந்தை போல் மதிப்பவராகவும், குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டியாகவும் போன்ற நல்ல குணங்களை உள்ள பெண்களைதான் மனைவியாக வர வேண்டும் என எல்லா ஆண்களும் எதிர்பார்ப்பர்.

ஆனால் ஜோதிட ரீதியாக ஒருவருக்கு வரப்போகும் மனைவி எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை கணிக்க முடியுமா?

கணிக்கலாம். ஒருவர் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் அவருடைய காலத்திற ஸ்தானத்தையும், அந்த ஸ்தானத்தில் அமைந்துள்ள கிரகங்களின்
தன்மை அடிப்படையிலும், களத்திர ஸ்தானத்தை, காலத்திற ஸ்தானம் பார்வையிடும் அமைப்பை வைத்தும் ஒருவருக்கு அமைய போகும் மனைவியின் குணாதிசயத்தை தெரிந்து கொள்ளலாம்.
       
         
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள