அதிர்ஷ்டதிர்க்கும் வெற்றிக்கும் வீட்டின் நுழை வாசல் எந்த திசையில் இருக்கவேண்டும்?

ஒருவர் வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் வெற்றியும் அடைய வேண்டுமானால் வீட்டின் நுழை வாசல் சாதகமான திசையில் இருக்கவேண்டும். நடைமுறையில் பார்க்கும் பொது சிலர் கடுமையாக உழைப்பார்கள். நல்ல திறமைசாலியாக இருப்பார்கள். நன்றாக சம்பாதிப்பார்கள். ஆனால் எந்த பணமும் மிச்சப்படாது. சம்பாதிக்கும் பணம் எல்லாம் போகும் திசை தெரியாது.

தனக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அடிக்கடி மருத்துவ செலவு, உடலில் கோளாறு, மருத்துவ சிகிச்சை பெற்றாலும் சரியாகத நிலைமை, தேவை இல்லாத செலவுகள், மன குழப்பம், உடலாலும் மனதாலும் வேதனை, நிம்மதி இல்லாமை போன்ற இன்னும் பல தொந்தரவுகள்.

இவை அனைத்திற்கும் காரணங்கள் அவர்களுடைய தலை வாசல் இருக்கும் திசையை பொறுத்து.

நான் ஏற்கனவே இந்த வலை பதிவில் பல கட்டுரைகளில் எழுதி உள்ளேன். மனிதர்கள் அனைவரும் கிரகத்தின் கட்டுபாட்டுக்குள் உள்ளவர்கள். அவர்களுடைய நல்லதும் கெட்டதும் அவர்கள் பிறக்கும்போது நிலை கொண்டிருந்த கிரகங்களின் அடிப்படையில் என்று.

ஒவ்வொரு மனிதர்களும் 12 ராசிக்குள் அடக்கம். இந்த 12 ராசிகளையும் 9 கிரகங்கள் அடக்கி ஆளுகின்றன. 9 கிரகங்களுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் தொடர்பு உண்டு. எனவே ஒவ்வொரு மனிதரும் ராசி, நட்சத்திரம் இவைகளுக்குள் அடக்கம்.

ராசிகளும், நட்சத்திரங்களும் 4 திசைகளுக்கும் தொடர்பு உண்டு. ஒவ்வொரு திசையும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கும், நட்சதிரத்திர்க்கும் நன்மை செய்யும். எனவே ஒரு குறிப்பிட்ட ராசியையும், நட்சத்திரத்தையும் கொண்டவர் அவருக்கு சாதகமான திசை உள்ள தலை வாசல் உள்ள வீட்டில் குடியிருக்கும் போது அவர் வாழ்க்கையின்  அணைத்து வசதிகளையும் பெற்று, நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், பண வசதியுடனும் சந்தோசமாக வாழ்கின்றனர்.

அதனால்தான் சிலர் ஒரு சில வீட்டில் குடியிருக்கும்போது சாதகமான பலன்கள் இல்லாதபோது வேறு வீட்டுக்கு குடியேறுகிறார்கள்.

எனவே நமக்கு சாதகமான திசையில் தலைவாசல்  உள்ள வீட்டில் குடியிருந்து வெற்றியும் அதிர்ஷ்டத்தையும் பெறுவோமே.
   
Name
Email
Date of Birth:DD/MM/Year
Birth Place City/State/Country:
Birth Time AM/PM:
Presently Living:City/State/Country
Your Question(Type in the whitebox)