கோயிலில் வழிபாடும் விதம்?

கோயில் என்பது பொதுவாக சக்திகள் பல நிறைந்த இடம். கோபுர கலசங்களில் இருந்து கிரகங்களின் ஈர்ப்பு சக்தியை உள்வாங்கி அதனை கோயில் முழுவதும் வியாபித்திருக்கின்ற சக்தி உடைய இடம் கோயிலாகும். இதை தவிர நம் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ சித்தர்களும் முனிவர்களும் கோயிலினுள் இருந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நம் கண்ணுக்கு தெரிய மாட்டார்கள்.

புராதன அல்லது பழைய கோயில்களாக இருந்தால் ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு சித்தர் இருப்பதாக கூறப்படுகிறது. எந்த கோயில் ஆக இருந்தாலும் அந்த கோயில் வரலாற்றை பார்த்தீர்கள் என்றால் யாராவது ஒரு முனிவர் ஒரு சித்தருக்கு கடவுள் காட்சியாளித்துவிட்டு அந்த கோயில் உருவானதாக வரலாறும் இருக்கும்.   அது மட்டும் அல்லாது  எந்த சித்தர் அல்லது முனிவருக்கு காட்சி கொடுத்தாரோ அந்த சித்தருக்கு அல்லது முனிவருக்கு அதே கோயிலில் தனியாக ஒரு சிலை இருக்கும்.

எனவே கோயிலில் நுழைந்தவுடன் விழுந்து வணங்க வேண்டும் என்றால் கொடி மரத்தின் கீழ்தான் விழுந்து வணங்க வேண்டும். அதை தாண்டி எங்கும் விழுந்து வணங்க கூடாது.

காரணம் நம் கண்ணுக்கு தெரியாத சித்தர்களும், முனிவர்களும் கொடிமரத்தை தாண்டி எங்கு வேண்டுமானாலும் உறைந்து கொண்டு இருப்பார்கள். நாம் மீதி இடங்களில் கீழே விழுந்து வணங்கும்போது
அங்கு உறைந்து கொண்டு இருக்கும் சித்தர்களையும் முனிவர்களையும்
துன்பபடுதுவது போல் ஆகிவிடும்.