யாருக்கு தொழிலில் வெற்றி கிடைக்கும்?

தொழில் செய்யும் அனைவருமே தங்கள் ஈடுபட்டிருக்கும் தொழிலில் வெற்றி அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் தொழில் செய்து வருவார்கள். ஆனால் எல்லோருக்கும் தாங்கள் செய்யும் தொழிலில் வெற்றி கிடைக்குமா?

தொழில் செய்பவர்கள் அனைவரும் தாங்கள் செய்யும் தொழிலில் வெற்றி அடைய முடியுமா?

தொழிலில் வெற்றி கிடைப்பது என்பது அவர்கள் ஈடுபட்டுள்ள தொழிலைபொறுத்துதான் அமையும். அந்த தொழிலில் அவர்களுக்குள்ள ஈடுபாடு, அனுபவம், நுணுக்கங்கள் இவற்றை வைத்துதான் அவர்களுக்கு வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்பதை பற்றி கூற முடியும்.

ஒருவர் தான் செய்யும் தொழிலில் அபரிதமான ஈடுபாடு, அனுபவம், நுணுக்கங்கள் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்  என்றால் தனக்கு வெற்றி தரும் தொழிலை தெரிந்தோ தெரியாமலோ தேர்ந்தெடுத்து செய்கிறார் என்பதுதான் உண்மை.

ஆனால் சிலருக்கு இந்த நிலைமை மாறி தொழில் நஷ்டம், தொழில் சரியாக நடக்காமை போன்றவைகளுக்கு காரணம் அவர் தனக்குரிய தனக்கு வெற்றி தரும் தொழிலை சரியாக தேர்ந்தெடுக்காமல் ஏதோ ஒரு தொழில் செய்யவேண்டும் என்ற நோக்கில் நஷ்டபடுதிகொண்டு  இருக்கிறார் என்றுதான் அர்த்தம்.

ஜாதகரீதியாக ஒருவர் சரியான தொழிலை தேர்ந்தெடுக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று முதலாம் அதிபதி கர்ம ஸ்தானத்தில் இருந்தால் அவை சுப கிரகங்களின் பார்வையில் சம்பந்தப்பட்டு இருந்தால் அதுபோன்ற ஜாதகர் அந்த தொழிலை தேர்ந்தெடுத்து  செய்யும்போது
அவருக்கு அபரிதமான லாபமும் வெற்றியும் கிடைக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.    
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள