பிரதோஷ வழிபாட்டின் சிறப்புகள்.

பிரதோஷ வழிபாடு என்பது சிவாலயங்களில் நடக்கும் ஒரு முக்கியமான வழிபாடு ஆகும். பொதுவாக ஒரு மாதத்தில் பிரதோஷ வழிபாடு இரு முறை வரும்.

பிரதோஷ வழிபாட்டுக்கு சிறந்த  நேரம் என்பது மாலை 4-30 மணியிலிருந்து 6 மணி வரையிலாகும். இந்த நேரங்களில் சித்தர்களும் முனிவர்களும் ஆலயத்தில் பிரவேசிப்பார்கள் என்பது ஐதீகம்.

பிரதோஷ நேரத்தில் ஒருவர் சென்று வழிபடும்போது அவருடைய குறைகள் பிரார்த்தனைகள் நிறைவேற்ற படுவதாக நம்பிக்கை மக்களிடையே பல கால மாக இருந்து வருகிறது.

சிவன் கோயில்களில் உள்ள நந்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பிரதோஷ வழிபாடுகள் மிக விமரிசையாக செய்யபடுகின்றன.

நீண்டநாட்களாக நிறைவேற்றபடாத பிரார்த்தனைகள் தொடர்ந்து பல பிரதோஷ வழிபாடுகள் மூலம் நிவர்த்தி ஆகின்றன என்று பக்தர்களால் கூறப்படுகிறது.

ஒருமுறை பிரதோஷ தினத்தன்று சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று வழி படுவதர்க்குண்டான பலன்கள் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது.

சனி கிழமையன்று வரும் பிரதோஷ தினத்தன்று வழிபட்டால் ஐந்து வருடங்களுக்கு ஆலயம் சென்றால் என்ன பலன் உண்டோ அந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.