பொதுவாக மேஷ ராசிக்காரர்கள் என சொல்லப்படும் ஆண்களும் பெண்களும்
அவர்களுடைய சந்திரா ராசியின் அடிப்படையில் மேஷ ராசிக்காரர்கள் என கூறப்படுகிறார்கள்.
மேஷ ராசியில் பிறந்தவர்கள் பொதுவாகவே சற்று வீரம், கோபம் நிறைந்தவர்களாகவே இருப்பார். மற்றவர்களை ஆட்சி செய்வதிலும், அதிகாரம் செய்வதிலும், வீர தீர செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பார்.
நிர்வாக திறமையிலும் முதன்மையாக இருப்பார்.
மேஷ ராசிக்காரர்கள் திடிரென்று உணர்சிவச படக்கூடியவர்கள். பின் விளைவை பற்றி கவலை படாதவர்கள். மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கும் மேலே கூறப்பட்டுள்ள ஆண்களுக்கு உண்டான குணாதிசயங்கள் இருக்கும்.
பொறுமை என்பது மேஷ ராசிக்காரர்கள் அகராதியில் கிடையாது. எதிலும் வேகம். எங்கும் வேகம். நினைத்ததை உடனேயே சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு.
ஆனாலும் மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக நேர்மையானவர்கள். பொய் பித்தலாட்டம் என்பது பிடிக்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை அதிகம் உண்டு. நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை
வெகு சுலபமாக கண்டு பிடித்து விடுவார்கள்.
மேலே கூறப்பட்டுள்ள மேஷ ராசி காரர்களை பற்றிய பலன்கள் பொதுவான பலன்கள்.
மேஷ ராசிக்காரர்களுக்குண்டான சரியான பலன்கள். அவர்களுடைய ஜாதக கட்டத்தில் நிலை கொண்டு இருக்கும் கிரகங்களின் நிலையை வைத்துதான் இருக்கும். ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களின் நிலையை வைத்துதான் அவர்களுடைய குணம், குடும்பம், பணம், வீடு, வாகனம், குழந்தைகள், படிப்பு, தாய், தந்தை, நோய், கடன், கணவன், மனைவி, ஆயுள், பூர்வீக சொத்து, தொழில், வேலை, சகோதர, சகோதரிகள், வெளிநாடு பயணம், தாம்பத்திய உறவு போன்ற வேறு பல அம்சங்களை அறிய முடியும்.
இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.