உங்கள் நடை முறை வாழ்க்கையில் சிலரை பார்த்து இருப்பீர்கள். திருமணம் ஆகும் முன்பு வரை வாழ்க்கையின் அன்றாட தேவைகளுக்கு அன்றாடம் போராடி போராடி வாழ்க்கை நடத்தி கொண்டு இருப்பார்கள்.
உடனேயே வீட்டில் உள்ள பெரியவர்கள் என்ன சொல்வார்கள். காலம் பூராவும் கஷ்டபட்டு கொண்டு இருக்கிறான். ஒரு கல்யாணத்தை பண்ணி வைத்தால் அவள் மூலமாகவாது யோகம் கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்று கூறுவார்கள்.
உடனேயே திருமணத்திருக்கும் ஏற்பாடு செய்து விடுவார்கள். சொல்லி வைத்தார்போல் திருமணம் ஆனவுடனேயே அந்த ஆணுக்கு ஏதாவது ஒரு வேலை அமையும். ஆரம்பத்தில் சம்பளத்துக்கு வேலை செய்பவர் இவருடைய நடத்தையை பார்த்து விட்டு அந்த நிறுவன முதலாளி ஒரு பொறுப்பான வேலையினை தருவார். அதிலும் இவருடைய பொறுப்பான வேலையை பார்த்துவிட்டு இவரை ஒரு working partner ஆக சேர்த்துக்கொண்டு வரும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை இவருக்கு கொடுத்து வருவார்.
அதற்க்கு அப்புறம் அவருடைய நிலைமையே மாறி வீடு, வாசல், வாகனம் என்று வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருவார்.
ஊரில் என்ன பேசி கொள்வார்கள்? பார்யா சும்மா ஊரை சுத்திக்கிட்டு இருந்தான், ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சாங்க பொண்டாட்டி வந்த யோகம்
இவனை உச்சிக்கு தூக்கிட்டு போய்டுச்சு என்று பேச ஆரம்பித்து விடுவார்கள்.
ஆம் இந்த நபரை பொறுத்தவரை இவருக்கு வாய்த்த மனைவியின் யோகம்தான்.
ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் மத்ருகாருகன் அமர்ந்து, தனஸ்தானத்தில் தேவகுரு அமைந்து, அர்தாஷ்டம ஸ்தானத்தில் அசுர குரு அமர்ந்து பாபர்களின் சேர்க்கை பார்வை இன்றி இருந்தால் அந்த ஜாதகருக்கு
மனைவியின் மூலம் யோகம் ஏற்பட்டு வாழ்க்கையின் அணைத்து வசதி வாய்ப்புகளையும் அமைய பெற்ற அதிர்ஷ்டசாளியாகிவிடுகிறார்