குல தெய்வம் தெரியாதவர்கள் யாரை குலதெய்வமாக வணங்க வேண்டும்?

பிரார்த்தனைகளில் மிகவும் சக்தி வாய்ந்த பிரார்த்தனை குல தெய்வ பிரார்த்தனை ஆகும்.

எத்தனயோ கோயில்களுக்கு சென்று வந்தாலும் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபட வில்லை என்றால் ஆயிரம் கோயில்களுக்கு சென்று வந்தாலும் அதில் புண்ணியம் இல்லை.

பொதுவாக குல தெய்வம் யார் குல தெய்வ கோயில் எங்கு உள்ளது என்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்களுடைய இளைய தலை முறையினருக்கு கண்டிப்பாக தெரிய படுத்த வேண்டும்.

நான் சிறு வயதாக இருந்த காலத்திலேயே என்னுடைய பாட்டி, அப்பா என்னை குல தெய்வம் கோயிலுக்கு கூட்டி சென்றதும் வருடம் ஒருமுறை எங்களுடைய உறவினர்கள் அனைவரும் குல தெய்வம் கோயிலில் கூடி பொங்கல் இட்டு வழிபட்டதை இன்று பல வருடங்கள் கடந்தாலும் பசுமையாக நினைவில் நிற்கின்றது.

என்னுடைய முன்னோர்கள் என்னுடைய குல தெய்வத்தையும் குல தெய்வம் இருக்கும் இடத்தையும் சரியாக எங்களுக்கு அடையாளம் காட்டியதால் நான் என்னுடைய பிள்ளைகளுக்கு குல தெய்வத்தை சரியாக அடையாளம் காட்டி விட்டேன்.

ஆனால் எனக்கு வருகின்ற அதிக பட்ச email கள் குல தெய்வம் பற்றியதுதான்.
இன்றும் நிறைய பேருக்கு அவர்களுடைய குலதெய்வம் யார் என்பதையும் குல தெய்வ கோயில் எங்கிருக்கிறது என்பது பற்றியும்.

அவர்களுடைய முன்னோர்கள் சரிவர தெரியபடுதாதால் குல தெய்வம் யார் என்பதும் குல தெய்வ கோயில் எங்கிருக்கிறது என்பதும் அவர்களுக்கு ஒரு புதிராக இருக்கிறது.

இது போன்று குல தெய்வம் தெரியாதவர்கள் குல தெய்வமாக நினைத்து யாரை வணங்குவது?

நிச்சயம் குல தெய்வம் தெரியாதவர்களுக்கு அவர்கள் எந்த தெய்வத்தை குல தெய்வமாக நினைத்து வணங்கலாம் என்பதற்கு சில யுக்திகள் ஜாதக ரீதியாக
உள்ளது. அந்த யுக்திகளை பயன்படுத்தி ஜாதகத்தில் உள்ள மற்ற கிரக நிலைகளையும் சரியாக கணித்து எந்த தெய்வத்தை குல தெய்வமாக வணங்கலாம் என்பதற்கு வழி இருக்கிறது.

அந்த தெய்வங்களை குல தெய்வமாக நினைத்து வழிபடலாமா?

குல தெய்வத்தை வணங்கினால் என்ன பலன் உண்டோ அந்த பலன் அந்த தெய்வங்களை வணங்கினால் கிடைக்குமா?

நிச்சயமாக பலன் கிடைக்கும்.

எப்போது?

ஜாதகதினை ஆராய்ச்சி செய்து துல்லியமாக கிரக நிலைகளையும் ஆராய்ந்து
எந்த தெய்வத்தினை குல தெய்வமாக வணங்கலாம் என்பதை தெரிந்து கொண்டு சில வழி முறைகளின் மூலம் உண்மையான குல தெய்வத்தை வழி  பட்டால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலனை பெருமளவு  பெறலாம்.
      
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள